ஒன்று என்பதைக் குறிக்கும் ஏகம் என்ற சொல்லிலிருந்து உருவானதே ஐக்கியம் என்ற சொல்.
ஏகம் என்பது ஒன்றைக் குறிப்பது.
ஐக்கியம் = ஒன்றிணைந்த, ஒன்றுபட்டதைக் குறிக்கும்.
இகர, எகரச் சொற்கள் ஐகாரமாகத் திரிவதும் சொல் உருவாக்கத்தில் இயல்பாகக் காணமுடிகின்ற ஒன்று.
- ஏகம் > ஐக்கியம்.
ஒத்த திரிபுகள் :
- தீரம் > தைரியம்.
- சிவம் > சைவம்.
- விண்ணவம் > வைணவம்.
- மிதிலை > மைதிலி.
- பித்து > பைத்தியம்.
- வித்தை > வைத்தியம்.
- வீரம் > வைரம், வைராக்கியம்.
- சீலம் > சைலம் ( சேலம்).
இதே வகையில் உகரம் > ஔகாரமாகத் திரியும்.
- சுகம் > சௌக்கியம்.
- சுந்தரம் > சௌந்தர்யம்.
- புத்தம் > பௌத்தம்.
- பூதிகம் > பௌதிகம்.
- முன்னம் > மௌனம்.
- குமாரம் > கௌமாரம்.
- ருத்ரம் > ரௌத்திரம்.
- யுவன் > யௌவனம்.
- உலகம் < லோகம் > லௌகீகம்.
இதே வகையில் திரிந்த சொற்களை உங்களாலும் கண்டுபிடிக்க முடிந்தால் சொல்லுங்கள்.
No comments:
Post a Comment