நியூட்ரினோ அறிவியலும் ஆபத்தும்
தமிழ் நாட்டில் தேனி மலை பகுதியில் ஆராய பட இருக்கும் நியூட்ரினோ பற்றி இன்று கொஞ்சம் அறிவியல் ரீதியாகவும் பிறகு அரசியல் ரீதியாகவும் பார்க்கலாம்.
முதலில் நியூட்ரினோ ஆய்வு என்றால் மலையை குடைந்து எடுக்க படும் ஏதோ ஒரு பொருள் போல என்று நினைப்பவர்கள் உண்டு. அது தவறு.
நியூட்ரினோ என்பது அனுக்குள் இருக்கும் ஒரு பொருள் என்று நினைப்பவர்கள் உண்டு சொல்ல போனால் அதுவும் தவறு. சிலர் நியூட்ரினோ வை நியூட்ரான் உடன் குழப்பி கொள்பவர்களும் உண்டு. அது மிக மிக தவறு.
உண்மையில் நியூட்ரினோ என்பது தான் என்ன ?? அது நமது உடலில் பாய்ந்தால் ஏதும் ஆபத்தா ?? அதில் என்ன ஆய்வு செய்வார்கள் . நியூட்ரினோ எங்கே இருக்கும் அது என்ன விதமான பொருள் ? அதன் பயன் என்ன .?.வாருங்கள் நியூட்ரினோவை முதலில் கொஞ்சம் அறிவியல் ரீதியாக பார்ப்போம். பிறகு ஏன் அது ஆபத்து என்பதையும் பார்ப்போம்.
முதலில் நியூட்ரினோ என்பது என்ன
கொஞ்சம் விளக்கமான அறிவியல் பார்வை :
நியூட்ரினோ என்பது அனுவின் எலெமண்ட்ரி பார்ட்டிகள் களில் ஒன்று... அதாவது மிக மிக அடிப்படை துகள்.
அது உற்பத்தி ஆகும் இடம்.... நட்சத்திரங்களின் மைய கரு. அதாவது அணுக்கரு இணைவு நடக்கும் இடங்களான நட்சத்திர அடுப்பில் நடக்கும் சமையல்களில் சமைக்க பட்டு உண்டாகும் பல பொருளில் ஒன்று இந்த நியூட்ரினோ.
சூரியனில் இருந்து நமக்கு ஒளி மட்டுமே வருவது இல்லை ஒளியின் போட்டான் துகள் போல மின்காந்த அலைகள் கதிர்வீச்சு... அல்டராவைலட் போன்றவையும் வருகிறதல்லவா அப்படி வரும் ஒரு துகள் தான் நியூட்ரினோ சூரிய அடுப்பில் கதிர்வீச்சின் போது பீட்டா கதிர் வீச்சு நிகழ்வில் உண்டாவது இந்த நியூட்ரினோ...
இந்த துகள் ஒரு மாய துகள்... இவைகளை கண்டு பிடித்து ஆராய்வது என்பது ஆவிகளை படம் பிடிக்க முயற்சிபதை விட மிக கடினம் .அதற்க்கு காரணம் நிறைய .
முதலில் நாம் கண்டு பிடித்ததிலேயே மிக சிரிய துகளாக நாம் கருதுவது எலக்ட்ரான்களை தான். காரணம் அவை கள் புரோட்டனை விட 1836 மடங்கு சிறியவை . ஆனால் ஒரு நியூட்ரினோ துகள் எலாக்ட்ரானை விட 40 லட்சம் மடங்கு சிறியது. ஒரு கிராமில் கோடி கோடி கோடி கோடி மடங்கு சிறியது இந்த நியூட்ரினோ. இது வரை மனிதன் அறிந்த துகள்களிலேயே மிக சிறிய துகள்.. மிக குறைவான எடை கொண்ட துகள் இந்த நியூட்ரினோ தான்.
பல நாட்களாக நாம் இவற்றிற்கு மாஸ் சுத்தமாக இல்லை என்று நினைத்து வந்தோம் தற்செயலாக தான் இதற்க்கு மாஸ் உண்டு என்பதை கண்டு கொண்டோம் (இன்றைக்கும் கூட இவற்றிற்கு மாஸ் இருப்பதற்கு நம்மிடம் ஆதாரம் ஏதும் இல்லை இதை நாம் உணர்வது சில விளைவுகளை வைத்துதான் )
ஐஸ்க்ரீமில் வெனிலா ,ஸ்ட்ராபெரி என்றெல்லாம் வருவதை போல இந்த நியூட்ரினோக்கள் மூன்று flaver இல் நமக்கு கிடைக்கிறது. இது அதன் எடையை அளக்க சிக்கலை இன்னும் அதிகரிக்கிறது.
