Pages

Wednesday, 3 March 2021

உடலில் தனிப்பட்ட இடங்களில் உள்ள கறுமையை நீக்குவது எவ்வாறு?

 உடலில் தனிப்பட்ட இடங்களில் உள்ள கறுமையை நீக்குவது எவ்வாறு?

பொதுவாக உடலில் தனிப்பட்ட இடங்களில் கருமை படர்வது..

அக்குள் பகுதிகளில்; armpits or under arms

மார்பகங்கள் அடியிலும்.. beneath the breasts

தொடை இடுக்குகளில்.. பிறப்புறுப்பு பகுதிகளில்;. Perineal region..

கழுத்தை சுற்றி around the neck..

முகத்தில் வாய் சுற்றி உள்ள பகுதியில். Around nose and the mouth…

கன்னங்கள் மேலே பக்கவாட்டில் besides the cheek.

பரவலாக இருபாலருக்கும் காணப்படும்.

இதற்கு காரணமாக இருப்பது

இன்சுலின் ரெசிஸ்ட்டென்ஸ்…INSULIN RESISTANCE என்ற ஒருவரது உடலில் உள்ள இன்சுலின் ஹார்மோன் குறைபாடு ஏற்படும் தன்மை ஆகும்… இது அகான்தோசிஸ் நைக்ரன்ஸ் ACANTHOSIS NIGRANS .. எனப்படும்

பெண்களுக்கு ஏற்படும் PCOS/PCOD மற்றும் தைராய்டு ஹார்மோன் குறைபாடு ஏற்படும் போது.. உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக இருக்கும்.. அப்போது இது போன்ற தோல் மடிப்புகள் தடித்து.. கருமை படர்ந்து காணப்படும்.

ஏனெனில்.. PCOD என்பதை pre diabetic condition என்றே வகைப்படும்.. காரணம் அதில் இன்சுலின் குறைபாடு ஏற்படும்.

சிலர்.. கழுத்தில் தாலிச் சங்கிலி அணிவதால்.. கருமை படர்ந்து விட்டது என்று சொல்வார்கள்.. ஆனால்…இரத்த பரிசோதனை செய்து பார்த்தால் தெரியும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக உள்ளது என்று…

ஆண்களுக்கு இது போல்.. தோல் மடிப்புகள் கருமையாக தடித்து காண.. சர்க்கரை நோய் கண்ட்ரோல் இல்லாமல்.. இன்சுலின் ரெசிஸ்ட்டென்ஸ் வந்து விட்டது என்று அர்த்தம்..

HbA1C .. இரத்த பரிசோதனை மூன்று மாதங்கள் ஒரு முறை செய்து கொண்டு.. உங்கள் டயாபடீஸ் கண்ட்ரோலில் உள்ளதா என்று பார்ப்பது அவசியம்..

உடற்பயிற்சி செய்வது.. உடல் எடையை சரியான அளவில் வைத்துக் கொள்வது.. அதிக மாவுச்சத்து உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது..

லேசான தோல் நிறம் மாறி இருப்பதற்கு களிம்புகள்.. ஃபேஷ்வாஷ் கொடுப்பார்கள் ஸ்கின் டாக்டர்கள்..

ரொம்ப.. கருமையாக தடித்து போய் காணப்படுகிறது.. என்று நீங்கள் கவலை கொள்ளும் பட்சத்தில்.. தோல் நோய் மருத்துவரை நாடி..chemical peeling; laser abrasion.. போன்ற சிகிச்சை முறைகளை செய்து கொள்ளலாம்.. ஆனால் நிரந்தர தீர்வு இல்லை.. அடிக்கடி செய்து கொள்ள வேண்டும்…ஹார்மோன் மாற்றங்கள் சீராக வைத்துக் கொள்வதே நிரந்தர தீர்வாகும்..



இந்த பதிவுகளை வழங்கிய மதிப்பிற்குரிய அம்மையார் திருமதி . திவ்யா அருள் (அரசு மகப்பேறு மருத்துவர் ) அவர்களுக்கு மிக்க நன்றி !!!


     தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..


No comments:

Post a Comment