Pages

Thursday, 19 November 2020

உலக மொழியில் உள்ள மற்ற மொழிகளை எளிதாக கற்பது எப்படி?

 

  1. மொழியியலில் பல்வேறு கோட்பாடுகள் உண்டு. அவற்றுள் முக்கியமானது கற்றல் மற்றும் கையகப்படுத்தல் ( learning & acquisition hypothesis)
  2. உங்கள் தாயிடமிருந்து நீங்கள் உங்கள் தாய்மொழியை கையகப்படுத்தி இருக்கிறீர்கள்( acquired), கற்கவில்லை.
  3. விழிநிலையில் (conscious)கற்றல்( learning) ஏற்படும், ஆழ்நிலையில்தான்(subconsious) கையகப்படுத்துதல் ( acquisition) ஏற்படும்.
  4. விழிநிலை கற்றல் ( Conscious learning), மிகவும் சுலபமானது ஆனால் காலப்போக்கில் மறந்துவிடும்(உ.தா: ஆங்கில இலக்கணம், கணக்கு சூத்திரங்கள் ) , ஆழ்நிலை கையகப்படுத்துதல் ( subconscious acquisition) எப்போதும் மறக்காது, உ.தா: உங்கள் தாய்மொழி.
  5. சிறுவயதில் உங்களுக்கு தன்முனைப்பு (ego) அச்சம் ( anxiety) வெட்கம் , நாணம் (shyness)சிறு துளியும் இருக்காது . அதனால் சொல்லாடல் தவறாக இருந்தாலும் உங்களால் மேற்கூறிய எந்த உணர்விற்கும் ஆட்பட முடியாது
    1. உதாரணம் : தாத்தா நாளைக்கு ஊருக்கு வந்தார் ( ஆனால் நாட்கள் செல்ல செல்ல நீங்களே சரி செய்து கொள்வீர்கள் )
  6. ஆனால் வயது முதிர்ச்சி வந்ததும் மேற்கூறிய தன்முனைப்பு, அச்சம், நாணம் அனைத்து உணர்வுகளும் வருவதனால்தான் நம்மால் கையகப்படுத்த முடிவதில்லை.
  7. என் தாய் மொழி சௌராஷ்ட்ரா. ஆனால் நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் மதுரையில். தமிழ் என் முதன்மொழியானது, அதனால் சிந்திக்கும் ஆற்றல் அனைத்தும் தமிழ் மொழியில்தான்.
  8. என் உறவுகளை தவிர்த்து என் சுற்றம்(நண்பர்கள், அண்டை வீட்டார்) அனைவரும் தமிழர்களே, அதனால் என்னால் சர்வ சாதாரணமாக தமிழில் உரையாட முடியும், அதற்கு முக்கிய காரணம், நான் தமிழ் மொழியை கையகப்படுத்தி இருக்கின்றேன், கற்கவில்லை.
  9. அதே போல் என் நண்பர்களும் மிக இயல்பாக என் தாய்மொழியில் உரையாடுவார்கள்.
  10. எந்த மொழியை கையகப்படுத்த நினைக்கின்றீர்களோ அந்த மொழியில் மட்டும் வாழுங்கள், முடிந்தால் அங்கு சென்றே வாழுங்கள், சுற்றத்தின் ஆக்கபூர்வ தாக்கம் உங்களுக்கு உதவும்.
  11. மேற்கூறிய உணர்வுகளை பற்றி பயம் கொள்ளாமல் பயிற்சி செய்யுங்கள், எந்த மொழியையும் வசப்படுத்தலாம் .

நன்றி :

  • Krashen, Stephen D. Second Language Acquisition and Second Language Learning. Prentice-Hall International, 1988.
இந்த பதிவுகளை வழங்கிய திரு.செந்தில் பாபு அவர்களுக்கு , மிக்க நன்றி !!!!

                      தமிழால் இணைவோம் !!!
                        அறிவால் உயர்வோம் !!!
                                  தமிழ் வாழ்க !!!
                 அறிவியலின் தேடல் தொடரும்.
                              வலியே  " வலிமை "
                        - அய்யனார் (வால்வரின்)..


No comments:

Post a Comment