சுங்கச் சாவடிகளில் வாகன நெரிசலைக் குறைக்க மத்திய அரசு கடந்த 2017ல் அறிமுகப்படுத்திய முறை.
இது ரேடியோ பிரிக்யூவன்சி ஐடன்டிபிகேசன் (Radio Frequency Identification) தொழில்நுட்பத்தில் இயங்கக் கூடியது.
இதில் 2 வகைகள் உள்ளன.
- NHAI tag
- Bank Specific tag.
- இந்த என்.எச்.ஏ.ஐ. டேக் ஐ பொருத்தவரை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணையதளத்தில் விண்ணப்பித்து இதைப் பெறலாம்.
- இரண்டாவதாக உள்ள பாங்க் டேக் ஐ பொறுத்தவரை இதற்கு நாடு முழுவதும் இந்த வசதியை வழங்க 22 வங்கிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
- அவற்றிடம் ஏதோ ஒன்றில் விண்ணப்பத்து இந்த சீட்டைப் பெற்றுக்கொள்ளலாம்.
அந்த வங்கிகள் முறையே,
- இவர்களிடம் விண்ணப்பித்தவுடன் கீழே உள்ள ஸ்டிக்கர் போல ஒன்றை கொடுத்திடுவர்.
- அந்த ஸ்டிக்கரில் ஒவ்வொருத்தருக்கும் தனித்தனி குறியீடு வழங்கப்பட்டிருக்கும்.
- அதற்கு நீங்கள் உங்களது மொபைலுக்கு ரீசார்ஜ் செய்வதுபோல் ப்ரீபெய்டு ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும்.
- இந்த ஸ்டிக்கரில் உள்ள குறியீடு என்.எச்.ஏ.ஐ. இணையதள வாலெட் ஒன்றோடு இணைக்கப்பட்டிருக்கும்.
- இதற்கு ரீசார்ஜ் செய்து வாகனத்தின் முன்புற கண்ணாடியில் ஒட்டிவிட வேண்டும்.
- இப்போது வாகனம் சுங்கச்சாவடியைக் கடக்கும்போது அதிலுள்ள சென்சார் இந்த ஸ்டிக்கரை ஸ்கேன் செய்து பணம் பெற்றுக்கொள்ளும்.
- இதற்கு என ஒருசில சுங்கச்சாவடிகளின் அருகில் அந்த 22 வங்கிகளின் கிளைகளும் அமைக்கப்பட்டிருக்கும். அதன்மூலம் நீங்கள் இந்த ஸ்டிக்கரைப் பெறலாம்.
- இந்த ஸ்டிக்கரை 5 ஆண்டுகளுக்கு பயன்படுத்த முடியும்.
- ஒருவேளை இனி எந்த வாகனத்திலாவது பாஸ்ட்டேக் இல்லாவிடில் 2 மடங்கு கட்டணம் வரை வசூலிக்கப்படும்.
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment