@படம்
அருமை,
பலருக்கு புதுமை
😇😇😇
✳✳✳✳✳
☸Earth shine பூமி ஒளி ☸
பிறை கவனித்து இருக்கீங்களா (ஆஹா இன்று உலகமே பிறை கவனிக்கும் நாள் ஆச்சே ) பிறை தெரியும் போது நிலாவை கவனித்து இருக்கீங்களா ...
பிறை ஒரு சின்ன கீற்று போல தெரியும் ஆனால் கூடவே முழு நீலாவும் ஒரு மங்கலான ஒளியில் அவுட் லைன் போல தெரியும் .அதற்க்கு காரணம் என்ன தெரியும் அதுதான் "earth shine " பூமி ஒளி.
நமக்கு "நிலவொளி "தெரியும் அதாவது நிலாவில் சூரிய ஒளி பட்டு கண்ணாடி போல பிரதிபலிக்க பட்டு பூமிக்கு தெரிவது.
ஆனால் பூமி ஒளி தெரியுமா ?
நிலா போலவே சூரிய ஒளி பூமியில் பட்டு அது பிரதிபலித்து நிலாவிலும் தெரிகிறது. நமக்கு எப்படி இரவு இருட்டை நிலாவின் பிரதிபலிப்பு ஒளி வெளிச்சமாக மாற்றுகிறதோ அப்படியே நிலாவின் இருட்டை பூமியின் பிரதிபலிப்பு ஒளி வெளிச்சமாக மாற்றுகிறது . அதற்க்கு பெயர் தான் "earth shine ."
என்ன ஒன்னு நம்ம நிலா அளவுக்கு இது ஒளி பொருந்தி இல்லாமல் லோ வோல்டேஜ் நேரத்து குண்டு பல்பு வெளிச்சம் போல மங்களா இருக்கும்.
சரி இந்த மங்கலான வெளிச்சத்தை நாம் பார்க்க முடியுமா ?
முடியும் . அதாவது பிறை நேரங்களில் மட்டும்
அதாவது அமாவாசை முடிந்து பிறைகள் தெரிய தொடங்கும் நேரம் கவனித்து பாருங்கள் நிலாவில் பிறையின் சின்ன ஒளி கீற்று தெரிவது போக மொத்த நிலா ஒரு மங்கலான ஒளியில் பார்க்க முடியும். அந்த மங்கலான ஒளி பூமியின் ஒளி பட்டு கொஞ்சம் நிலா சிறிது வெளிச்சமாக ஆவதனால் தான். (மேலும் அறிய earth shine என்று தேடி பாருங்கள்.
இந்த பதிவுகளை வழங்கிய
திரு. பிரபு அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment