விண்ணப்பங்களில் உள்ள வினாவை நிரப்பும் பொழுது அதில் ஆண் மற்றும் பெண் என்ற பிரிவிகள் கொண்ட வினாவில் உள்ள பொருள்.
செக்ஸ் ( Sex) - என்றால் பிரிவு என்று பொருள்.
(Sex - refers to division ; dividing of something into parts ; the action or an instance of cutting or separating by cutting).
உயிரினங்களின் இனப்பெருக்க செயல்பாடுகளின் அடிப்படையில் வைக்கப்படும் முக்கிய பிரிவுகளில் ஆண்பால் மற்றும் பெண்பால் என இரு பிரிவுகளாக்கப்பட்டது நாம் அறிந்ததே!
Sex - என்ற சொல் மட்டுமல்ல இதன் உறவுச் சொற்களான section, sector, seconds, secant , segment, segregate - போன்ற அனைத்தும் ஒரே மூல வார்த்தையிலிருந்து உருவானது.
இலத்தீன் சொற்களான (Sexum) செக்ஸம், (Sexus) செக்ஸஸ் இவற்றின் மூலம் என அகராதிகள் குறிப்பிட்டுள்ளன. ஆனால்... இந்த இலத்தீன் சொற்களின் மூலம் தமிழ்ச்சொல்லான 'செகு' - ஆகும்.
- செகு, செகுதல் = பிரி , பிரிதல், அழிதல்.
- செகுத்தல் = பிரித்தல், வெட்டுதல்.
* சாகை = கிளை, பிரிவு, வகுப்பு. (பகு > பகல் > பால் = ஆண்பால், பெண்பால்). - செகு > செகுதி > சாதி (பிரிவு). சமூகத்தின் பிரிவுதானே சாதி.
- செகு > செக்கு - தானியங்களில் இருந்து எண்ணெய் 'பிரிக்கும்' முறை.
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment