ஆர்டிக் காட் (arctic cod), நோடாதீனியோட்ஸ் (notothenioids) முதலிய மீன் இனங்கள், பொதுவாக ஆர்டிக் கடல் பகுதிகளில் வாழ்பவை.
உறைய வைக்கும் வெப்பநிலையிலும், இவ்வகை மீன்கள் வாழ்வதற்கு காரணம், அவற்றில் இருக்கும் பிரத்யேகமான “கிளைக்கோ புரோட்டீன்” தான்.
ஆங்கிலத்தில் “antifreeze glycoproteins” என்றழைக்கப்படும் இவ்வேதிப்பொருளானது, துருவ பகுதிகளில் வாழும் இவ்வகை உயிரினங்களின் இரத்தத்தில் மட்டுமே இருக்கிறதாம்.
இம்மீனின் இரத்த மாதிரியை எடுத்து ஆய்வு செய்த பொழுது, அதில் இருந்த உப்புக்களின் (சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் முதலியன) அளவு மற்ற மீன்களில் (வெப்பமான அல்லது உறைநிலையில் இல்லா கடல் பகுதிகளில் வாழும்) இருப்பதை காட்டிலும் அதிகமாக இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
No comments:
Post a Comment