Pages

Tuesday, 15 December 2020

இராணுவ போர்களத்தில் பயன்படுத்தும் ஊர்தி.

 

  • போர்களங்களில் பயன்படுத்தப்படும் ஊர்திகளுக்கான தமிழ்ச்சொற்கள் :
  1. ஏவுகணை காவி - missile carriers
  2. உந்துகணை காவி - rocket carriers (weapon)
  3. உந்துகணை சேணேவி- rocket artillery
  4. சேணேவி - Artillery | ஆக்கியோன்திரு. திருத்தம் பொன் சரவணன்
  5. உந்துருளி - motorbike
  6. கவச அடிபாட்டு ஊர்தி - Armoured fighting vehicle
  7. குதிரையிழு சுடுகலன்/துப்பு- Tachanka
  8. போரூர்தி- war wagon
  9. காப்பூர்தி - protected vehicle
    1. மேயர் கேசரி ஆனையிறவில் செலுத்திய ஊர்தி இவ்வகையே.
  10. வல்லூர்தி-jeep
  11. தண்டவாளச் சுடுகலன்/துப்பு - railway gun
  12. கவச மகிழுந்து- armoured car
  13. தானே பிலிற்றுந்திய வானூர்தி எதிர்ப்பு ஊர்தி- self-propelled anti-aircraft vehicle
  14. தானே-பிலிற்றுந்திய சேணேவி- self-propelled artillery
  15. பல்குழல் உந்துகணை செலுத்தி- multi-barrel rocket launcher
  16. தானே பிலிற்றுந்திய பல்குழல் உந்துகணை செலுத்தி- self propelled multi-barrel rocket launcher
  17. தானே பிலிற்றுந்திய தெறோச்சி - Self-propelled howitzers
  18. சிறு தகரி- Tankette
  19. தகரி/ தகரூர்தி- tank
  20. இலகு தகரி- light tank
  21. நடுத்தரத் தகரி- medium tank
  22. கன தகரி- heavy tank
  23. முதன்மைத் தகரி- main tank
  24. மீக கனத் தகரி- super heavy tank
  25. தீயுமிழ் தகரி- flame tank
  26. காலாட்படைத் தகரி- infantry tank
  27. வலசைத் தகரி- cruiser tank
  28. வேவூர்தி- Reconnaissance vehicle
  29. வேவு மகிழுந்து- Scout car
  30. உள்ளூர் காவலூர்தி- internal security vehicle
  31. செம்மைப்படுத்தப்பட்ட அடிபாட்டு ஊர்தி- improvised fighting vehicle
  32. சுடுகலன்/ துப்பு காவூர்தி- small vehicles like pickups carrying guns
  33. கவச சுமையூர்தி - armoured truck
  34. சுடுகலன்/ துப்பு சுமையூர்தி- gun truck
  35. கவச ஆளணி காவி- armoured personnel carrier
  36. படைக்காவி - troop carrier
    1. 'படையினர் காவி ' என்பதன் சுருக்கமே படைக்காவி ஆகும். இது துருப்புக்காவி என்ற வேற்று மொழி கலந்த சொல்லிற்கு பகரமாக்கப்பட்ட சொல்லாகும்.
  37. காலாட்படை அடிபாட்டு ஊர்தி- infantry fighting vehicle
  38. காலாட்படை நகர்திறன் ஊர்தி - infantry mobility vehicle
  39. பாதுகாக்கப்பட்ட சுற்றுக்காவல் ஊர்தி - protected patrol vehicle
  40. கவசக் காவலூர்தி- armoured security vehicle
  41. இலகு தந்திர பன்னோக்கு ஊர்தி- light tactical multi-role vehicle
  42. ஈரூடக ஊர்தி- amphibious vehicle
  43. கண்ணிவெடி தடுப்பு பதிதாக்குதல் பாதுகாப்பு காலாட்படை நகர்திறன் ஊர்தி - Mine-resistant/ambush protected infantry mobility vehicle
  44. கவசப் பொறியியல் ஊர்தி - armoured engineering vehicle
  45. உடைக்கும் ஊர்தி- breaching vehicle
  46. கவச இடிவாருகம் ( இடித்து வாரும் ஊர்தி)- armoured bulldozer
  47. கவச மீட்சி ஊர்தி- armoured recovery vehicle
  48. பாலம் கொண்ட கவசவூர்தி- armoured vehicle-launched bridge
  49. கவச கண்ணிவெடி அகற்றல் ஊர்தி- armoured mine clearing vehicle
  50. தாக்குதல் உடைப்பம் ஊர்தி - assault breacher vehicle
  51. பாரிய கவச சண்டைப் பொறியியல் ஊர்தி மற்றும் பக்கம் காவி - Heavily armoured combat engineering vehicle and section carrier
    1. பக்கம் - section
  52. பொறியியலாளர் சதள ஊர்தி - Engineer Squad Vehicle
  53. கணையெக்கி - mortar
  54. கணையெக்கி காவி- mortar carrier
  55. தகரி நாசகாரி- tank destroyer
  56. கவசத் தொடர்வண்டி- armored train
  57. அடிபாட்டு இசிவூர்தி- Aerosani/ Aerosled
  58. சேணேவி இழுபொறி- artillery tractor
  59. தெறோச்சி - howitzers
  • தெறு+ ஓச்சு + இ
    • தெறு- சுடுதல்
    • ஓச்சு- எறிதல், செலுத்துதல், பாச்சுதல், உயர்த்துதல் , தூண்டி விடுதல்
    • இ- விகுதி

