Achilles Tendon என்ற குதிகால் தசை நார்.. நமது கெண்டை கால் தசைகளில் gastrocnemius and soleus musclesஇருந்து குதிகால் எலும்பான calcaneus வரை உள்ள தசை நார் ஆகும்.. கிரேக்க போர் வீரர் அக்கிலிஸ் இந்த தசைநார் மீது ஏற்பட்ட வெட்டு காரணமாக இறந்து போனதால் அவரின் பெயரில் அக்கிலிஸ் டெண்டான் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் காயம் காரணமாக இந்த தசைநார் கிழிந்து விடும். குதிகால் தரையில் ஊன்றி நடக்க முடியாது.. ஆனால் நம்ம ஊர் காவல் நிலையத்தில் கூட இதெல்லாம் நடக்கும். இப்போது இந்த தசை நார் கிழிந்து போவதால் நிரந்தர ஊனம் கிடையாது.. நவீன மருத்துவ உலகில் இந்த தசைநார் கிழிவது சரிசெய்ய படுவது எல்லாம் சர்வசாதாரணமாக செய்யப்படும் அறுவை சிகிச்சை…
படத்தில் பிய்ந்து போயிருக்கும் அக்கிலிஸ்தசைநார் தான் நம் ஊரில் கால்நரம்பு அறுந்து போயிற்று என்று சொல்வது..
இந்த பதிவுகளை வழங்கிய தோழி. திருமதி.திவ்யா அருள் அவர்களுக்கு மிக்க நன்றி !!!
No comments:
Post a Comment