Pages

Monday, 23 November 2020

குதிரைக்கு தமிழில் எத்தனை சொற்கள் உள்ளன?

 குதிரைக்கு தமிழில் எத்தனை சொற்கள் உள்ளன?

குதிரைக்கான ஏனைய தமிழ்ப்பெயர்கள் பின்வருமாறு:

  1. அயம்
  2. அரி
  3. ஆம்புலம்
  4. ஆம்புவம்
  5. ஆம்பூறு
  6. இவுளி
  7. உத்தமாரம்
  8. உத்தரி
  9. உயமா
  10. உளைமான்
  11. உன்னி
  12. கங்கானம்
  13. கண்ணுகம்
  14. கத்துருவம்
  15. கந்தருவம்
  16. கந்துகம்
  17. கலிமா
  18. கலிமான்
  19. கற்கி
  20. கனவட்டம் = கனத்த, வளமான பாண்டியன் குதிரை. நன்றி: இராமகி ஐயா
  21. காண்டம்
  22. கிங்கிரம்
  23. கிள்ளை
  24. குசுலம்
  25. குந்தம்
  26. குரகதம்
  27. குரை
  28. குலிங்கம்
  29. கூந்தன்மா
  30. கொக்கு
  31. கொய்யுளை = பிடரி மயிரை வெட்டிவிடுவதால், கொய்யுளை (வெட்டிய பிடரி மயிர்) | நன்றி: இராமகி ஐயா
  32. கோடகம்
  33. கோடரம்
  34. கோடலாம்
  35. கோடை
  36. கோணம்
  37. கோரம் = குல்>குரம்>கோரம்= உருவிற் பெரிய, வலிந்த குளம்புள்ள சோழன் குதிரை. (தெ. குர்ரமு= குதிரை.) நன்றி: இராமகி ஐயா
  38. சடிலம்
  39. சத்திகம்
  40. சிகி
  41. சைந்தவம்
  42. தூசி
  43. தாராம்
  44. துரகம்
  45. தெரிசி
  46. தேனு
  47. நடையன்
  48. நாணுகம்
  49. பத்திரி = ஆடுமாடு விரட்டல் பத்துதலாகும். பத்திரி= பத்தலுக்கான குதிரை | நன்றி: இராமகி ஐயா
  50. பதி
  51. பரி
  52. பரிமா
  53. பாடலம் = படபட>பாடு>பாடலம்= விரைவுகாட்டும் சேரன் குதிரை (படு>பாடு= பெரியது. படபட= வேகக் குறிப்பு). | நன்றி: இராமகி ஐயா
  54. பாணல்
  55. பாய்மா
  56. புரவி
  57. புருவம்
  58. பூபாலன்
  59. மண்டிலம்
  60. மாவயம்
  61. வன்னி
  62. வாகம்
  63. வாரகம்
  64. விடலம்
  65. வைந்தவம்
    • ஒருவகைக் குதிரை - நீலன்
    • ஆண் குதிரையை குறிக்கும் சொல்:-
  1. மா
  2. சே
  3. குண்டு
  4. சேவல்
  • பெண் குதிரையை குறிக்கும் சொல்:-
  1. பெட்டை
  2. குசை
  3. பிணை
  4. மாதுவான்
  5. வடவை
  • குதிரையின் பிள்ளை மரபுப் பெயர்:-
  1. மறி
  2. சிறு குதிரை
  3. மட்டம்
  4. வாலகுதிரை
  • குதிரைக் கூட்டம் :- ஆசுவம்
  • பறக்குங் குதிரை (unicorn) :- ஆகாசகாமி
  • பெருங்குதிரை:- தேசை, தேசி
  • போர்க் குதிரை :- வாகீரம்
  • பழக்கப்படாத குதிரை:- கோரா
  • வெள்ளைக் குதிரை:- நரை

  • பிற்சேர்க்கை: (9/16/2020)
  • mule
  1. கோவேறு கழுதை
  2. பெருங்கரம்
  3. அத்திரி
  4. நெடுங்கழுத்தன் - நீண்ட கழுத்துள்ள கோவேறு கழுதை (சூடா.)

No comments:

Post a Comment