Pages

Monday, 9 November 2020

கோலார் தங்கவயல் கதையும் , நிஜமும்


நம்மிடம் ஒரு அறியாமை உண்டு! "இந்தியாவிலுள்ள எல்லா விஷயங்களும் ஆங்கிலேயர்களால் தான் கண்டுபிடிக்கப்பட்டது, நமக்கு அதற்கு முன்பு ஒரு மண்ணும் தெரியாது!" என்று ஒரு பரப்புரை நம் தமிழ்நாட்டில் நடக்கிறது!

உண்மையில் கோலார் தங்க வயல் மற்றும் இந்தியாவின் முதல் தங்க சுரங்கம் ஆங்கிலேயர்களால் கண்டுபிடிக்கப்பட்டது என்பது வரலாற்று ஆராய்ச்சியாளர்களால் எழுதப்படுவது!

கோலார் தங்கவயல் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து தங்கச் சுரங்கம் மற்றும் தங்கம் வெட்டி எடுக்கும் கலை சோழர் காலத்தில் இருந்து நடைமுறையில் உள்ளது ! கட்டிடகலை மட்டுமல்ல உலோக்கலை என்ற Mettalurgy சோழர் காலத்தில் வளா்ந்திருந்தது!

குறிப்பாக இன்றைய கோலார் அமைந்துள்ள கர்நாடகா, ஒரு காலத்தில் சோழர்கள் ஆட்சியில் இருந்த பிரதேசம் !அப்போதுதான் அந்த இடம் தங்கம் கொடுக்கும் சுரங்கமாக மாறியது!

இந்தியர்களின் சாதனை குறிப்பாக சோழர்களின் சாதனையை வரலாற்றில் மறக்கடிக்க செய்யும் ஒரு முயற்சி, KGF Kolar Gold mining என்று ஆங்கிலத்தில் பெயரிட்டு ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்ததாக கூறுவது!

கர்நாடகத்தில் உள்ள ஹட்டி எனும் தங்க சுரங்கம் இரண்டாயிரம் வருடங்கள் பழமையானது ! இங்கிருந்து தங்கம் சிந்து சமவெளி பிரதேசத்திற்கு அனுப்பப்பட்டது!

இப்படி ஒரு முன்னுரையுடன் கோலார் தங்கவயல் உருவான கதை நாம் பார்க்கலாம்

1799ஆம் ஆண்டு ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனிக்கும் திப்புசுல்தானுக்கு நடந்த ஒரு முக்கியமான போரில் ஆங்கிலேயப் படை அந்த கோலார் தங்கவயல் இருக்கும் பகுதியை வென்றது!

அந்த பகுதியை மைசூர் சமஸ்தானத்துக்கு வழங்குவதற்கு முன்பு , ஆங்கிலேயர்கள் அந்தப்பகுதியை லெப்டினன்ட் வாரன் என்ற ஆங்கிலேயே அதிகாரி வைத்து நில அளவு, சர்வே செய்தார்கள் !

சர்வே வேலையாக வாரன் அந்தப் பகுதிக்கு சென்றபோது, "கோலார் பகுதியை சுற்றியுள்ள நிலங்களில் தங்கம் நிறைய கிடைப்பதாகவும் " "சோழர் காலத்தில் இருந்த உள்ளூர் மக்கள் அதை வெறும் கைகளால் வாரிக் கொண்டு செல்வதாகும்" அவரிடத்தில் சிலர் கூறினர்!

இதுதான் ஆங்கிலேயர்களின் இந்திய தங்க வேட்டைக்கு ஆரம்பப்புள்ளி! இந்த இடத்தில் தங்கம் மனிதனால் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்று கேட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்!

ஆதிமனிதன் காலத்தில் தங்கம் என்பது ஓடும் நதிக்கு கிழே குழாங்கல் போல் கற்களாக தகதகவென்று மின்னின! அதன் அழகை பார்த்த மயங்கிய மனிதன் அதை எடுத்து சேர்க்க ஆரம்பித்தான்!

பின்பு ஆபரணமாக, பின்பு பணமாக மாற்றினான் ! இப்படி ஆரம்பித்த தங்ககட்டி எடுக்கும் முறை மெதுவாக மண்ணுக்கடியில் தேடி நோண்டி எடுக்கும் பழக்கமாக மாறியது !!

மேல் மட்டத்தில் இருக்கும் தங்கம் எல்லாம் எடுத்து விட்டார்கள் ஒரு கட்டத்தில்! இதற்கு பிறகுதான், பூமிக்கு அடியில்் சுரங்கம் தோண்டி எடுக்கும் நிலைக்கு மனிதன் தள்ளப்பட்டான்!

அதறகுள் ஆங்கிலேயர்களால் மின்சாரம் எந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது! இப்போது நாம் மீண்டும் வாரன் அதிகாரியிடம் வருவோம்! வாரன் பின்பு சில ஆண்டுகள் கழித்து , சும்மா இல்லாமல் மேலும் தன் தங்க ஆராய்ச்சியைத் தொடர்ந்தார் ! அதை ஒரு அழகான ரிப்போா்டாக எழுதினார்! அதில் இந்தியாவின் கோலார் என்ற பகுதியில் 58 கிலோ மண்ணை தோண்டினால் ஒரு குண்டுமணி தங்கம் கிடைக்கும் என்று சூடம் ஏற்றி அனைத்து, சத்தியம் செய்தார்!

இப்போதுதான் நமது ஒரிஜினல் KGF படத்தின் நாயகன் என்ட்ரி! கன்னடத்தில் கேஜிஎப் என்று எடுக்கப்பட்ட திரைப்படத்தை விட இந்த உண்மையான கேஜிஎப் வரலாறு மற்றும் அதன் நாயகன் Michael Fitzgerald Lavelle, லவேல் என்பவா் தங்கவேட்டை கதை மிகவும் த்ரில்லிங்காக இருக்கும் கேட்பதற்கு! சொல்கிறேன் , கேளுங்கள்!

இவருடைய தங்க வேட்டை அதற்காக பூமியைத் தோண்டும் சூதாட்டம் இவற்றை வைத்து லிவிங் டேஞ்சர்ரஸ்லி என்ற ஆங்கில நாவல் ஒன்றை பின்னி என்பவர் எழுதியுள்ளார் என்றால் இவர் கதை எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்!

வருடம் 1871! லவேல் ஒரு சிப்பாயாக இருந்து ஆங்கிலேயர் சார்பாக நியூசிலாந்தில் போரில் சண்டையிட்டு பின்பு ரிட்டையர் ஆகி பெங்களூரில் கன்டோன்மென்ட் வந்து குடியேறினார் !

ரிட்டையர் ஆன பின் எல்லாரையும் போல் பேரன் பேத்தியை கொஞ்சுவது குடும்பத்தோடு உட்கார்ந்து சாப்பிடுவது என்று பொழுதைக் கழிக்காமல், அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தார்! ஏனென்றால் அந்தப் போர் சூழலில் , வாரன் எழுதிய அந்த தங்க ரிப்போர்ட் படித்துவிட்டார் லவேல்! எல்லோரும் சினிமா கிசுகிசு படிப்பார்கள், நம்ம அள் லவேலோ தங்கத்தைப் பற்றி படிப்பது தான் பொழுதுபோக்கு போலிருக்கிறது!

ஆசாமி வாரன் ரிப்போர்ட் படித்துவிட்டு நேராக ஒரு மாட்டு வண்டியை எடுத்துக்கொண்டு கோலார் நோக்கி பயணமானார்!

"கண்டேன் சீதையை!" என்று துள்ளிக் குதித்தார்! தங்கமணலை பார்த்ததும் லவேல்!

இப்போதுதான் கோலார் கோல்டு பீல்டு அல்லது மைன்ஸ் ஆரம்பம் உருவானது! ஆரம்பித்து வைத்தவர் லவேல் சாா் தான்!

இதுதான் அவர் தங்கியிருந்த கன்டோன்மென்ட் பங்களா! பக்கத்தில் ரொம்ப மோசமான நிலையில் சுரங்கத் தொழிலாளிகள்; தமிழர்கள் தங்கியிருந்தார்கள்!

வெள்ளைக்காரன் தமிழர்களை அடிமைப் படுத்தினால் அதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள் நம் இந்திய திராவிட அரசியல்வாதிகள்!

இதுதான் அப்போது அவர் கட்டிய சுரங்கம்! மைசூர் மகாராஜாவிடம் உதவி பெற்று , தங்கச் சுரங்கம் தோண்டும் பணியை துவக்கினார் லவேல்!

ஆச்சரியமான மற்றும் மிக மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் , இந்த தங்கம் தோண்டும் பணிக்காக தான் முதல் மின்சார நிலையம் காவிரி ஆற்றின் குறுக்கே மைசூரில் கட்டப்பட்டது! ரயில் பாதை போடப்பட்டது!!

முதலில் மின்சாரம் நிலையம் தங்கம் எடுப்பதற்காக அவர்கள் கட்டியபோது, நாட்டில் வேறு எங்குமே மின்சாரம் கிடையாது, வரவில்லை, என்பது தான் பரிதாபம் !

சென்னைக்குகு மின்சாரம் இல்லை; பெங்களூருக்கு மின்சாரம் இல்லை; ஆனால் கோலாருக்கு மட்டும் வந்துவிட்டது! அங்கிலேயா் நம் இந்தியாவுக்கு முன்னேற்றம் கொண்டு வந்த லட்சணம் இப்படித்தான்!

பலவருடங்கள் , பகலும் இரவும் ஆக தங்கம் வெட்டி எடுத்தது, மேற்பரப்பில் பூமியில் தங்கம் குறைந்துபோனது! "நல்ல ஆழம் சுரங்கம் தோண்டினால்தான் தங்கம் கொஞ்சமாவது கிடைக்கும்" என்ற நிலைமை வந்தது!

தங்கம் வெட்டி எடுக்கும் செலவு, தங்கத்தை விட அதிகமாக இருந்தது !ஒருவழியாக இந்தியாவுக்கு சுதந்திரம் வந்து கோலார் தங்க வயல் மத்திய அரசு கைக்கு மாறியது !

ஒரு சுபயோக சுபதினத்தில், தங்கம் எடுக்கும் செலவு தங்கத்தை விட அதிகமாக ஆகிறது என்று கூறி இந்திய அரசு, கோலாரில் தங்கம் எடுக்கும் பணியை முற்றிலுமாக மூடியது !!இதுதான் கோலார் தங்கவயல் கதை!!!

இந்த பதிவுகளை வழங்கிய மதிப்பிற்குரிய தோழர் திரு.ராஜேஷ் சத்தியா அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!

No comments:

Post a Comment