அவைகளின் அந்த மூன்று வகை.... எலெக்ட்ரான் நியூட்ரினோ. மியுவான் நியுட்றினோ மற்றும் டாவ் நியூட்ரினோ..
(electron neutrino, muon neutrino, and tau neutrino )
இவை மூன்றும் ஒன்று அல்ல ... ஆனால் இவை மூன்றும் ஒன்று தான்.
குழப்பமாக இருக்கா ??
ஒரு நியூட்ரினோ என்ன நியூட்ரினோவாக இருக்க வேண்டும் என்பது நீங்கள் அதை எங்கே பிடிக்கிறீர்கள் என்பதை பொறுத்தது.
இன்னும் புரிலையா ..ஒரு உதாரணம் பாருங்கள்.
உங்க ஆபீஸ் பாஸ் ஒரு கிரிக்கெட் பிளேயர் கூடவே நல்ல பக்திமான் என்று வைத்து கொள்ளுங்கள்..
அவரை நீங்கள் அலுவலகத்தில் பிடித்தால் வேறு உடையிலும் கிரிக்கெட் மைதானத்தில் பிடித்தால் வேறு உடையிலும் கோவிலில் பிடித்தால் வேறு உடையிலும் கிடைப்பார் அல்லவா. உடை மட்டும் அல்ல அவர் குணாதிசயமே மாறி இருக்கும் அல்லவா . ஆனால் அவர் ஒரே ஆள் தானே ??
அப்படி தான் ஒரு எலெக்ட்ரான் நியூட்ரினோ மற்ற இரு வகை நியூட்ரினோவை விட சில பல மடங்கு எடை கூடு்தலாக இருக்கும் ஆனால் அவைகள் ஒன்றே.
இதில் இன்னொரு ஆச்சர்யம் இருக்கிறது நீங்கள் ஒரு எலெக்ட்ரான் நியூரினோவை ஆராய முயன்றால் அது திடீரென டாவ் வகையாக மாறிவிடும் டாவ் பிறகு மியுவான் நியூட்ரினோவாக வும் மாறி விடும்.. இது எப்படி இருக்கு ?
கிரிக்கெட் க்ரவுண்ட் ல 'சரி நம்ம பாஸ் ஹாயா இருக்காரே'ன் நீங்க ஜோக் அடித்து ஜாலியாக பேசி கொண்டு இருக்க... அவர் திடீரென மேஜிக் செய்தது போல ஆபீஸ் உடையில் டக் கென மாறி பாஸ் ஆகி சீரியஸாக பேச தொடங்கி விட்டால் எப்படி இருக்கும் .
இன்று வரை இந்த மூன்று வகையில் உள்ள எடை குழப்பம் (neutrino mass hierarchy ) தீர்க்க முடியவில்லை
எடையை அளப்பதிலேயே இவ்வளவு சிக்கல் ..இன்னும் அதை சென்ஸ் பண்ண பிரம்ம பிரயதன பட வேண்டும் காரணம் இந்த துகளுக்கு சுத்தமாக மின் சுமை இல்லை அதனால் இவைகள் மின்காந்த விசைகளால் சுத்தமாக பாதிக்க படுவது இல்லை.
( இவைகள் கொஞ்சமே கொஞ்சம் எடை இருபதால் ஈர்ப்பு விசைக்கு வேணா கொஞ்சமே கொஞ்சம் ஆட்படுகின்றன ) .
இவைகள் சார்ஜ் அடிப்படையில் நியுட்ரலாக இருப்பதால் தான் இந்த பெயரே முதலில் பெர்மி அவர்கள் தான் இதை இந்த பெயர் கொண்டு அழைத்தார்.(இதை நியூட்ரான் உடன் குழப்பி கொள்ள கூடாது. நியூட்ரான் ஒரு பேசிக் எலமெண்டரி் பார்ட்டிகள் அல்ல அது குவார்க்கினால் ஆனது. அதன் எடை இதை விட பல லட்சம் மடங்கு பெரியது மேலும் கிட்ட தட்ட அணைத்து அனுவிலும் நியூட்ரான் உண்டு ஆனால் நியுட்ரினோ
அல்ல )
இவைகளுக்கு தனியாக மணம் ,குணம்,நிறம் மாதிரி விஷயம் ஏதும் இல்லை சொல்ல போனால் இவற்றை ஆராய இவைகள் எந்த வசதியும் நமக்கு விட்டு வைக்க வில்லை. (நல்ல வேலையாக சில விளைவுகளை தவிர )
நியூட்ரினோவை உணர நமக்கு மிக மிக பிரமாண்டமான டிடக்டர்கள் தேவை ஒரு நல்ல டிடெக்டர் (உதாரணமா opera detecter) 1000 டன் மாஸ் ஐ கையாண்டால் ஒரே ஒரு நியூட்ரினோவை பிடித்து நிறுத்த முடியும் அதை ஆராயும் கருவி ஒரு ஒளி ஆண்டு தொலைவு அமைக்க பட்டால் அது நியூட்ரினோவை பிடிக்க வாய்ப்பு 50 சதம் தான்.
(ANTARES எனும் நியூட்ரினோ ஆய்வகம் 6 ஆண்டுகளாக இயங்கி வருகிறது ஒரு துகளையும் பிடிக்க வில்லை )
நிஜமாக வைக்கோல் போரில் ஊசி தேடுவதும் மலையை வெட்டி எலி பிடிபதும் இந்த நியூட்ரினோ கண்டு பிடிப்பதை விட மிக எளிமையானதே .
இதில் இன்னோரு முக்கியமான விஷயம் இன்று வரை நியூட்ரினோ வுக்கு எப்படி எடை உண்டாகிறது என்று ஆய்வாளர்களால் சொல்ல முடியவில்லை.
இந்த நியூட்ரினோக்கள் எங்கே உள்ளன ?? ஒவொரு வினாடியும் பல பல ட்ரில்லியன் நியூட்ரினோகள் நமது பூமியை ஊடுருவி சென்று கொண்டே இருக்கின்றன... ஒரு அணுவை விட அவைகள் மிக சிறியவை என்பதால் அவைகளை பொறுத்த வரை ஒரு அறையில் உள்ள காலி இடத்தில ஈ எளிமையாக பறந்து கடப்பபதை போல அவைகள் அணைத்து அணுக்களிலும் எளிமையாக கடந்து செல்கின்றன.
நமது வீடு நமது வாகனம் நமது உடல் அனைத்திலும் பல கோடி கோடி நியூட்ரினோக்கள் ஒவொரு வினாடியும் ஊடுருவி கொண்டே இருக்கின்றன.
ஆனால் அவைகள் எந்த அளவு சிறியது என்றால் உங்கள் உடலில் ஒவொரு வினாடியும் பல ட்ரில்லியன் நியூட்ரினோ ஊடுருவினாலும் உங்கள் வாழ்நாள் முழுதும் ஊடுருவும் துகளின் எடை 0.00000000001 கிலோ ஆகும்.
மொத்த மனிதகுலத்தின் மொத்த ஆயுளில் அவர்களை ஊடுருவும் நியூட்ரினோ வின் எடையை அளந்தால்
அவைகள் 0.15 kg ஆக மட்டும் தான் இருக்கும்.
அதாவது நீங்கள் ஒரு ஒரு கிலோ நியூட்ரினோ பந்து ஒன்றை செய்ய முயன்றால் அதன் அளவு இந்த பூமி பந்தை விட சில பல மடங்குகள் பெரியதாக இருக்கும். அப்படி ஒரு ஆச்சர்ய துகள்கள் இவை.
2011 இல் நியூட்ரினோ ஒளியை மிஞ்சிய வேகம் கொண்டவை என அறிவிக்க பட்டது அதாவது அப்படி நடந்தால் ஐன்ஸ்டைன் சொன்ன பார்முலா பொய்யாகி போகும்.. ஆனால் நல்ல வேலை அது ரீடிங் எடுப்பதில் தவறு என நிரூபிக்க பட்டது ஒளியை நியூட்ரினோவால் மிஞ்ச முடியாது. என்பதை ஒத்து கொண்டார்கள்.
சரி இப்பொது நியூட்ரினோ பற்றி ஓரளவு அறிவியல் ரீதியாக அறிந்து தெரிந்து கொண்டு இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இப்போது தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தின் ஆபத்தை பற்றி பார்க்கலாம்.
(கவனிக்கவும் நான் நியூட்ரினோ ஆபத்தானது என்று சொல்ல வில்லை நியூட்ரினோ திட்டம் ஆபத்தானது என்று தான் சொல்கிறேன் )
நியூட்ரினோக்கள் நேரடியாக உடலில் பாய்ந்தால் ஆபத்தா என்றால் இல்லை நிச்சயமாக இல்லை . அப்படி இருந்து இருந்தால் இன்னேரம் உலகில் எந்த உயிரினமும் இருந்து இருக்காது.
முதலில் இந்த நியூட்ரினோவை ஏன் ஆராய வேண்டும் அதில் என்ன லாபம் என்று பார்க்கலாம் .
இந்த பிரபஞ்சத்தை நாம் இது வரை புரிந்து கொண்டிருப்பது ஆராய்வது எல்லாமே ஒளியின் புண்ணியத்தில் தான். நாம் உட்கார்ந்த இடத்தில் இருந்து 25 லட்சம் ஒளியாண்டு தாண்டி ஆன்றோமேடா எனும் காலக்சி உள்ளது என்றோ 4.3 ஒளி ஆண்டு தாண்டி நமது அருகாமை நட்சத்திரம் ஆல்பா செண்டாரி உள்ளது என்றோ சொல்ல முடிவதற்கு காரணம் பூமியை பல ஒளி ஆண்டுகள் தாண்டி வந்து அடையும் ஒளியை வைத்து தான்.
அதே போல ஒளிக்கு அடுத்த படியாக பிரபஞ்ச வீதிகளில் இருந்து பல ஒளி ஆண்டுகள் தாண்டி நம்மை வந்து சேரும் இன்னோரு பயணி தான் இந்த நியூட்ரினோ.
இதை ஆராய்வதன் மூலம் பல பிரபஞ்ச ரகசியங்களை கட்டவிழக்க முடியும். உதாரணமாக காஸ்மிஸ் கதிர்கள் இந்த பிரபஞ்சத்தின் ஆரம்பத்தை பற்றிய தகவலை தரலாம் . நியூட்ரினோ ஆய்வு மூலம் டார்க் மேட்டர் பற்றிய உண்மைகளை அறியலாம். பிரபஞ்சத்தின் ஆரம்ப கனத்தை பற்றி அறியலாம்.
String theory பரிந்துரைக்கும் extra dimantion பற்றி ஆராயலாம் பிளாக் ஹோல் பற்றி ஆராயலாம்.
இதெல்லாம் நல்ல ஆய்வுகள் தானே பிறகு ஏன் தேனி மலையில் நியூட்ரினோ ஆய்வை எதிர்க்க வேண்டும். ??
இது வரை நியூட்ரினோவை அறிவியல் ரீதியாக அலசினோம் இனி கொஞ்சம் அரசியல் ரீதியாக அலசுவோம்.
அடுத்த பாகத்திற்கு காத்திருங்கள்
தொடரும்..........
#நியூட்ரினோ_அறிவியலும்_ஆபத்தும்
(பாகம் 2 )
#ரா_பிரபு
கடந்த பாகத்தில் நியூட்ரினோ பற்றி அறிவியல் ரீதியாக பார்த்தோம்..
இனி தமிழ் நாட்டில் நிறுவ இருக்கும் நியூட்ரினோ ஆய்வகம் பற்றி கொஞ்சம் அரசியல் ரீதியாக பார்ப்போம்.
இங்கே நமது கட்டுரை அறிவியல் கட்டுரையில் இருந்து சமூக கட்டுரையாக மாறுகிறது ..
மற்ற நாடுகளில் நியூட்ரினோ ஆய்வகங்கள் இல்லையா ?? இருக்கிறது இல்லாமல் இல்லை. ஆனால் அவைகள் இப்படி நாட்டுக்கு நடுவில் இல்லை.
உதாரணமாக அமெரிக்காவின் the University of Wisconsin சார்பாக
"The IceCube " எனும் பெயரிட பட்டுள்ள Neutrino Observatory எங்கே நிறுவ பட்டுள்ளது தெரியுமா ?
அண்டார்டிகாவில்... தென் முனையில்..
மனித சஞ்சாரமற்ற இடத்தில்.
அங்கே வருடத்தில் சில மாதங்களே வெயில் இருக்கும் குறிபிட்ட மாதத்தில் சென்று தான் அந்த லேப் ஐ நிறுவினார்.
(முன்பு சொன்னது போல ஆரம்ப கால பிரபஞ்சம் மற்றும் டார்க் மேட்டர் பிளாக் ஹோல் பற்றி எல்லாம் ஆராய்வது இந்த லேபின் நோக்கம்.)
ANTARES என்று ஒரு ஆய்வகம் (கட்டுரையில் ஏற்கனவே குறிப்பிட்டேன் பாருங்க 6 வருடமா ஒன்னையும் பிடிகல னு ) அது எங்கே இருக்கிறது என்றால் France இல் Toulon coast இல் 2.5 கிலோ மீட்டர் கடலுக்கு உள்ளே.
அடுத்ததாக INO . அதாவது India-based Neutrino Observatory .
இது ஒரு particle physics research project இது தான் தேனி மலையில் அமைய இருக்கும் ஆய்வகம்.
முதலில் இது தமிழ் நாட்டில் நுழைந்த வரலாற்றை கொஞ்சம் சுருக்கமாக பார்க்கலாம்.
முதலில் இது 2015 யிலேயே 1500 கோடி ப்ராஜெக்ட் இல் முடிந்து இருக்க வேண்டிய திட்டம் இது.
முதல் முதலில் 1989 ஆண்டு இதற்கான பிள்ளையார் சுழி போட பட்டு அந்த ஆண்டில் பல மீட்டிங் நடத்த பட்டது.
ஆனால் உறுதியாக முடிவு செய்ய பட்டது 2000 இல் சென்னையில் நடந்த WHEPP (workshop on high energy physics phenomenology ) எனும் workshop இல் .
Neutrino physics மற்றும் Cosmology working குழு இதை உறுதி செய்தார்கள்.
பிறகு அதே ஆண்டில் கல்கத்தாவில் ஒரு மீட்டிங் நடந்த பின் 2001 இல் மும்பையில் நடந்த கூட்டம் ஒன்றில் INO வின் collaboration கள் முடிவு செய்ய பட்டன.
குழுக்கள் இணை துணை குழுக்கள் முடிவு செய்ய பட்டன.
ஒருவழியாக பல research institutes, universities, மற்றும் scientific community funding agency, Department of Atomic Energy, இவைகள் எல்லாம் இனைந்த Neutrino Collaboration Group (NCG) ஒரு India-based Neutrino Observatory (INO)வை வடிவமைத்தார்கள் இவர்களின் முக்கிய நோக்கம் ஒரு underground neutrino laboratory அமைப்பது.
அதன் மூலம் நியூட்ரினோ மற்றும் இதர பிஸிக்ஸ் ஆய்வுகளை செய்ய ஒரு பாதுகாப்பான அண்டர்கிரவுண்ட் ஆய்வகம் அமைப்பது
முதல் முதலில் இதற்க்கு ஒதுக்க பட்ட இடம் நீலகிரி யில் உள்ள சிங்கரா .
நவம்பர் 20.. 2009 இல் Environment மினிஸ்டர் ஆக இருந்த Jairam Ramesh
என்பவர் Atomic Energy துறையின் Chairman, anil kakodkar க்கு ஒரு கடிதம் எழுதினார் அதில் இது முதுமலை புலிகள் சரணாலயத்திற்கு அருகில் இருபதால் மற்றும் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் இங்கே ஆய்வகம் அமைக்க அனுமதி மறுக்க படுகிறது என்றார். ஆனால் அதற்க்கு பதிலாக அவர் தேனி மலையில் சுருளி அருவி அமைந்துள்ள பகுதியை சிபாரிசு செய்தார் . அங்கே சுற்றுசூழல் மற்றும் வன துறையில் அனுமதி வாங்குவதில் எந்த சிக்கலும் இருக்காது என்று சுட்டி காட்டினார்
18 October 2010, இல் Ministry of Environment & Forests ஆனது...
environment மற்றும் forest இரண்டுக்குமான அனுமதி கொடுத்தது.
இப்படியாக தேனி மாவட்டத்தில் போடி மேற்கு மலைகளில் உள்ள Reserved Forest இல் ஆய்வகம் அமைக்க இடம் குறிக்க பட்டு உறுதி செய்ய பட்டது.
பிறகு 2012 இல் INO க்கு காட்டில் இடம் ஒதுக்க பட்டது. முதல் ஒதுக்கீடாக 66 கோடி ஒதுக்க பட்டது. திட்டத்தின் முதல்
செயல்பாடாக ராசிங்காபுரத்தையும் பொட்டிபுரத்தையும் இணைக்கும் சாலை போட பட்டது. இந்த திட்டம் 1500 கோடியில் 2015 இல் முடிந்து விடும் என்று எதிர்பார்க்க பட்டது.
ஆனால் ...
18 செப்டம்பர் 2012 இல்
கேரளா சென்ட்ரல் கமிட்டி மெம்பர் v.s அச்சுதானந்தம் என்பவர் தேனி இடுக்கி எல்லை தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கு இடையில் சுற்றுசூழல் மற்றும் ரெடியோலாஜி பிரச்னையை முன்வைத்து எதிர்ப்பு தெரிவித்தார்.
அவர் முன்வைத்த அணைத்து பிரச்சனைகளுக்கும் விளக்கத்தை INO தனது வெப்சைட்டில் வெளியிட்டது.
அதன் பின் 5 January 2015, பிரதமர் மோடி தலைமையிலான யூனியன் கேபினட் குழு INO வுக்கு முழு அனுமதி வழங்கியது.
ஆனால் அடுத்த மாதமே The southern bench of National Green Tribunal .அமைப்பு மத்திய மற்றும் மாநில அரசுக்கு சுற்று சூழல் அனுமதி அளிக்க பட்டத்தை கண்டித்து ஒரு பெட்டிஷன் ஒன்றை அனுப்பி வைத்தது.
அப்படியே அதற்க்கு அடுத்த மாதம் மார்ச் 26 .. 2015 இல் மெட்ராஸ் ஹைகோர்ட்டின் மதுரை பெஞ்ச் தனது எதிர்ப்பை பதிவு செய்ததை அடுத்து
நீதி மன்றம் மத்திய அரசை Tamil Nadu Pollution Control Board (TNPCB) இடம் இருந்து அனுமதி வாங்க சொல்லி உத்தரவு இட்டது.
Environmental Impact Assessment” (EIA)
மூலம் catagiry" B " யின் அடிப்படையில் அந்த அனுமதி எளிமையாக வாங்கியது INO.
(catagiry A என்பது மத்திய அரசிடமும் B என்பது மாநில அரசிடமும் அனுமதி பெற வேண்டிய திட்டங்களை குறிக்கும் )
இப்போதைக்கு அனைத்தும் தாயார்..
இங்கே என்ன ஆய்வு செய்ய போகிறார்கள் ??
முன்பு குறிப்பிட்டதை போல நியூட்ரினோ களில் எப்படி எடை உண்டாகிறது என்ற ஆய்வு தொடங்கி நியூட்ரினோ ஆஸ்கிலேசன்..Study of charge-conjugation ...charge parity violation possible charge-conjugation, parity, time-reversal என்று பல வகை ஆய்வுகள் மற்றும் இயற்பியலில் பல வகை சோதனைகள் செய்ய இருக்கிறார்கள்.
பொதுவாக அட்மாஸ்பியர் நியூட்ரினோ என்று நமக்கு இயற்கையில் கிடைக்கும் நியூட்ரினோவை ஆராய 1200 மீட்டர் ஆழம் கொண்ட அண்டர்கிரவுண்ட் குகைகள் தேவை.
தேனி திட்டத்தில் 31.44 ஹெக்டர் இடம் பயன்படுத்த படும் (அதில் 26.8 ஹெக்டர் வெளியிலும் 4.6 ஹெக்டர் நிலத்தடி யிலும் அமைக்க படும் )
underground project இல் 3 குகை அமைப்புகளாக செயல் படும் அதில் முக்கிய குகை அமைப்பு 50 ஆயிரம் டன் காந்தமாக்கம் செய்ய பட்ட இரும்பை பயன்படுத்தி நியூட்ரினோவை பிடிக்கும் அயன் கலோரி மீட்டர் ஐ செய்வார்கள்.
(இது வரை உலகத்திலேயே உள்ள மிக பெரிய காந்தம் CERN இல் இருக்கும் Compact Muon Solenoid (CMS) detector’s magnet ஆகும் ஆனால் தேனியில் அமைக்க பட போகும் காந்த அமைப்பு இதை விட 4 மடங்கு பெரியது )
முக்கிய குகை 130 மீட்டர் நீளம் 26 மீட்டர் அகலம் மற்றும் 30 மீட்டர் உயரம் கொண்டு இருக்கும். இதை தவிர மேலும் இரண்டு துணை குகை அமைப்பு neutrino double detector ஆக செயல் படும் மற்றும் dark matters களை ஆராயும். இந்த மொத்தம் அமைப்பிற்கு 2 கிலோ மீட்டர் குகை அமைப்பு தேவை படும்.
இப்போ மேலே சொன்ன அமைப்பை உண்டாக்க என்ன எல்லாம் செய்ய வேண்டி வரும் யோசியுங்கள் . மலையில் சாலை போடவும் மலையில் குடையவும் 50 ஆயிரம் டன் வெடி மருந்தை பயன்படுத்த இருக்கிறார்கள்.
இன்னோரு கணக்கு படி
8 லட்சம் டன் பாறைகளை தகர்த்து எடுக்க 1 லட்சம் டன் ஜெலட்டின் தேவை படலாம் என்கிறார்கள் . இவைகள் 2..3 ஆண்டுகள் தொடர்ந்து நடக்க இருக்கும் கட்டுமானம்.
வெடியில் மற்றும் ட்ரிலிங்கால் பெரும் அதிர்வுகள் உண்டாகும்
இதனால் கைக்கு எட்டும் தொலைவில் இருக்கும் முல்லை பெரியாறு அணையில் விரிசல் உண்டாகும் சாத்தியம் அதிகம் . இந்த அணையில் நீர்மின் நிலையம் இயங்கி கொண்டிருக்கிறது என்பது குறிபிட தக்கது.(முல்லை பெரியாறு அணை நூற்றாண்டு பழமையானது என்பதை நினைவில் கொள்ளுங்கள் )
இது மட்டும் அல்ல இந்த இடத்தை சுற்றி மொத்தம் 12 நீர் அணைகள் உள்ளன அவைகள் தேக்கி வைத்து இருக்கும் நீரின் அளவு 400 கோடி cubic meter நீர்.
இப்போதைக்கு அரசு செய்திருக்கும் வேலை என்ன தெரியுமா தினமும் 340 kl நீரை இந்த ஆய்வகம் அமைக்க அந்த முல்லை பெரியார் அணையில் இருந்தே எடுத்து கொள்ளலாம் என அனுமதி அளித்து உள்ளது.
மலையில் வைக்க படும் அந்த வெடிகளில் எழும் புகை சுற்றுவட்டாரத்தில் உள்ள காற்றை மாசு படுத்தும் நீரை மாசு படுத்தும் (சாதாரண கல் குவாரிக்கு அருகில் தேங்கி இருக்கும் நீர் நிலைகள் பார்த்தாலே புரியும் )
அந்த சப்தம் காட்டின் விலங்குகளை பறவைகளை அச்சுறுத்தும்.
மலையும் காட்டும் ஆறும் அருவியும் மழையும் ஒன்றோடு ஒன்று கண்ணுக்கு தெரியாத சங்கிலி பிணைப்பால் பிணைந்து இருக்க கூடியவை ஒன்றை பாதித்தால் அந்த பாதிப்பு மற்றதை பாதிக்க கூடியவை.
இது இயற்கை ஆர்வலர் சமூக ஆர்வலர்களின் பார்வை .
அடுத்து அறிவியல் பார்வையில் பார்த்தால்...
நமக்கு சொல்ல பட்டது போல அட்மாஸ்பியர் நியூட்ரினோ வை ஆராய்வது மட்டும் நோக்கம் அல்ல இது வேற வித ஆய்வு என்கிறார்கள் அதாவது பெர்மி யில் இருந்து செயற்கை lab made நியூட்ரினோ கற்றைகள் பெரும் செறிவுடன் அனுப்ப பட்டு அது இங்கே ஆராய பட போகிறது இதன் மூலம் அணு ஆயுதத்தை தொலைவில் இருந்து அழிக்கும் அணு ஆயுத ஆய்வு திட்டம் இது என்று சொல்ல படுவது எந்த அளவு உண்மை என்பதை உங்கள் ஆராய்ச்சிக்கே விட்டு விடுகிறேன்
ஆனால் அடுத்து நான் சொல்ல இருப்பது முக்கியமானது.
அது ஒரு சாமானியனின் பார்வை ஒரு எளிய குடிமகனின் கேள்வி. .
ஒரு அணையை கட்டும் போதோ அல்லது ரயில் பாதை அமைக்கும் போதோ கூட மலையை வெடிக்க தகர்க்க தான் செயகிறோம் ஆனால் அதை யாரும் எதிர்ப்பது இல்லை காரணம் திட்டம் ஏதுவாக இருந்தாலும் அதனால் என்ன நன்மை என்பது தான் ஒரு சாமண்யன் கேள்வி...
இந்த ஆய்வகத்தில் பெரிய உண்மை கண்டு பிடிக்க படலாம் (ஏற்கனவே நியூட்ரினோ ஆய்வில் 2 நோபல் பரிசு வாங்கி இருக்கிறார்கள் நிச்சயம் நியூட்ரினோ ஆய்வு நோபல்கான ஒரு நல்ல களம் தான் ) ஆனால் அந்த பெருமை நம்ம நாட்டிற்கு இல்லை. இந்த ஆய்வை மேற்கொள்ளும் நாட்டிற்கு தான் அந்த பெருமை. நமக்கு இதனால் பத்து பைசா லாபம் இல்லை.
போதிய அளவு வேலை வாய்ப்பும் கூட இந்த திட்டம் வழங்க பட போவது இல்லை. ஆனால் இதனால் ஏதாவது ஆபத்து உண்டானால் அது முழுக்க முழுக்க நமக்கு தான்.
ஏற்கனவே ஹூண்டாய் மற்றும் கோலா கம்பெனிகள் ஏன் அவர்கள் தொழிர்சாலைகளை நம் நாட்டில் அமைத்து இருக்கிறார்கள் என்பதை நாம் நன்கு அறிவோம்.
அதற்க்கு முக்கியகாரணங்கள்
1. தொழிற்சாலைக்கு தேவையான நிலம் மற்றும் நீரை மற்றும் இதர பொருட்களை இங்கேயே எடுத்து கொள்வது. மற்றும் மறை நீர் கான்செப்ட்
2. இயற்கை அழிவு சுற்றுசூழல் மாசு போன்ற வற்றைலிருந்து தங்கள் நாட்டை காப்பாற்றி நம் நாட்டை பலி கடா ஆக்குவது...
3. இங்கே குறைவான ஊதியத்தை கொடுத்து ஆட்களை வேலைக்கு அமர்த்தி கொள்ள கூடிய வசதி..
4. மற்றும் இங்கேயே சந்தை படுத்தும் வசதி
இப்படி பட்ட காரணங்கள் இந்த INO ஆய்வகத்துக்கும் பொருந்தும்.
இப்படி பட்ட நிலையில் இவர்களுக்கு அனுமதி கிடைப்பது எப்படி என்ற கேள்விக்கு பதில் எளிமையானது கமிஷனுக்கு கையெழுதிடும் அரசியல் வாதிகள் இருக்கும் வரை எதுவும் சாத்தியமே...
இந்த தேனி ஆய்வகதால் நன்மை விளைந்தால் அது வெளி நாட்டுக்கும் ஆனால் தீங்கு விளைந்தால் நம் நாட்டிற்கும் என்ற இந்த திட்டம் "
நமக்கு எந்த அளவு பலனளிக்கும்.??
நாம் இன்னும் கடல் எண்ணையை வாளியில் அள்ளி கொண்டிருக்க..
இன்னும் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை காப்பாற்ற கருவி இல்லாமல் இருக்க..
இன்னுமும் கடலில் சிக்கிய மீனவனை காப்பாற்ற தொழில்நுட்பம் இல்லாமல் இருக்க
இன்னுமும் பேருந்து ஓட்டையில் குழந்தைகள் விழுந்தது கொண்டிருக்க..
இப்படி நாம் வளர்க்க வேண்டிய அடிபடை அறிவியலும் தொழில் நுட்பமும் வளர்க்க படாமல் இருக்க யாருக்கோ பேரை புகழை தேடி தர போகும் ஆய்வுக்கு நமது காட்டை மலையை அழித்து இந்த அறிவியல் ஆய்வகத்தை கட்டுவதால் நமக்கு என்ன பயன்.
நியூட்ரினோ நம் நாட்டுக்கு தேவை இல்லாத திட்டமே..
இக்கட்டுரை இயற்றிய
திரு. பிரபு அவர்களுக்கு
நன்றி.
பின் இணைப்பு :
INO தனி அமைப்பு அல்ல அதனுடன் இணைத்து ஆய்வுக்கு கைகோர்த்து இருக்கும் முக்கிய 7 பார்ட்னர்கள்..
Tata Institute of Fundamental Research (TIFR), Mumbai,
Bhabha Atomic Research Centre (BARC), Mumbai,
Institute of Mathematical Sciences (IMSc), Chennai,
Saha Institute of Nuclear Physics (SINP), Kolkata,
Variable Energy Cyclotron Centre (VECC), Kolkata,
Harish Chandra Research Institute (HRI), Allahabad
மேலும் இதனுடன் சேர்ந்து இணைக்க இருக்கும் 13 மேலும் சில பார்ட்னர்கள்
Aligarh Muslim University, Aligarh,
Banaras Hindu University, Varanasi,
Calcutta University (CU), Kolkata,
Delhi University (DU), Delhi,
University of Hawaii (UHW), Hawaii, Himachal Pradesh University (HPU), Shimla,
Indian Institute of Technology, Bombay (IITB), Mumbai,
Indira Gandhi Centre for Atomic Research (IGCAR), Kalpakkam, North Bengal
University (NBU), Siliguri,
Panjab University (PU), Chandigarh, Physical Research Laboratory (PRL), Ahmedabad,
Sálim Ali Centre for Ornithology and Natural History (SACON), Tamil Nadu
மற்றும் Manipal Institute of Technology, Manipal
No comments:
Post a Comment