முதலில் போட்டோ ( Photo) - என்ற சொல் எதைக் குறிக்கிறது, எங்கிருந்து வந்தது என்பதை பார்ப்போமா?
Photograph - என்பது தமிழில் புகைப்படம், நிழற்படம் என சொல்லப்பட்டாலும் 'ஒளிப்படம்' என்பதே பொருத்தமானது.
ஏன் பொருத்தமானது என விளங்கப் பெறுவோம்.
Photo = என்றால் ஒளி.
கிரேக்க மொழிச் சொல்லான Photo (Phos) - என்பதே இதன் மூலம் என அகராதிகள் குறிப்பிட்டுள்ளன. ஆனால் இந்த கிரேக்கச் சொல்லின் மூலம் தமிழ்மொழி என்பது அறியாத மேலைநாட்டு மொழியியலர்களால் எழுதப்பட்டவை இவை.
நாம் அன்றாடம் புழங்கி வரும் ஆங்கிலச் சொற்கள் பலவற்றின் வேர்ச்சொல் மூலம் தமிழென்று அறியாமலேயே வழங்கி வருகிறோம். போட்டோ (Photo) - வும் அவற்றில் ஒன்று!
போட்டோ - என்ற சொல்லின் தமிழ் மூல உறவு விளக்கங்களைப் பார்ப்போமா?
'வெள்' - என்கிற வேர்ச்சொல்லை மூலமாகக் கொண்டு பிறந்த பெரும்பாலான சொற்கள் வெள்ளை (நிறம்) , வெப்பம், வெளிச்சம்(ஒளி) தொடர்புடையவை ஆகும்.
- வெள் > வெளி > வெளிறு = வெளிச்சம்.
- வெள் > வெட்டு > வெட்டம் = வெளிச்சம்.
- வெட்ட = தெளிவான, அதிகமான,
வெட்ட வெளிச்சம் = மிகுந்த ஒளி, மிகத் தெளிவு, வெளிப்படை. - வெள் > வெட்டு > வெட்டுதல் = பளிச்செனல், மின்னுதல்.
- மின்னல் ஒளியை 'மின்னல் வெட்டுகிறது' - சொல்லப்படும் வழக்கை நோக்குக!
சொல் உருவாக்கத்தில்... வகரம் > பகரமாகத் திரியும் என்பது நாம் அறிந்ததே!
வெட்டம் - என்ற ஒளியைக் குறித்த தமிழ்ச்சொல்லிலிருந்து திரிந்து தோன்றியதே Photo.
- வெட்ட > போட்ட > ஃபோட்டோ.
பொட்டாசியம் ( Pottacium), பாஸ்பரஸ் (Phosphorous) - போன்ற சொற்களும் இதே மூலத்திலிருந்து பிறந்தவையே!
இதே வகையில்... ஆங்கிலம் சென்ற பிறத் தமிழ்ச் சொற்கள்.
- வெப்பம் / வெய்வு > Fever.
- வெதுப்பு / வேது > BATH / Bathing.
- வெக்கை / வேகு > BAKE / Bakery.
- வெளுப்பு / வெளிச்சம் > BLEACH.
துக்கடா :
வெள் - ளில் தோன்றிய சொற்கள் :
வெள்ளம், வெள்ளந்தி, வெள்ளி, வெள்ளில், வெள்ளை, வெளி, வெளிச்சம், வெளிறு,வெளு, வெளுப்பு , வெள்கு , வெட்டை, வெட்கை, வெக்கை, வெட்டம், வெயில், வெய்யோன், வெயர்வை, வெப்பம், வேகு (வேகுதல்) , வேனல், வேனில், வேம்பு, வேகம், வேங்கை, வெம்பு, வெம்மை, வெதும்பு, வெதுப்பு, வெதுப்பம், வெதுவெதுப்பான எனப் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும் .
No comments:
Post a Comment