Pages

Friday, 27 November 2020

தமிழில் Month-ஐக் குறிக்கும், மாதம், திங்கள் ஆகிய இரண்டும் ஒரே பொருளைக் குறிப்பவைதானா?

 

திங்கள், மாதம் - இரண்டுமே நிலவின் தொடர்புடைய பெயர்கள்.

திங்களுக்கு பொருள் என்ன?

1. திங்கள் : திகழும் அளவை / தோற்றத்தின் அளவைக் குறித்ததால் 'திங்கள்' எனப்பெயர் பெற்றது.

* திகழ் - என்றால் ஒளி , தோற்றம் என்று பொருள்படும்.

திகழி - என்பது நிலவு திகழும் அளவைப்பொருத்து அமைவது.
திகழி > திகதி > தேதி ஆனது.

( திங்கள் - என்பது மாதம், கிழமை இரண்டையும் குறிக்கும். ஆங்கிலத்திலும் Moon - என்ற நிலவைக் குறிக்கும் சொல்லிலிருந்து தோன்றியதே Month , Monday ஆகியன.).

2. மாதம் என்பது என்ன?

மாதம் : மதி+ அம் = மாதம்.

மதி - என்பதும் அளவைக் குறித்து உருவான சொல் - பின்னர் நிலவையும் குறித்தது.

(வானில் இருக்கும் நிலவின் அளவைக் கண்டறிந்து , இதுமாதத்தின் எத்தனையாவது நாள் என்று கணிக்கும் முறையே சந்திர நாட்காட்டி (Lunar Calendar) எனப்பட்டது ) .

* மா - என்பது அளவைக் குறித்த அழகான தமிழ்ச்சொல்.
* மா - மாத்தல் என்றால் அளத்தல் .
* மாத்திரை - கால அளவு.
* எம்மாத்திரம், எம்மாம் பெரிசு = எவ்வளவு
* மதிப்பு - ஏற்றுமதி, இறக்குமதி.

'மா' என்ற அளவைக் குறித்த சொல்லை மூலமாகக் கொண்டு பிறந்த ஆங்கிலச் சொற்கள் ஏராளம்.
அவற்றில் சில. ..
Moon , Month, Monday, Monsoon , Menses/ Menstruation , Meter, Measure, Much, Mega, Monster,
Major / Majority , Magnum, Maximum, Minor/ Minority.........


இந்த பதிவுகளை வழங்கிய தோழர் திரு. இரவீந்திரன் சிவன் அவர்களுக்கு , மிக்க நன்றி !!!!!

             தமிழால் இணைவோம் !!!
              அறிவால் உயர்வோம் !!!
                        தமிழ் வாழ்க !!!
         அறிவியலின் தேடல் தொடரும்.
                    வலியே  " வலிமை "
          - அய்யனார் (வால்வரின்)..

No comments:

Post a Comment