Busy என்ற சொல்லுக்கு தமிழ் சொல் என்ன?
Busy, business ஆகியவை தமிழ் தந்த சொற்கள் என்பதை விளங்கும் முன்பு, பிஸி ( busy) என்றால் என்ன எனக் காண்போம்.
பிஸி என்றால் என்ன?
தன்னை தொடர்ந்து ஒரு செயலில் ஈடுபடுத்திக் கொள்ளுதல், தங்கள் பணியில் ஆக்கிரமித்துக் கொள்ளுதல். அதாவது நீங்கள் பிஸியாக இருப்பதாகக் கொண்டால் நீங்கள் கடினமாக உழைக்கிறீர்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் உங்கள் கவனத்தை செலுத்துகிறீர்கள், உங்கள் பிழைப்பில் மும்முரமாக உள்ளீர் என்று பொருள்.
'பிஸி' என்பது ஒரு தமிழ் மூலச்சொல்லான 'பிழை' என்பதிலிருந்து உருவானது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இச்சொல்லின் சொற்பிறப்பியல் 'பிழை' என்ற தமிழ்ச்சொல்லுடன் உறவைக் கொண்டதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. (பி - யு- எஸ் - ஒய் என Spelling அமைந்தாலும் புசி எனச் சொல்லாமல் பிசி எனச் சொல்லப்படுவதையும் நோக்குக)
பிஸி, பிசினஸ் - இரண்டும் பொதுவான பிழைப்பு என்ற சொல்லை மூலமாகக் கொண்டுத் தோன்றியவை.
பிழை > பிஸி. ( busy)
ழகரம் பிற மொழிகளில் இல்லாத காரணத்தால் இது சகரமாகவும், ஷகரமாகவும் திரிவதே இயல்பு.
ஒத்த திரிபுகளில் சில....
* புழை > புசி (Pussy).
* விழை > விஷ் (Wish).
* விழி > Visit, vision, Wisdom.
* மேழம் > மேஷம்.
ஆக பிஸியாக இருப்பதை “பிழைப்பாகவே இருப்பது " என்றே சொல்லலாம்.
❤️
No comments:
Post a Comment