சங்கு கல் மண்டபம் ஒன்று சோழர் காலத்திலே உருவாக்கப்பட்டது.
தமிழனின் நலம் கருதிய இராஜராஜசோழன் அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!!
சங்கு கல் மண்டபம் என்பது ஆற்றின் நடுவே சங்கு போன்ற அமைப்புடன் கட்டப்பட்டிருக்கின்ற கல்
மண்டபத்தினைக் குறிப்பதாகும். ஆற்றில் வெள்ளம் வரும் காலங்களில் இரைச்சல் காற்றால் இங்கிருக்கும் சங்கு சத்தமாக ஊதப்படும்.
எனவே வெள்ளம் வருவதை கரையோர மக்கள் அறிந்து கொள்வார்கள்.
இந்த மண்டபங்கள் தமிழர்களின் நீர் மேலாண்மையை உலகமே அறியும்.
இதன் அமைப்புகள் :
மூன்று பக்கம் திறந்தவெளியுடனும் தண்ணீர் வரும் எதிர் பக்கம் மட்டும் கல்சுவரால் அமைக்கப்பட்டுள்ளது. அதன் உச்சியில் சங்குபோன்ற அமைப்பு உள்ளது. ஆற்றில் வெள்ளம் வரும்போது அந்த மண்டபத்துக்குள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நீர் மட்டம் உயர்ந்தால், வெள்ளத்தின் இரைச்சலால் காற்று உந்தப்பட்டு அந்த சங்கு மிக சத்தமாக ஊதப்படும். இதனை வெள்ள அபாய அறிவிப்பாக மக்கள் அறிந்து கொள்வர். மக்கள் கோயில் போன்ற மேடான இடங்களுக்குச் சென்று தங்களைப் பாதுகாத்துக் கொள்வர்.
வெள்ளம் மிக அதிகமானால் மண்டபத்தின் சங்கு அமைப்பினை மூழ்கடித்துவிடும். பின்பு வெள்ளம் வடிகின்ற வேளையில் மீண்டும் சங்கு சத்தத்தினை வெள்ளத்தால் ஏற்படுகின்ற காற்று உண்டாக்கும். இம்முறை சங்கின் சத்தம் கேட்டு மக்கள் தங்களின் இருப்பிடத்திற்கு திரும்புவார்கள்.
ஆழ்வார் திருநகரி தாமிரபரணி ஆற்றின் நடுவே மற்றும் காவேரி ஆற்றின் நடுவே தஞ்சாவூர், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றன.
விரிவான விளக்கம் :
ஆற்றின் நடுவே மண்டபங்கள் கட்டியது ஏன்? தமிழனின் அறிவியல் அறிவை உணர்த்தும் பதிவு.
இன்றைக்கு விஞ்ஞானம் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து விட்டது. சுனாமியையும், புயலையும் முன்கூட்டி கணிக்கும் தொழில்நுட்பம் எல்லாம் இன்று வந்து விட்டது. ஆனால் நம் முன்னோர்கள் கூட இதையெல்லாம் அறிவியல் பூர்வமாக கணித்து இருந்தார்கள் என்றால் நம்ப முடிகிறதா? அதற்கு தாமிரபரணி ஆற்றின் மண்டபமே சாட்சி!
தாமிரபரணி ஆற்றின் மையப் பகுதியில் இந்த சங்குகல் மண்டபம் கம்பீரமாக இருக்கும். மூன்று பக்கமும் திறந்த வெளியில், தண்ணீர் வரும் எதிர்திசையில் மட்டும் கல்வைத்து அடைக்கப்பட்டு இருக்கும். அதன் உச்சியில் கோபுரம் போன்ற அமைப்பில் சங்கு போல் தோற்றம் அளிக்கும். அதனாலேயே இதற்கு சங்குகல் மண்டபம் எனப் பெயர் வந்தது.
ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் மட்டம் உயரும் போது, அதில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் தண்ணீர் உயர்ந்தால் வெள்ளத்தின் அழுத்தத்தால் காற்று உந்தப்பட்டு அந்த சங்கு சப்தம் எழுப்பும். இது சுற்றுவட்டார மக்களுக்கான எச்சரிக்கை.
இதனை குறிப்பால் உணர்ந்து ஆற்றை சுற்றி உள்ள மக்கள் உயரமான இடங்களுக்கு சென்று விடுவார்கள். அதேபோல் தண்ணீர் மிக அதிகமானால் இந்த சங்கு அமைப்பையே மூழ்கடித்து விடும். இது உச்சபட்ச எச்சரிக்கை. அதன் பின்னர் தண்ணீர் கொஞ்சம் வடிந்ததும் மீண்டும் சப்தம் கேட்கும்.
அந்த சப்தம் தண்ணீர் குறைய, குறைய குறையும். இன்று இந்த சங்கு கல் மண்டபங்கள் பல கவனிப்பும், பராமரிப்பும் இன்றி காட்சிப் பொருளாக கிடக்கிறது. இதன் பலன் இன்றைய தலைமுறைக்கு தெரியவே இல்லை.
ஆயிரம் சொன்னாலும் நம் தமிழனின் பாரம்பர்யத்தை தாமிரபரணி ஆற்றின் குறுக்கே இருக்கும் இந்த மண்டபங்கள் உணர்த்திக் கொண்டு தான் இருக்கின்றன.
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..