☸ Einstien's elevator ☸
சைன்டிஸ்ட் களுக்கு பொழுது போகலைனா அப்பபோ ஐன்ஸ்டைன் கோட்பாடுகளில் எதையாவது எடுத்து வைத்து கொண்டு சோதித்தது பார்ப்பார்கள்.
அப்படி ஐன்ஸ்டைன் ஜெனரல் ரிலேடிவிட்டி யில் உள்ள ஒரு ஐடியா தான் ஐன்ஸ்டைன் எலவேடர்...
அதாவது ஒரு 100 வது மாடில எலவேடர்குள்ள நீங்க இருக்கீங்க..
அந்த லிப்ட் ரோப் அறுந்து போய் அப்படியே கீழ விழுந்துட்டு இருக்கு அதுக்குள் இருக்கிற நீங்களும் தான்...
கீழ வந்து பூமியை தொடர வரைக்கும் நீங்க க்ராவிட்டியை உணர மாட்டீங்க...
உங்களை பொறுத்த வரை 0 க்ராவிட்டி பீல்ட் ல இருப்பிங்க....
இந்த சூழல் ல ஸ்பேஸ் ல கொண்டு போய் அந்த எலவேடரை வைத்தால் அதுக்கு உள்ளே இருக்கும் நீங்கள் முன்பு உணர்ந்ததை போல அதே 0 க்ராவிட்டியை உணர்வீர்கள்..
அதாவது லிப்ட் ஓபன் பண்ணி பாகர வரைக்கும் நீங்க ஸ்பேஸ் ல மிதக்கறீங்களா இல்ல free fall ஆ... அறுந்த லிப்ட் ல விழுந்துட்டு இருக்கீங்களா னு தெரியாது.
மேலும் உங்கள் அருகில் இருக்கும் நண்பருக்கும் நீங்கள் கையில் வைத்திருக்கும் காபி கோப்பைக்கும் இதே விதி பொருந்தும்..
இதை ஆய்வு மூலமாக உறுதி செய்ய ஒரு குழு முயன்றது...
மொத்த பூமியை ஒரு தொங்கும் லிப்ட் என கற்பனை செய்தது...
சூரியனை சுற்றி ஓடும் ஓடு தளம் தான் இங்கே "ரோப் அறுந்த பயணம் " இப்பொழுது நடக்கும் பாதிப்பை அளக்க மிக மிக துல்லியமான பல அணு கடிகாரத்தை ஒரே நேரத்தில் இயக்கி வைத்தது. இவற்றில் நான்கு hydrogen masers மற்றும் எட்டு caesium fountain clocks.
ஐன்ஸ்டைன் சரி என்றால் இவை அனைதிலும் பாதிப்பு ஒன்றாகவே இருக்க வேண்டும்.
ஆய்வாளர்கள் இவற்றை 14 ஆண்டுகால இடைவெளியில் சோதித்த போது 0.00000022 plus அல்லது minus 0.00000025. அளவே வித்யாசம் காட்டியது.
ஐன்ஸ்டைன் (வழக்கம் போல ) மீண்டும் ஒரு முறை வெற்றி பெற்றார்.
இந்த பதிவுகளை வழங்கிய
திரு. பிரபு அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment