Pages

Monday, 15 February 2021

பரம்பொருள் என்ற சொல்லுக்கு பொருளும் , விளக்கமும்.

 

பரம்பொருள் என்ற சொல்லுக்கு பொருளும் , விளக்கமும்.

இறைவனை - the Supreme Being, the Ultimate , the highest of highest - ஆகிய பொருள்பட குறிப்பிடும் தமிழ்ச்சொல்லே பரம்பொருள்.

பரம்பொருள் = மிக மேலான பண்புகளைக் கொண்டு, எல்லாவற்றிற்கும் காரணமாக இருக்கும் , எங்கும் வியாபித்து நீக்கமற நிறைந்திருக்கும் பொருள்தான் பரம்பொருள்.

பரம்பொருள் , பரமசிவன் - ஆகியன இறைவனை - அவனின் உச்ச பண்புகளைப் பாராட்டியமைந்த அழகான தமிழ்ப்பெயர்கள்.

பர்/பர, புர்/புர - ஆகிய மூலங்களில் இருந்து தோன்றிய சொற்கள் பொதுவாக - அனைத்திலும் சிறந்த ; மிக உயர்ந்த இடம் ; அல்லது உயர்ந்த பண்புகளுடன் தொடர்புடைய பொருள்படுபவற்றினைக் குறித்து அமைந்தவையாகும்.

பரன் - என்றால் எல்லாவற்றிலும் மேலானவன் = சிவன் ; கடவுள்.

பரம்பரை - நம் மூதாதையர் வரிசையில் முதல்நிலை.

பரண் - வீடுகளில் உயரத்தில் அமைக்கப்படும் ஓர் கட்டுமான வசதி.

பருந்து - மிக உயரத்தில் பறக்கும் திறனுள்ள பறவை.

பரம் (வரம்) - ஆன்றோர்களிடத்திலோ தெய்வம் மூலமாகவோ பெறப்படும் பெரும்பேறு.

புரவி - உயர்ந்த மதில்களை தாண்டும் திறனுள்ள விலங்கு (குதிரை).

புரிசை - மிக உயரமான மதிலமைப்பு.

புரம் - உயர் குடியேற்றம், மாட வீடுகளால் நிறைந்த நகரம், தலைநகர், உயர் மாடி கட்டிடங்கள், கோயில் கோபுரம்.

* புரையேறுதல் - சுவாசக் குழாய்க்குள் நுழைந்த உணவை மேல்வழியாக வெளியேற்ற நம் உடலில் நடைபெறும் நிகழ்வு.

No comments:

Post a Comment