ஏற்கனவே விழுந்து கொண்டுதான் இருக்கிறோம் என்பது தெரியுமா ?
[பொறுப்புத் துறப்பு : இது அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் இருப்போருக்கு மட்டுமானது . அறிஞர்கள் மன்னிக்கவும் :)]
நாம் இதுவரையிலும் அறிந்திருப்பதை விட , நாம் நம்மை (சூரியக் குடும்பத்தை)பற்றி அறியாத அதிர்ச்சிச் செய்திகள் சிலவற்றை இங்கே காணுவோம் ;
அதிர்ச்சி 1 :
நிலையாய் இருக்கும் சூரியனைச் சுற்றிவரும் கோள்கள் , ஒரே வட்டத்தளத்தில் கீழ்ப்படத்தில் உள்ளது போலப் பயணிப்பதாகத்தான் நமக்குப் பாடம் கற்றுத் தரப்பட்டிருக்கிறது
ஆனால் உண்மையில் அதுபோல இல்லை . ஒவ்வொரு கோளும் , ஒவ்வொரு தனி அளவு, நீள் வட்டக் கோணப் பாதைகளில் உயர்ந்தோ, தாழ்ந்தோதான் சூரியனைச் சுற்றுகிறது என்பது தான் நாம் இங்கு அறிந்து கொள்ள வேண்டியதாகும் .கீழ்ப்படம் காண்க
அதிர்ச்சி 2 :
கோள்கள் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு , சூரியனையும் சுற்றிவருவதாகத்தான் நமக்குக் கற்றுத் தரப்பட்டிருக்கிறது
ஆனால்.,, கூடுதலாக .,
எங்கோ விழுந்துகொண்டு (அ) பக்கவாட்டில் (அ) எதை நோக்கியோப் பயணித்துக் கொண்டிருக்கும் சூரியனைத் தொடர்ந்து விடாமல் விரட்டிக்கொண்டு அதன் குடும்பக் கோளகளும் விழுந்துகொண்டோ (அ) பக்கவாட்டிலோ (அ) பயணித்துக் கொண்டோதான் இருக்கின்றன .. என்பது தான் நாம் இங்கு அறிந்து கொள்ள வேண்டியதாகும் .
அந்த வேகம் இன்னும் கணக்கிடப்படவில்லை .
இச்செயலுக்கு இன்னும் இறுதியாகப் பெயரிடப்படவில்லை . இது வோர்ட்டெக்ஸ் (VORTEX) நிகழ்வைப் போலிருப்பதால் , இப்போதைக்கு இதைவோர்ட்டெக்ஸ் நிகழ்வு என்றே அழைக்கிறார்கள் ..
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment