Pages

Saturday, 24 October 2020

வாடகை என்ற சொல்லின் தூய தமிழ் சொல் வாழகை

 வாடகை - தமிழ்ச் சொல்லா?

வாடகை, குத்தகை - இரண்டும் தமிழ்ச் சொற்களே!

வாடகை என்பது குறிப்பிட்ட காலத்திற்கு நிலத்தை அல்லது கட்டிடத்தை ஒப்பந்தம் செய்து ஆக்கிரமிக்கும் உரிமைக்கான கூலி. 'வாடகைக் கூலி' - என்பதே பேச்சு வழக்கில் 'வாடகை' என சுருக்கமாக அழைக்கப்படுகிறது.

  • வாழகை - என்ற சொல்லின் திரிபே வாடகை.

( ழகரம் > டகரமாகத் திரிவதை பல சொற்களில் காணவியலும். புழல் > புடலங்காய், மேழம் > மேடம் ( மேஷம்), விழியல் > விடியல், குழிவு > குடைவு)

  • வாழ் + அகை= வாழகை > வாடகை.
  • அகம் > அகை, ( அகம் என்றால் இடம்).
  • மேலும், அகை - என்பது முன் வருதலையும் குறிக்கும்.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் தங்கி 'வாழ முன் வருதற்குத்' தரப்படும் கூலி = வாடகைக் கூலி. இதனை குடிக்கூலி என்றும் அழைப்பர். அதாவது... குடியிருக்க தரப்படும் கூலி = குடிக்கூலி.

குத்தகை - என்பது ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது. குறிப்பிட்ட காலத்துக்கு அனுபவ உரிமையளிக்கும் ஒப்பந்தக் கட்டுபாட்டு முறை ; குத்தகைக் கூலி.

  • குத்து > குந்து = உட்கார்தல், நிலைத்தல்.
  • குந்தவைத்தல் > குத்தவைத்தல்.
  • குத்தகை = இன்னொருவர் இடத்தில் உட்கார்ந்து பயிர் செய்தல், வணிகம் செய்தல்.

துக்கடா :

  • குத்து (குந்து) = உட்காருகை என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து சென்றதே SQUAT - என்ற ஆங்கிலச் சொல்.

.

No comments:

Post a Comment