நாம் வெள்ளை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை, நீலம் நிறங்கள் தவிரப் பிறவற்றைத் தமிழில் குறிப்பதில்லை. இவ் வண்ணங்களையும் தமிழில் குறிப்பது அருகி விட்டது. வண்ணங்களுக்கான பெயர்கள் தமிழில் இல்லை என்பதால் குறிப்பிடவில்லை என்று சொல்வோருக்காக தமிழில் வண்ணங்களின் பட்டியல் அளிக்கப்படுகிறது.
- அடர் சிவப்பு — cramoisy.
- அடர் நீலம் — perse / smalt
- அடர் மஞ்சள் — gamboge
- அயிரை/ அசரை — sandy colour
- செங்குருதி (நிறம்) — heliotrope / haematic
- அருணம் — bright red, colour of the dawn.
- கருநிலம் (நிறம்) — indigo
- அழல் நிறம் — reddish colour of fire
- ஆழ் சிவப்பு — cinnabar
- ஆழ் செந்நீலம் (ஊதா) — claret
- ஆழ் பழுப்பு — brunneous
- ஆழ் பைம்மஞ்சள் — citrine
- ஆழ்சிவப்பு — cramoisy
- ஆழ்நீலச் சிவப்பு — aubergine
- இடலை (ஆலிவ்வு) (நிறம்) — olivaceous
- இருள் சிவப்பு — puccoon
- இருள்சாம்பல் — slate
- இள மஞ்சள் — flavescent / primrose
- ஈய(ம்) (நிறம்) — plumbeous
- ஈரல்நிறம் — Dark red colour, purple colour
- உறைபால்(நிறம்) — whey
- எண்ணெய்க்கறுப்பு — dark black colour
- எலுமிச்சை(நிறம்) — citreous
- ஒண்சிவப்பு — cardinal
- ஒளிர் செஞ்சிவப்பு — phoeniceous
- ஒளிர் செம்மை — coccineous
- ஒளிர் வெண்கலம் — aeneous
- ஒளிர் வெண்கலம்(நிறம்) — aeneous
- ஒளிர்சிவப்பு — puniceous
- ஒளிர்மஞ்சள் — sulphureous / vitellary
- ஒளிர் சிவப்பு — ponceau
- கடல்நீல(நிறம்) — ultramarine
- கடற்பச்சை — cerulean
- கத்தரிநீலம் — periwinkle நித்திய கல்யாணி
- கபிலை / புகர்நிறம் — Tawny, brown or swarthy colour.
- கரு(நிறம்) — sable
- கருஞ்சிவப்பு — porphyrous/purpureal
- கரும்பச்சை — corbeau
- கருமை — nigricant / nigrine
- காயாம்பூ(நிறம்) — purple colour
- கறுப்பு (நிறம்) — black colour
- கிளிச்சிறை — Gold resembling the parrot's wing in colour
- குங்குமச் சிவப்பு — vermeil
- குங்குமப்பூ(நிறம்) — croceate / saffron
- குரால் — Dim, tawny colour
- குருதிச்சிவப்பு — erythraean / sanguineous / incarnadine
- குருதிச்செம்மை — vermilion
- கோமேதக(நிறம்) — topaz
- சருகிலை(நிறம்) — filemot
- சாம்பல் — cinerious
- சாம்பல் பச்சை — caesious / sage
- சாம்பல் மஞ்சள் — isabelline
- சுடர்(நிறம்) — flammeous
- சுடுமண்(நிறம்) — terracotta
- சுதை வெண்மை — cretaceous
- செக்கர் — reddish sky
- செங் கருநீல(நிறம்) — violet / violaceous
- செங்கருப்பு — piceous
- செங்கல்மங்கல் — Dim red colour
- செங்கற்சிவப்பு — lateritious / testaceous
- செந்தீவண்ணம் — colour of glowing fire
- செந்தூரச்சிவப்பு — minium
- செப்புநிறம் — Dark-red colour
- செம்பட்டை — Brown colour of hair
- செம்பவளம் — deep red colour;. Crimson colour. மிகு சிவப்பு
- செம்பழுப்பு — sinopia/ sorrel
- செம்பு — Copper colour;.
