Pages

Friday, 8 January 2021

'தெனாவெட்டு' என்பதன் பொருளும் , இணையான ஆங்கிலச் சொல்.


தினவு + அட்டு = தினவட்டு என்பதே பேச்சு வழக்கில் தெனவட்டு > தெனாவட்டு என்றாகியது .

தினவு = அதீதமான உணர்ச்சி, அடக்க இயலாத உணர்வு, அரிப்பு.

அட்டு > அட்டுதல் = சேர்த்தல், கூட்டுதல், மிகுத்தல்.

தினவட்டு - என்றால் மிகுந்த, கட்டுக்கடங்காத கோபம், திமிர், ஆணவத்தைக் குறிக்கும்.

தெனாவட்டு = அதிகமான திமிர், தைரியம், அடங்க மறுக்கும் நிலை, இறுமாப்பு.

ஆங்கிலத்தில் இதனை
Arrogance, pluck, courage போன்ற சொற்களால் குறிப்பிடலாம்.

 இகரச் சொற்கள் பாமர வழக்கில் எகரமாக மருவி வழங்கப்படுவது இயல்பான ஒன்றே!

தினம் > தெனம்

தினந்தினம் > தெனந்தெனம்

தினை > தெனை.

திகட்டு > தெகட்டு.

திவசம் > தெவசம்.




இந்த பதிவுகளை வழங்கிய மதிப்பிற்குரிய தோழர் திரு.இரவீந்திரன் அவர்களுக்கு மிக்க நன்றி !!!!

              தமிழால் இணைவோம் !!!
                அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..



No comments:

Post a Comment