Pages

Monday, 9 November 2020

அணுசக்தி என்ற சொல்லின் தமிழ் தூய சொல் என்ன !!!

 அணுசக்தி (Atom) குறித்து பழந்தமிழ்க் குறிப்புகள் .

பழந்தமிழ் இலக்கியங்கள் தவிர்த்து
அணுவைக் குறித்த அறிவியல் ஞானம் ஆதித்தமிழருக்கு அன்றே இருந்ததை , அணு என்ற தமிழ்ச்சொல்லால் விளங்காததை ATOM - என்கிற ஆங்கிலச் சொல்லின் மூலம் விளங்கிக் கொள்ளலாம் . அணுவைக் குறித்த Atom - என்ற ஆங்கிலச் சொல்லே தமிழ் மொழி உலகிற்கு வழங்கிய கொடை என்பது வியப்பில் ஆழ்த்தும் கூற்றாகும்.

அடோமாஸ் ( Atomos) - என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து Atom பிறந்ததென அகராதிகள் உரைக்கின்றன . ( உளறுகின்றன !!). இது 
Indivisible என்ற பொருள்பட அமைக்கப்பட்டதென்றும் குறிப்பிடுகின்றன. அணு - பிளக்க இயலாத சிறு துகள் என்பதும் நாம் அறிந்ததே!

ஆனால் தமிழிலிருந்து எப்படி வந்தது என்பது நம்மால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

துமி - என்பது வெட்டும் வினை குறித்த பழந்தமிழ்ச் சொல்லாகும்.
* துமித்தல் = வெட்டிப் பிளத்தல், துண்டாக்குதல்; வெட்டுப்படுதல் ; இரண்டாகுதல் ; இரண்டாகப் பகுத்தல். துகளாகப் பிளத்தல்.

துமி - தமிழ் விக்சனரி.

அல் - என்பது எதிர்மறை குறித்த முன்னொட்டு.

அல் + துமி = அல்துமி = துமிக்க இயலாதது, துண்டிக்க இயலாதது , ஊடுருவக் கடினமானது.

* அல்+துமி = அதுமி > ஆடெம் ஆனது.
* Al + Thumi = Athumi > Athom > Atom.

ஆங்கில அகராதிகளின் வேர்ச்சொல் விளக்கம் கீழே...

துக்கடா : அணுவையும் பிளக்க இயலும் என விஞ்ஞானிகள் அறிந்தது இந்த நூற்றாண்டில் தான்.

No comments:

Post a Comment