வக்கற்றவன் என்பதன் பொருள் என்ன?
வக்கு - என்ற சொல் வளைதல் பொருள்பட வழியைக் குறிக்கும்.
வக்கு = வழி, வகை, செல்வாக்கு, திறன், ஆற்றல்( means, resources, influence, ability, energy ).
வக்கற்ற = வழியற்ற.
வழி - என்பது இங்கு பிழைக்கும் வழி, சமாளிக்கும் திறன், இடர்களை எதிர் கொள்ளும் ஆற்றல், செயல் திறன், செல்வாக்கு அனைத்தையும் குறிப்பிடலாம் - இடத்திற்கு ஏற்றால் போல.
வக்கு + அற்றவன் = வக்கற்றவன் என்றால் வழியில்லாதவன் / வகையில்லாதவன்/திறன், ஆற்றல் இல்லாதவன் என்று பொருள்.
இந்த பதிவுகளை வழங்கிய என் அன்பு தோழர்
திரு. இரவீந்திரன் சிவன் அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment