Pages

Wednesday, 24 January 2018

தெய்வ மொழி தூய தமிழ் சொற்கள் மூன்றாம் பாகம் !!

அக்ரூட் - உருப்பருப்பு, படகரு
அங்குட்டம் - பெருவிரலளவு
அசோகு - பிண்டி, பிண்டிமரம்,
செயலைமரம்
அண்டத்தைலம் - கோழி முட்டை நெய்மம்
அண்டவாதம் - விரையழற்சி
அட்சதை – மங்கல அரிசி
அத்தர் - பூச்சாறை
அத்தி - எலும்பு
அத்துவைதம் - இரண்டன்மை
அதிமதுரம் - சாற்றுப்பூடு
அதிரசம் - பண்ணியாரம்
அப்பிரகம் - காக்கைப்பொன்
அபானம் - மலவாய், குதம், எருவாய்
அபான வாயு - கீழ்வளி, குசு
அபின் - கசமத்தப்பிசின்
அமாவாசை - காருவா
அமிலம் - புளிகம்
அர்ச்சனை - படையல், வழிபாடு, பூசனை
அரிதாரம் - பூச்சுப்பொன்துகள்,
மான்மதப்பொடி
அரோரூட் - அம்புக்கிழங்கு, கணைக்கிழங்கு,
கணைவேரி
அல்வா - இன்களி, தீம்பசை
அன்னாசி - செந்தாழை
ஆகாசத்தாமரை - வானத்தாமரை, காயத்தாமரை
ஆகாரம் - உணவு, சாப்பாடு
ஆசுத்துமா - இரைப்புநோய்
ஆத்மா - ஆதன், உயிர், ஆவி
ஆப்பிள் - அரத்தி
ஆயின்மெண்ட் - மருந்துநெய்
இங்கு - பெருங்காயம்
இங்குலிங்கம் - சாதியிலங்கம்
இந்திரகோபம் - தம்பலபூச்சி
இந்திரியம் - புலனுறுப்பு,விந்து
இந்துப்பு - சிந்துப்பு
இலவங்கம் - கருவா, கருவமரம்
ஈசன் - இறைவன், சிவன்,
அரசன்,குரு, மூத்தோன்
ஈசுவரமூலி - பெருமருந்துக்கொடி
உருத்திராக்கம் - கண்மணிக்காய்
உலோகம் - மாழை, மாழைத்தாது
உன்மத்தம் - பித்தியக்காரன், பித்தன்,
வெறியன்
ஊதா - செந்நீலம்
ஊதாமுள்ளி - செம்முள்ளி
ஏலம் - மணகம்
ஏலாதி - மணகமுதலி
ஐசு - பனிக்கட்டி
ஓமத்திராவகம் - ஓமத்தீநீர்
ஔடதம் - மருந்து
ககனம் - வான், காயம், மேலுலகு
கச்சுரை - பேரீந்து
கசகசா - கசமத்த விதை
கசாயம் - கருக்கு, கியாழம்
கஞ்சா - கஞ்சம், குல்லை,
கஞ்சங்குல்லை
கபாலம் - தலை
கமலம் - தாமரை
கர்ப்பம் - கரு, கருப்பம்
கராம்பு - கருவம்பூ, கருவமரம்
கர்மம்,கன்மம் - கருமம்
கற்பூரம் - சூடன்,எரியணம்
காப்பி - குளம்பி
காமாலை - மஞ்சநோய், மஞ்சள் பிணி
காயகற்பம் - ஆயுள் / வாழ்நாள்
நீட்டிப்பு மருந்து
காயசித்தி - உடலை நீட்டத்திறம்
காயம் - உடல்
கெச்சக்காய் - கழற்சிக்காய்
கேரட் - செம்மங்கி, இன்முள்ளங்கி,
செங்காய்
கொய்யா - காழ்ப்பழம்
கொப்பரை - கொட்டான்காய்,
நெய்க்கொட்டான்
கோந்து - பிசின்
கோமயம் - கோமூத்திரம்
கோரோசனை - ஆமணகம்
குக்குடம் - கோழி
குங்குமம் - செஞ்சாந்து, சாந்தகம்
குதிவாதம் - குதி நரம்பிழுப்பு வலி
கும்பித்தல் - மூச்சடக்குதல்
குல்கந்து - முளரிப்பச்சம்
குஃழ்டம் - குட்டம்
சங்கபுசுபம் - சங்குப்பூ
சஞ்சீவி - உயிர்ப்பு மருந்து
சண்டமாருதம் - பெருங்காற்று
சதமூலி,சதாவரி - தண்ணீர்விட்டான் கிழங்கு
சதவீரியம் - வெள்ளறுகு
சதை - தசை
சப்தம் - ஒலி, ஓசை
சப்ச்சா - திருநீற்றுப்பச்சை விதை
சரீரம் - உடல்
சவ்வரிசி - நெப்பபரிசி
சவ்வாது - புழுகு
சவுக்கு - குச்சிரைமரம்
சவுக்காரம் - துணி வழலை
சாம்பிராணி - சுராலை, தூவப்பொடி
சாமரபுசுபம் - கமுகு
சாரணம் - அம்மையார் கூந்தல்
சிகிச்சை - பண்டுவம்
சிகை - முடி, மயிர்
சிங்கி - மான் கொம்பு
சித்தப்பிரமை - மனமயக்கம், பித்தியம்
சிந்தூரம் - செந்தூளத் தாது
சிலேபி - தேன்குழல், தேன்முருக்கு
சிவலிங்கம் - சிவயிலங்கம்
சிவவாக்கியர் - சிவமொழியர்
சிறுபஞ்சமூலம் - சிற்றைவேர்
சின்முத்திரை - அறிவு முத்திரை
சீக்கு - நோய்
சீத்தா - நளிரம்பழம், செதிற்பழம்
சீதபேதி - குளிரக் கழிச்சல்
சீதளம் - குளுமை, குளிர்ச்சி
சீரணம் - செரியாமை
சீனி - சக்கரை
சுக்கிலம் - விந்து, வெண்மை
சுகவீனம் - நலக்கேடு
சுகாசனம் - இயல்பிருக்கை
சுகாதாரம் - நலவழி
சுத்தசலம் - தண்ணண்ணீர், தூயநீர்
சுத்தி - தூய்மை, குற்றநீக்கம்
சுரசம் - காய்ச்சினசாறு,கருக்குநீர்
சுவாசித்தல் - மூச்சுவிடுதல், உயிர்த்தல்
சுறுமாக்கல் - மைக்கல்
சூத்திரம் - நூல்,நூற்பா
சூதகம் - மாதவிடாய்,
தூய்மைக் காலம்
சூதம் - இதளியம்
சூப்பு - சாற்றுக்குழம்பு, சாற்றம்
சூர்ணம் - பொடி
சூரியகாந்தி - ஞாயிறுதிரும்பி,
ஞாயிறு வணங்கி
சூரியபுடம் - வெயிற்புடம்
சூரியநமசுகாரம் - கதிரவ வணக்கம்,
ஞாயிறு வணக்கம்
சேட்டுமம்,
சிலேத்துமம் – கோழை,ஐயம்

       தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                   தமிழ் வாழ்க !!!
எதிர்க்க துணிந்தால் தமிழ் மீளும் !!!
எதற்கும் துணிந்தால் தமிழ் உலகை ஆளும்.
தமிழ் அறிந்தாரிடம் !!!
தமிழில் பேசுவதே தமிழனின் மரபு.
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..

No comments:

Post a Comment