அதாவது எறிகணையினை சுட்டு மிகக் கூடிய தொலைவிற்கும் அதிக அளவிலான உயரத்திற்கும் செலுத்துத்தும் ஓர் படைக்கலம் என்று பொருள் படும்.


  • பிற்சேர்க்கை:-

MORTAR- கணையெக்கி


  • கணையெக்கியானது எறிகணைகளை எக்கி ஏவும் ஆற்றல் வாய்ந்தது. ஆதலால் 'எறிகணை' என்னும் சொல்லில் உள்ள 'கணை' என்னும் விகுதியையும் 'எக்குதல்' என்னும் சொல்லினை எக்கி என்று மாற்றி இரண்டையும் இணைத்து

கணை+எக்கி = கணையெக்கி

என்று உருவாக்கப்பட்டுள்ளது. எக்குதல் என்னும் சொல்லுக்கு,

-மேலே செல்ல வீசுதல்

-உள்ளிழுத்தல்

-தாக்கி யூடுருவுதல்

ஆகிய பொருட்கள் உள்ளன. இவை mortar செய்யும் அத்தினை காரியத்தினையும் குறிக்கிறது. அதாவது மோட்டார் என்னும் ஆய்தமானது எறியங்களை உயரத்திற்கு செலுத்துவதில்லை ; மாறாக மிக குறுகிய தொலைவிற்கு மட்டுமே செலுத்துகிறது ( கூடியது 4.5கி.மீ). மேலும் அது மனித வலு இல்லாமல் தானகவே எக்கி எறியத்தினை செலுத்துகிறது. அந்த எறிகணையனது எதனையும் தாக்கி ஊடறுத்துச் செல்லும் வலிமை வாய்ந்தது. ஆகவே இச்சொல்லானது mortar என்னும் இங்கிலீசுச் சொல்லுக்கான சரியான தமிழாக்கமாகும்.


இந்த பதிவுகளை வழங்கிய என் அன்பு தோழர்
திரு. நன்னிச்சோழன் அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!


                          தமிழால் இணைவோம் !!!
                            அறிவால் உயர்வோம் !!!
                                       தமிழ் வாழ்க !!!
                     அறிவியலின் தேடல் தொடரும்.
                                   வலியே  " வலிமை "
                              - அய்யனார் (வால்வரின்)..



No comments:

Post a Comment