Pages

Saturday, 1 November 2025

இராஜராஜசோழனின் பிறந்தநாள் இன்றையநாள் இல்லை

 





2025 நவம்பர் 1ஆம் தேதி மாமன்னர் இராஜராஜ சோழனின் சதயவிழாவாக இன்றைய நாளில் பிறந்தநாளாக கொண்டாவது தவறு. அவர் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம் வருகின்ற 15ஆம் தேதியே மாமன்னர் இராஜராஜ சோழரின் அவதரித்த திருநாளான்று பிறந்தநாளாகவும் , பெருமங்கள திருநாளாக கொண்டாட வேண்டிய நாள் அன்று. பஞ்சாங்கம் அடிப்படையில் தான் இதை கணிக்க இயலும்.
சிலர் தவறான புரிதலில் 985- 1014 ஆட்சி செய்த ஆண்டுகளை கொண்டு , அவர் அரியணை ஏறியநாளை அதாவது இன்று அவரின் 1040 ஆம் ஆண்டு என சதயவிழாவாக கொண்டாடுகிறார்கள். பிறந்தநாள் என்றால் இது பிழை. பொற்கால ஆட்சியாக பட்டாபிஷேகம் செய்த நாள் இன்றைய நாள் பட்டத்துவிழா என்றால் சரியாக இருக்கும்.
ராஜராஜ சோழன் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர். அவரது ராசி கும்ப ராசி ஆகும். இந்த நட்சத்திரம் ஐப்பசி மாதத்தில் வருவதால், ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று பெருமங்களதிருநாளாகவும் , சதயவிழாவாக கொண்டாடப்படுகிறது. அவர் 
நட்சத்திரம்: சதயம்
ராசி: கும்பம்
பிறந்த மாதம்: ஐப்பசி 
லக்னம் – சிம்மம்.
பிறந்த ஆண்டு கிபி.947 ஆண்டு. வர இருக்கின்ற நவம்பர் 15ஆம் தேதி என்றே அவரின் பிறந்தநாள்.

ஆனால் சிலர் இராஜராஜசோழன் அவர்களுடைய ஆட்சி செய்த ஆண்டுகளையும், அவர் அரியணையில் அமர்ந்த ஆண்டுகளை கொண்டு, அவர் ஆட்சி வந்த தேதியை வைத்து தவறாக புரிந்து கொண்டு பதிவிடுகிறார்கள்.

இராஜராஜசோழன் அவர்களுடைய பிறந்தநாள் என்பது தான் சதய விழா மற்றும் பெருமங்கல விழா என்னும் பிறந்தநாள் விழா. பொற்கால ஆட்சியை வழங்க அவர் அரியணையில் பட்டாபிஷேகம் செய்து மன்னராக நியமதித்த நாள் தான் இன்றைய நாள். 

 இராஜராஜசோழன் பிறந்த ஆண்டு கிபி 947 முதல் அவர் இறந்த ஆண்டு கிபி 1014. இன்றுவரை உயிருடன் இருந்திருந்தால் அவருக்கு, வயது 1078 ஆண்டு இருக்கும். சதய விழா என்பது பிறந்தநாளை குறிக்கும் என்பதால் தான் நான் ஆதாரத்துடன் நிரூபிக்கிறேன். 

பிறந்த ஆண்டு 947 - இன்றுவரை உயிருடன் இருந்தால் 2025 = அவருடைய வயது 1077.

ஆனால் சிலர் தவறாக கணக்கிடும் ஆண்டுகளையும் கூறுகிறேன்.

இராஜராஜசோழன் அவர்கள் ஆட்சி செய்த ஆண்டும், அரியணையில் அமர்ந்த ஆண்டும் கிபி 985 அவர் இறந்த ஆண்டு கிபி.1014. 

985-1014 =  1040 ஆம் பிறந்தநாள் என்று சதயவிழாவை தவறாக சித்தரித்து நாட்களை மாற்றுகின்றனர். ஆனால் சரியா???இதை தான் தவறாக கணக்கிட்டு தவறாகவே பதிவிடுகிறார்கள்.

இந்த ஆதாரம் கொண்டு அவர்களுடைய அறியாமைகளை நான் போக்குவேன்.

மாமன்னர் இராஜராஜசோழனின் மகன் மன்னர் இராஜேந்திரசோழன் பிறந்த ஆண்டு கிபி.971.

இராஜராஜசோழனுக்கு திருமணம் நடந்த ஆண்டு கிபி.970.

இராஜேந்திரசோழன் பிறந்த ஆண்டு கிபி 971.

இராஜராஜசோழனுக்கு திருமண நடக்கும் பொழுது, அவருடைய வயது 24.

தவறாக பதிவிடுவோர்களை கேளுங்கள்.

தந்தை பிறப்பதற்கு முன்பே மகன் பிறந்து இருப்பாரா , மற்றும் இராஜராஜசோழன் இறப்பு நிகழ்ந்த பொழுது அவருடைய வயது 67.

உங்களுக்கு புரிகிறதா தோழரே...... 

அவரின் பிறப்பு நாளை சதயவிழா - 1078.

அவரின் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடந்த ஆண்டு 985.அந்த ஆண்டு வைத்து கணித்தால் இன்றுவரை 1040.

வரலாற்றை திருத்தி எழுதக்கூடியவை அல்ல .நடந்த நிகழ்வை சரியான சான்றுகளை வைத்தே கூற முடியும்.

- ஐய்யனார்(தென்புலத்தோன்).