Pages

Saturday, 5 December 2020

Logistics - என்பதன் தமிழ்ச்சொல் என்ன?

 

இயலும் தன்மைகளை / ஏற்கக்கூடியவற்றை ஆய்ந்து தேர்ந்து அமைப்பது ஏற்பாடு.

ஏல்+பாடு = ஏற்பாடு என்றால் ஏற்றுக்கொண்ட முறைப்பாடு, தக்க முறைப்பாடு என்று பொருள். அதாவது இருவருக்கிடையே பொதுவாக ஒத்துக்கொள்ளப்பட்ட / ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை. ஆயத்த செயல்முறை, முன்னேற்பாடு என்னும் பொருள்களை வலியுறுத்தும் சொல்.
(முன்னேற்பாடு என்பது முன்கூட்டியே எண்ணிச்செய்யப்படும் ஏற்பாடு).

ஏற்கனவே - என்ற சொல்லை நோக்கவும்.

ஏல் என்பது ஒன்றை ஒப்புக்குக்கொண்டு இணக்கம் தருவது.
ஏல் = ஏற்றல், ஏற்றுக்கொள்ளுதல், ஏற்கை.

எனவே... Logistics என்பதன் பொருத்தமானதாக… ஏற் கை யியல் , ஏற்பாட்டியல் என்று சொல்லலாம். .


இந்த பதிவுகளை வழங்கிய திரு.ரவீந்திரன் சிவன் அவர்களுக்கு , மிக்க நன்றி !!!!


       தமிழால் இணைவோம் !!!
         அறிவால் உயர்வோம் !!!
                  தமிழ் வாழ்க !!!
     அறிவியலின் தேடல் தொடரும்.
               வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..


No comments:

Post a Comment