Pages

Wednesday, 25 November 2020

Easy மற்றும் Simple ஆகிய சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள்

 Easy மற்றும் Simple ஆகிய சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள் எவை?



ஈசி (easy) - என்றால்...
எளிதான; கடுமை இல்லாத / கடினமற்ற; சிக்கலற்ற; இயல் எளிமை வாய்ந்த வற்றைக் குறிக்கும். (not difficult).

சிக்கலின்மை, தொல்லையின்மை, கடினமின்மை.

வாட்டமான (செளகரியமான) , ஓய்வமைதி தருகிற மற்றும் கவலையற்ற (comfortable, relaxed and not worried).

  • எளிது x கடினம்.

சிம்பிள் (simple) - என்றால்...
புரிந்துகொள்ள, செய்வதற்கு /பயன்படுத்த எளிதாக உள்ள; கடினமானதாகவோ சிக்கலானதாகவோ இல்லாத; எளிய தன்மை கொண்டவை.

(easy to understand, do or use; not difficult or complicated)

சிம்பிள் = ஒப்பனையோ தேவையற்ற மிகைச் சேர்க்கையோ இல்லாத; எளிமையான; இயல்பாகவே எளிமையுடைய; பகட்டில்லாத தன்மை கொண்டவற்றினையும் குறிக்கும்.

(without decoration or unnecessary extra things; plain and basic).

இங்கு எளிமையின் எதிர்ப்பதம் மிகைப்படுத்தல், பகட்டு போன்றவற்றைக் குறிப்பதாகும்.



No comments:

Post a Comment