ஊனம் என்பது தமிழ்ச் சொல்லா?
ஆம் ., முதலில் குறள் ., அப்புறமா விளக்கம் :)
ஊனத்தை வென்றுஅதை உன்குறியீ(டு) என்றாக்கு;
கூன்தானே ஔவைக்(கு) அழகு.
- துரைக்குறள்
விளக்கம் :
- ஊனம் = ஊன் + அம் = சார்ந்திருக்கும் ஒன்று
[மூலத் தொழிலாகுபெயர் = ஊன்றுதல் = சார்ந்திருத்தல்
இதன் வினை/கட்டளைச் சொல் =ஊன் = சார்ந்திரு]
- ஊனன் = ஊன் + அன் = சார்ந்திருப்பவன்
முக்கியக் குறிப்பு = ஊனன் என்றால் ’உடற்குறைபாடு உள்ளவன்’என்று பொருள் இல்லை . ( ’’அவனின்’’ படைப்புப் பிழையால் , ’’இவன்’’ஒரு பொருளையோ அல்லது ஒருவரையோ ) சார்ந்திருப்பவன் என்றுதான் பொருளாகும் .. இதை எல்லார்க்கும் முடிந்தவரை எடுத்துச் சொல்வோம்
வாழ்க உறவுகள் !!!.
No comments:
Post a Comment