சொல் உருவாக்கத்தில்...
இகர, ஏகாரச் சொற்கள் ஐகாரமாகத் திரிவதை - இதற்கு முன்பே பல உதாரணங்களில் கண்டிருக்கிறோம்.
ஏகம் > ஐக்கியம்.
சிவம் > சைவம்.
விண்ணவம் > வைணவம்.
மிதிலை > மைதிலி.
தீரம் > தைரியம்.
வீரம் > வைராக்கியம்.
சீலம் > சைலம்.
பித்து > பைத்தியம்.
இதே வகையில்... வித்தை - என்ற சொல்லின் திரிபே வைத்தியம்.
- வித்தை > வைத்தியம்.
வித்தை - என்பது தந்திரம், திறன் போன்ற பொருள் குறித்தது. ( Skill, art). தொடக்கத்தில் பொதுப் பெயராக அமைந்த இச்சொல் 'வைத்தியம்' - என உருமாறி பின்னர் - மருந்துகளைத் திறம்படக் கையாளும் மருத்துவரின் - மருத்துவத் திறன் தொடர்பான தனிச்சொல்லாக நிலை பெற்றது.
வைத்தியம் செய்பவர் - வைத்தியர் ஆனார்.
துக்கடா :
வில் - என்ற மூலத்திலிருந்து உருவான சொல் வித்தை ஆகும்.
ஆதிமனிதன் காடுகளில் சுற்றித் திரிந்த காலங்களில் 'வில்' - என்கிற கருவியே அவர்களின் முக்கிய ஆயுதமாக இருந்தது. இதற்கென அவர்கள் முறையாகப் பயிற்சி மேற்கொண்டு வில்வித்தையில் சிறந்தவர்களாக இருந்தனர். அத்தகைய பயிற்சியே 'வித்தை' எனப்பட்டது.
வில் ஓச்சும் திறனைக் கொண்ட சிறந்த வீரர்களை 'வித்தை' யில் சிறந்தவன், வித்தைக்காரன், வில்லாளி எனப் போற்றிப் புகழ்ந்தனர்.
பிற்காலங்களில் வில்லெய்தும் கலை போர்க்கலையாக உருவெடுத்தது. இதிகாசங்களில் நடைபெற்ற போர்களிலும் வில்வழி சண்டை செய்வதே முதன்மையாக இருந்திருப்பதைக் காணலாம்.
இந்த பதிவுகளை வழங்கிய என் அன்பு தோழர்
திரு. இரவீந்திரன் சிவன் அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment