Pages

Monday, 5 March 2018

Radium த்தின் ஆபத்தை அறிந்திராத காலத்தில்....

Radium த்தின் ஆபத்தை அறிந்திராத காலத்தில்....

ரேடியம் (Radium) என்பது ஒரு கதிர்வீச்சு இயல்புள்ள ஒரு தனிமமாகும்.இதன் குறியீடு Ra.இதன் அணு எண் 88 ஆகும்.இதன் அணுநிறை 226 ஆகும்.அரைவாழ்நாள் 1620 ஆண்டுகளாகும்.இது பொதுவாக தூய வெள்ளை நிறமாக இருப்பினும் வளியில் திறந்துவிடப்படும்போது ஒட்சியேற்றப்பட்டு கறுப்பு நிறமாக மாறுகின்றது.இது கதிர்வீச்சை வெளியிடும் தன்மை கொண்டது.முன்பு அண்மைக் கதிர் மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டது.அதிலிருந்து கதிரியக்கமுடைய ரேடான் வளிமம் வெளிப்பட வாய்ப்பு இருப்பதால் பன்னாட்டுக் கதிரியல் காப்புக் கழகம் அதனை மருத்துவத்திற்காக பயன்படுத்துவதை நிறுத்தக் கேட்டுக் கொண்டது.ரேடியம் , யுரேனியம் கதிரியக்கம் காரணமாகச் சிதையுறும் போது ஆறாவது சேய்தனிமமாக கிடைக்கப் பெறுகிறது.ரேடியத்தைப் போல் ரேடானும் முன்பு கதிர் மருத்துவத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது.

அறிவியலின் தேடல் தொடரும்.
" வலியே வலிமை "
கீழே கொடுக்கப்பட்டுள்ள காணொளி காணுங்கள். 




No comments:

Post a Comment