இப்பொழுது கீழே உள்ளவரை நன்கு கவனியுங்கள். இவர் யார் தெரியுமா?
இவரே சிவன்.
ஹோரஸ் (ரா) - எகிப்தின் பழம்பெரும் கடவுளாக போற்றப்படுபவர். ஆகாயத்தின் கடவுளாக பண்டைய எகிப்து மக்களால் வழிபடப்பட்டவர்.
சரி. இப்பொழுது ஹோரஸின் உருவம் எப்படி விவரிக்கப்படுகிறது?
1. கையில் திரிசூலம் போன்ற போர் கருவியை வைத்திருப்பவர்.
2. மலைவாசி போன்று புலித்தோலை ஆடையாய் தரித்திருப்பவர்.
3. தவம் செய்வதற்காக தனது வலக்கரத்தில் ருத்திராச்ச மாலையை ஒத்த மணியை வைத்திருப்பவர்.
4. தலையின் மேல் பாம்போடு காட்சியளிப்பவர்
எங்கேயோ கேள்விப்பட்டதைப்போல் இல்லை?
மேலும் ஒரு ஆய்வு!
ஹோரஸின் பெயர் வரலாற்றைப் புரட்டினோமானால் இன்னும் பல அருமையான தகவல் கிடைக்கும்.
ஹோரஸ் என்னும் பெயர் ஹோர் என்னும் லத்தீன் மொழிச்சொல்லில் இருந்து மருவியதாகும். அதற்கு "தொலைதூரத்தில் உள்ள ஒருவர்" அதாவது எட்டமுடியாதவர் என்று பொருள். ஆதலால் தொடமுடியாத அளவிற்கு உயரத்தில் உள்ள ஆகாயத்தை குறிக்கும் வண்ணம் ஹோரஸ் விண்ணளவு உயர்ந்த கடவுளாக அறியப்படுகிறார்.
ஈசனும் அடிமுடி காணமுடியாதவர் என்று போற்றப்படுபவர். ஆகாய வடிவில் சிதம்பர நடராசராக காட்சியளிப்பவர்.
சிவனின் பல பெயர்களுள் "ஓரையோன்" என்பதும் ஒன்று. திருவாதிரை ஓரை சிவனின் அம்சமாக கருதப்படுகிறது.
ஹோரஸ் என்ற சொல்லும் ஓரையோன் என்ற பண்டைய தமிழ்ச்சொல்லில் இருந்து மருவியிருக்க வாய்ப்பு உண்டு.
ஓரையோன் →ஓரஸ் →(ஹோ)ரஸ்
எகிப்தில் உள்ள 4500 ஆண்டுகளுக்கும் பழமையான உலக அதிசயங்களில் ஒன்றான மூன்று கிசா பிரமிடுகள் திருவாதிரை ஓரை அமைப்பில் உள்ள மூன்று நட்சத்திரங்களுக்கு முறையே நேர் கோட்டில் பூமியில் கட்டப்பட்டுள்ளதாக 1980ஆம் ஆண்டு நடந்த ஆய்வு தெரிவிக்கின்றது. இதன் மூலம் எகிப்தின் கிசா பிரமிடுகளுக்கும் திருவாதிரை ஓரைக்கும் ஏதோ தொடர்பு இருந்திருக்கவேண்டும் என்பது ஆராய்ச்சிற்குரிய செய்தியாகும்.
மேற்கூறிய ஆய்வுகளை வைத்து பார்க்கும்பொழுது சிவனே ஹோரஸாக இருக்க வாய்ப்புகள் உள்ளது!
கீழுள்ள சில இணை மற்றும் காணொளிகளில் கூறப்பட்ட ஆய்வின் விளக்கங்களைப் பொருத்து நான் மேலே கூறியுள்ளேன். இன்னும் பல ஆய்வுகளை மேற்கொண்டால் தமிழின் தொன்மையையும் பண்டைய தமிழர் வாழ்ந்த அனைத்து நிலப்பரப்புகளின் உண்மையையும் அறிய இயலும்!
Egypt REVELATION: Great Pyramid of Giza's ‘correlation to Orion PROVED'
No comments:
Post a Comment