Pages

Monday, 2 November 2020

முஸ்லீம் அரபி பெயர்களின் தூய தமிழ் பையர்கள்.

முஸ்லீம் நண்பர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர்கள் சூட்டுகின்றனரா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் யாமறிந்தவரை எவரும் சூடிக்கொண்டதுமில்லை; எனது சுற்றுவட்டாரத்திலும் நான் கண்டதுமில்லை.... அது அவர்களின் புனித நூலான திருக்குரானில் இது பற்றி ஏதேனும் எழுதப்பட்டுள்ளதா என்றும் எனக்குத் தெரியவில்லை..

இவர்கள் சூடிக்கொள்ளும் பெயர்கள் அரேபிய மொழிபெயர்கள். எனவே தற்காலங்களில் முஸ்லீம் நண்பர்கள் சூடிக்கொள்ளும் இஸ்லாம் மதப் பெயர்களுக்கு ஏற்ற தமிழ்ப்பெயர்கள் ஒரு சிலவற்றினை கீழே தருகின்றேன் ... விரும்பியவர்கள் சூடிக்கொள்ளுங்கள்!

  • ஆண் பெயர்கள்:
  1. அபூ , பாவா – அப்பன்
  2. அப்துல் அலி – மேலோனடிமை
  3. அப்துல்லா- இறைவடிவன்
  4. அப்துல் வஹ்ஹாப் – இறைத்தொண்டன்
  5. அப்பாஸ்- சினவரிமா
  6. அமர் – கட்டளையன்
  7. அமீர்- தலைவன்
  8. அலாவுதீன் - நெறியுயர்ந்தோன்
  9. அலி - மங்கலன்
  10. அல்லாப்பிச்சை- அப்படியே பயன்படுத்தலாம்!
  11. அல்மஜீது – மேதையன்
  12. அல்முஜீபு – விடைமொழியன்
  13. அல்ஜபார்- துயருறுத்தி
  14. அஃக்மத்- போற்றி
  15. இக்பால்- எழுச்சியன்
  16. இப்ராகிம் - அருட்தந்தை/ இன்னும் பல பெயர்கள் இதற்கு ஆக்கலாம்!
  17. இமாம் - வழிகாட்டி
  18. இஸ்மாயில் - இறைக்கேள்வி
  19. கபீர்- பேரறிஞன்
  20. கமால்- திறத்தன்
  21. கரீம் - வள்ளல்
  22. காசிம்- பகிருநன்
  23. சலாம் - அமைதியன்/ நலச்செயலன்
  24. சலீம் - இணங்கி
  25. சஜ்ஜத்- மேன்மையாளன்
  26. சிராஜுதீன் - விளக்கு (சரியாகப் பொருள் புரியவில்லை)
  27. சுலைமான் - மைவன்
  28. தௌலத் - செல்வம்
  29. தாசுதீன் - நெறிமுடி
  30. தாஜ் - மணி முடி
  31. நிஜாம் - தொடர்வோன்
  32. பர்கத்- வளமையன்
  33. பஸீர்- நற்செய்தியாளன்
  34. பாரூக்- பகுப்பாய்வன்
  35. மன்சூர்- வெற்றிவீரன்
  36. மஜீத் - மேதகையன்
  37. மஃக்மூத்- போற்றியன்
  38. மீரான் - பேகோன் / பெருந்தலைவன் / இன்னும் பல பெயர்கள் இதற்கு ஆக்கலாம்!
  39. முபாரக் - போற்றன்
  40. முகமத்- போற்றியர்
  41. முஸ்தஃபா- தேர்ச்சியர்
  42. முஜிஃபுர் ரