Pages

Thursday, 5 November 2020

தோட்டா என்பது உருது சொல் தோட்டா என்னும் சொற்களுக்கு தமிழ் சரியான சொல் சன்னம்.

 தோட்டா என்பது உருது சொல் தோட்டா என்னும் சொற்களுக்கு தமிழ் சரியான சொல் சன்னம்.

கலைச்சொற்கள்

  1. சன்னம் - bullet
  2. கோது - case
  3. எரியூட்டி - primer
  4. வெடிபொதி - cartridge

ஒருமுறை சுட்டபின் அதே தோட்டாவை எடுத்து திரும்பவும் சுட முடியுமா?

. முடியாது முடியாது.... மறுபடியும் எல்லாம் எடுத்து கோதினுட் போட்டு சுட வாய்ப்பே இல்லை. ஏனெனில் அதை சுட்டால் அது போய் எங்கையாவது தரையில் முட்டி அதன் முன்பகுதி சிதைந்து விடும். பிறகு அதை எடுத்து குப்பையில்தான் போட வேண்டும்... ம்ம்.. இதோ இப்படி ஆகிவிடும்!

செப்பு சன்னங்கள்:

(இக்காலத்தில் பயன்படுத்தப்படுபவை செப்புச் சன்னங்களே!)

இல்லை, அதை மீண்டும் பயன்படுத்த வேண்டும் அடம்பிடித்தீர்களானால் சிதைந்த சன்னத்தை தொழிற்சாலைக்கு எடுத்துச் சென்று அதை உருக்கி அந்த உலோகத்தினைக் கொண்டு மீண்டும் புதிய சன்னத்தை உருவாக்கித்தான் பயன்படுத்த வேண்டும்.. இதற்கெல்லாம் பெரும் செலவு ஆகும். இதற்கு மாற்றாக பேசாமல் கொத்தாக கிடைக்கும் பெரும் செலவாகாத குறைந்த விலைகொண்ட புத்தம் புதிய சன்னத்தை வாங்கிச் சுட்டுவிட்டுப் போகலாம்.. அதுவே சாலச் சிறந்தது.

குறிப்பு : இக்காலத்தில் பயன்படுத்தப்படுவபவை செப்பாலான சன்னங்களே! ஆனால் 1980 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலத்தில் பயன்படுத்தப்பட்டது ஈயத்தால் ஆன சன்னங்கள். இவை மேற்கண்டவை போல சிதையாது.. ஆனால் அதன் உருவத்தில் இருந்து திரிந்து விடும். தேவைப்படின் அதை எடுத்து சீரமைத்து புதிய எரியூட்டி(primer) மற்றும் வெடிமருந்தினை கோதினுள் நிரப்பி இதையும் அதற்குள் வைத்தீர்கள் என்றால் புதிய வெடிபொதி சுற்று (a round of cartridge) அணியம்(ready) !

இந்த பதிவுகளை வழங்கிய மதிப்பிற்குரிய தோழர் திரு. நன்னிச்சோழன் அவர்களுக்கு மிக்க நன்றி !!!!

No comments:

Post a Comment