Easter Island 500 Rongo
IBNS என்ற அமைப்பு, பயணத்தாளின் அழகான வடிவமைப்பு, அது சொல்லும் சேதி, அச்சிட்ட நேர்த்தி என்று பல காரணிகளை வைத்து, ஆண்டுக்கு ஆண்டு சிறந்த தாள்களைத் தெரிவு செய்கின்றது. உலக அழகுராணிகள் ஆண்டுக்கு ஆண்டு மாறுவதுபோல, அழகான பணத்தாள்கள் பல வருடத்திற்கு வருடம் அறிமுகமாகிய வண்ணமே இருக்கின்றன.
உதாரணமாக , 2016இல், அந்த வருடத்தின் அதிசிறப்பான பணத்தாள் என்று உலக பணத்தாள்கள் அமைப்பு (IBNS) தெரிவு செய்தது , இன்று சிறப்பானதாக நோக்க முடியாது.
120 உலக நாடுகளின் பணத்தாள்கள் இந்தப் போட்டிக்குச் சமர்ப்பிக்கப்பட்டன.
சுவிஸ் நாட்டின் 50 பிராங் தாளே முதலிடத்தைப் பிடித்தது.
இதன் வடிவமைப்பும் அது சொல்லும் சேதியும் மிகச் சிறப்பானதாக நடுவர்களால் நோக்கப்பட்டது.
Runners up என்ற பட்டியலில் மேலும் மூன்று நாடுகளின் பணத்தாள்கள் தெரிவாகின.
மாலைதீவின் 1000 Rufiyaa
ஆர்ஜென்டீனாவின் 500peso
ஸ்கொட்லாந்தின் பொலிமர் பணத்தாள் 5 pound
2017இல்
நோர்வேயின் 100 குரோனர்
Gibraltar-100பவுண்ட்ஸ்
மெக்ஸிக்கோ 100 peso
என் பார்வையில் Trinidad and Tobago (மே.இந்திய தீவு) 2014இல் வெளியிட்ட கண்ணைக் கவரும் 50 DOLLAR பணத்தாள் சிறப்பு பெறுகின்றது. இந்த ஆண்டின் சிறந்தது என்ற Banknote Award இதற்குக் கிடைத்தது. . இங்கு அச்சிடப்பட்ட முதல் பொலிமர் தாள் இதுதான்...
இன்னொரு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பணத்தாள் உகண்டாவில் அச்சிடப்பட்ட50000 ஷில்லிங்ஸ் பணத்தாள்.
வருடாவருடம் சிறந்த பணத்தாளை , மேலே குறிப்பிட்ட அமைப்பு தெரிவு செய்யும்போது அதன் வாக்காளர்கள் ஓட்டுப் போட வேண்டும்.
முதற் தடவையாக அனைத்து அங்கத்தவர்களின் வாக்குகளையும் அள்ளிச் சென்ற பணத்தாள் இதுதான்.உகண்டா நாட்டின் இதயத்தைக் காண்பிக்கும் தாளின் முன்பக்கத்தில், இவர்கள் பாரம்பரிய முறைப்படி அணியும் Karimojong தலைப்பாகையுடன் ஒரு மனிதனைக் காண்பித்துள்ளது இதன் விஷேஷம். பூமத்திய ரேகை, Silverback என்று சொல்லப்படும் மலைவாழ் கொரில்லாக்கள், என்றெல்லாம் பலவற்றைக் காண்பித்திருக்கிறார்கள்..
முத்திரைகள், போல பணத்தாள்கள் நாட்டின் கதைசொல்லிகள்
ஒரு காலத்தில் முத்திரைகள் சேகரித்தேன். அந்தக் காலம் போய், அப்பொழுது சேகரிப்பில் பல நாட்டு பணத்தாள்கள்...அடுத்து என்ன தொடருமோ தெரியவில்லை.
இந்த பதிவுகளை வழங்கிய தோழர் திரு.ஜேம்ஸ் ஞானேந்திரன் அவர்களுக்கு மிக்க நன்றி !!!!
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment