Pages

Tuesday, 3 November 2020

அருமையான மனோதத்துவங்கள்

 இங்கே நான் அருமையான மனோதத்துவங்கள் என்று நினைக்கும் சிலவற்றை பதிவிடுகிறேன்:

  • ஒரு வாக்குவாதத்தை வெல்லுவதற்கு மிக இலகுவான யுக்தி - வினா எழுப்புதல்.
  • உங்களுடைய கருத்துக்களை மற்றவர்கள் மதிக்க வேண்டுமென்றால் உங்கள் அப்பா குறிப்பிட்டார் என்று சொல்லுங்கள். பெற்றோர் அறிவுரை என்றால் மனிதர்கள் கண்மூடித்தனமாக எதையும் நம்புவார்கள்.
  • உங்களுக்கு மேல் யாராவது அடக்கமுடியாத ஆத்திரத்தோடு இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு மிக அருகில் போய் இருங்கள். முகத்துக்கு முகம் பார்க்கமுடியாது அதோடு அவர்கள் குரல் சட்டென்று கீழ் விழும்.
  • உங்கள் உரையை எவராவது அவதானமாக கேட்கிறார்களா இல்லையா என்று சோதிக்க நீங்கள் கடைசியாக உரைத்த வசனத்தை இரண்டாவது தடவை ஒரு சின்ன மாற்றத்தோடு சொல்லிப் பாருங்கள். அவர்கள் முக பாவனை மாறினாலோ அல்லது நீங்கள் சொன்ன பகுதியில் அவர்கள் குழம்பி வினா எழுப்பினாலோ அவர்கள் அவதானம் செலுத்துகின்றனர்.
  • உங்களுக்கு ஒருவர் நம்பர் கொடுக்கும் போது அந்நம்பர் மெய்யா பொய்யா என கண்டறிய மீண்டும் அவர்களிடம் அந்நம்பரை சற்று வழுவோடு சொல்லிப் பாருங்கள். அவர்கள் "சரி" என்றால் பொய்.
  • சம்பாஷனைகளின் போது ஒருவர் உங்களை ஆமோதிக்க வேண்டுமென்றால் கதைக்கும் போதே தலையை 'ஆம்' என்பது போல் மேழுங்கீழுமாக சற்றாக அசைத்து அசைத்து கண்களால் அவர்களது கண்களை நோக்குங்கள். அவர் மீண்டும் உங்களது தலையசைவை ஒப்பிப்பார்.
  • உங்கள் சிநேகிதரோடு சம்பாஷிக்கையில் அவர் சொன்னதை உங்கள் சொல்லாட்சியில் உல்ட்டா அடித்து விடுங்கள். அவர் நீங்கள் ஒரு நல்ல செவியாளர் என்று கருதுவார்.
  • கலந்துப்பேச்சாடையில் நீங்கள் பேசுபவரின் பெயரை அடிக்கடி பயனறுங்கள் - குறிப்பிடுங்கள். இப்படி அவரது மெய்ப்பெயரை குறிப்பிடுவதால் அவர் நீங்கள் அவருக்கு மதிப்பளிக்கிறீர்கள் நேசிக்கிறீர்கள் என்று நினைப்பார்.
  • ஏதாவது ஒரு விடயத்தில் ஒருவர் உங்கள் முடிவை ஆதரிக்க வேண்டுமாயின் நீங்கள் ஆதரிக்க வேண்டும் விடயத்தோடு இன்னும் இரண்டு விடயங்களை கோர்த்து அவருக்கு ஏதாவது ஒன்றை கருதுமாறு குறிப்பிடுங்கள். நீங்கள் வேண்டுவதை இறுதியாக குறிப்பிடுங்கள். அவர் இறுதியான வாய்ப்பையே தேர்வெடுப்பார்.
  • நீங்கள் பிறர் பற்றி குறிப்பிடும் விடயங்கள் பிறர் உங்களை பற்றி விபரிக்கையில் செல்வாக்குச் செலுத்தும். உங்களை பற்றி பிறர் யோசிக்கையில் நீங்கள் கலந்துரையாடலில் உபயோகிக்கும் அடைமொழிகள் சொற்களை தொடர்புபடுத்தியே பார்ப்பார்கள். உங்களை அதை பயன்படுத்தியே விபரிப்பார்க்ள.

No comments:

Post a Comment