- செம்பூச்சி — kermes
- செம்பொன் — titian
- செம்மஞ்சள் — jacinthe
- செவ்வல் (செந்நிறம்) — Redness;
- சோணம் — Red colour, crimson colour
- தசை(நிறம்) — sarcoline
- தவிட்டுநிறம் — Brown, dun colour
- திமிரம் — Colour ofDarkness
- தும்பை (நிறம்) — pure white colour
- துமிரம் — Deep red colour .
- துரு(நிறம்) — ferruginous
- துருச் (சிவப்பு) — rubiginous
- துவர் (சிவப்பு) — Scarlet Red colour,
- துவரி (காவிநிறம்) — Salmon colour
- தூயபழுப்பு — sepia
- தெள்ளுப்பூச்சி (நிறம்) — puce
- நட்டுச்சினைமண் — A kind of earth of the colour of crab's spawn
- நல்சிவப்பு — coquelicot
- நறுமஞ்சள் — lutescent
- நன்மஞ்சள் — luteolous
- நன்னிறம் — White colour
- நீல(நிறம்) — azuline
- நீல மணி — sapphire
- நீலச்சாம்பல் — glaucous / cesious / gridelin / lovat
- நீலச்சிவப்பு — amaranthine / solferino
- நீலப்பச்சை — turquoise / viridian
- பச்சை — chlorochrous
- பசுமை — virid
- பழுக்காய் — Yellowish, orange or gold with red colour, as of ripe areca-nut;
- பழுப்பு மஞ்சள் — fulvous
- பழுப்புச் சிவப்பு — castaneous / rufous / russet / umber
- பழுப்புச்சாம்பல் — greige / taupe
- பளீர்சிவப்பு — stammel
- பனிவெண்மை — niveous
- பாணிச்சாய் ( கள்போன்ற முத்துநிறம்) —Colour of a class of pearls, resembling that of toddy
- பால்வண்ணம் — white colour
- புகர் நிறம் — tawny / tan
- புகைக்கரி — fuliginous
- புள்ளிச் சாம்பல் — liard grey
- புற்பச்சை — prasinous
- புறவு(நிறம்) — columbine
- பூஞ்சல் — Brown- ish colour. மங்கனிறம்
- பூஞ்சாயம்(அழுத்தமான சிவப்பு) — Deep, ruddy colour.
- பூவல் — Red colour
- பைந்நீல(நிறம்) — teal
- பைம்பொன் — chrysochlorous
- பொன் மஞ்சள் — goldenrod
- பொன்மஞ்சள் — luteous
- பொன்மை — aurulent
- மகரம் — Pink colour
- மங்கல் பழுப்பு — fuscous
- மங்கல் பழுப்பு — khaki
- மங்கல்பச்சை — eau-de-nil
- மஞ்சள் — xanthic / icterine / icteritious
- மஞ்சள் பச்சை — chartreuse / zinnober
- மஞ்சள் பழுப்பு — lurid / ochre
- மஞ்சள்சிவப்பு — wallflower
- மணிச்சிவப்பு — rubious
- மணிநிறம் — Dark blue colour, as of sapphire.
- மயில்நீலம் — pavonated
- மரகதப்பச்சை — smaragdine
- மருப்பு (தந்தம்) — eburnean
- மல்லிகை மஞ்சள் — jessamy
- மாமை — dark-brown colour
- முக்கூட்டரத்தம் — Red colour produced by chewing betel, arecanut and lime
- முத்துச்சாம்பல் — griseous
- வளர்பச்சை — virescent
- வாதுமை(நிறம்) — ibis
- வான் நீலம் — cyaneous
- விண் நீலம் — celeste
- விழி வெண்மை — albugineous
- வெங்காயப் பச்சை — porraceous
- வெண்சாம்பல் — hoary
- வெண்மங்கல் — leucochroic
- வெண்மஞ்சள் — ochroleucous
- வெளிர் நீலம் — azure
- வெளிர் பச்சை — celado
- வெளிர் மஞ்சள் — nankeen
- வெளிர் மஞ்சள் பச்சை — tilleul
- வெளிர்நீலம் — watchet
- வெளிர்பழுப்பு — suede
- வெளுப்பு — albicant
- வைக்கோல்(நிறம்) — stramineous
No comments:
Post a Comment