ஆக்டோபஸ் (Octopus) பற்றி உங்களுக்கு தெரிந்த சுவாரஸ்யமான தகவல்கள்
ஆக்டோபஸ் என்பது ஒரு ஆழ்கடல் விலங்காகும். தூய தமிழில் கூற வேண்டுமென்றால் எண்காலி என்று கூறலாம். எண்காலி அல்லது சாக்குக்கணவாய் (ஆங்கிலம்: Octopus) என்பது மெல்லுடலி தொகுதியைச் சேர்ந்த கடல்வாழ் குடும்பம் ஆகும். இக்குடும்பத்தில் உள்ள இனங்கள் அனைத்தும் எட்டு கிளை உறுப்புகளைக் கொண்டுள்ளதால் எண்காலிகள் என்று அழைக்கப்படுகின்றன.
மேலுள்ள விளக்கத்தின் படிமப் பிரிவு : கூகுள் விக்கி
எண்காலியைப் பற்றிய பல அரிய தகவல்களைக் கீழே பகிர்கிறேன்.
1. எண்காலிக்கு மூன்று இதயங்கள் உள்ளன. ஒரு இதயம் எண்காலியின் உறுப்புகளுக்கு இரத்தத்தை கொண்டு செல்லும். மற்ற இரு இதயங்களும் அதனுடைய செவுல்களுக்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும்.
2. எண்காலி நீல நிற இரத்தத்தை கொண்டது. ஹீமோசயனின் என்று அழைக்கப்படும் தாமிரம் சார்ந்த புரதம் அதற்குள் இருப்பதனால் அதன் இரத்தம் நீல நிறத்தில் உள்ளது.
3. எண்காலி எலும்புகள் அற்ற கடல்வாழ் விலங்கு. இறுகிய இடத்தில் கூட தன்னை பிழிந்து சிறிது படுத்திக்கொண்டு நுழைந்து செல்லும் ஆற்றலுடையது.
4. எண்காலி தன்னை வேட்டையாட வரும் விலங்குகளின் மேல் தன்னுள் இருக்கும் நீல நிற மையை பீச்சி அடிக்கும்.
5. எண்காலி சக்தி வாய்ந்த தாடையையும் விஷம் பொருந்திய எச்சிலையும் கொண்ட கடல்வாழ் உயிரினமாகும்.
6. எண்காலி தண்ணீரில் நீச்சல் அடித்துச்சென்றால் அது எளிதில் சோர்வடைந்து விடும். ஆதலால் அது மெல்ல நகர்ந்து செல்லும்.
7. எண்காலிகள் பல அளவுகளில் உள்ளன. பொதுவாக 12 முதல் 36 அங்குலங்கள் வரை உயரமும் 3 முதல் 10 கிலோ கிராம் வரை எடையும் கொண்டு இருக்கும்.
8. தி ஜெயின்ட் பசிபிக் ஆக்டோபஸ் என்று அழைக்கப்படும் எண்காலியின் உயரம் 16 அடி ஆகும். இதன் எடை 50 கிலோ ஆகும். இதுவே உலகின் மிகப்பெரிய எண்காலி என்று கருதப்படுகிறது. ஆக்டோபஸ் ஒல்பி என்று அழைக்கப்படும் எண்காலி ஒரு அடிக்கு கீழ் உயரமும் ஒரு கிராமுக்குக் கீழ் எடையும் கொண்டதாகும். இதுவே உலகின் மிகச்சிறிய எண்காலியாகும்.
9. எண்காலிகள் பொதுவாக தனித்து இருக்க விரும்பும். அவை மற்றொரு எண்காலியுடன் மிகவும் குறைவாகவே தொடர்பு கொள்ளும்.
10. எண்காலிகள் தங்களை மற்ற கடல் விலங்குகளிடம் இருந்து காத்துக் கொள்வதற்கு சில சமயங்களில் தங்களைச் சுற்றியிருக்கும் சூழலுக்கேற்ப நிறத்தை மாற்றிக் கொள்ளும். அவை நீலம், பின்க், பச்சை போன்ற நிறங்களுக்கு தங்களை மாற்றிக் கொள்ளும் தன்மையுடையன.
11. மிமிக் ஆக்டோபஸ் என்கின்ற ஒரு வகையான எண்காலி மிக ஆபத்தான கடல் வாழ் உயிரினங்களான ஈல் மீன் மற்றும் லயன்பிஷ் போன்றவற்றைப் போல் தோற்றத்தை மாற்றிக் கொள்ளும் தன்மையுடையது என்று உலக விலங்குகள் மையத்தின் ஆய்வு வெளியிட்டுள்ளது.
12. எண்காலிகளின் கைகள் வெட்டப்பட்டாலும் அது மீண்டும் வளருமாம்.
13. எண்காலிகள் இறால் மற்றும் சுறாமீன் போன்றவற்றின் மாமிசத்தை விரும்பி உண்ணும்.
14. எண்காலிகளின் ஆயுட்காலம் சராசரியாக ஆறு மாதங்கள் ஆகும். நார்த் பசிபிக் ஆக்டோபஸ் ஜெயின்ட் போன்ற வெகு சில வகைகளே 5 ஆண்டுகள் முடிய உயிர் வாழுமாம்.
15. பெண் எண்காலிகள் 200,000 முதல் 400,000 வரை முட்டைகள் இடுமாம்.
16. 296 மில்லியன் ஆண்டுகளுக்கும் முற்பட்ட ஒரு மிகப்பழைய எண்காலியின் தொல் எச்சமானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது டைனோசர்களின் காலங்களுக்கும் முந்தைய காலம் ஆகும்.
மேலும் பல அரிய தகவல்களை அறிந்து கொள்ள கீழ்வரும் இணையை சொடுக்குங்கள்.
No comments:
Post a Comment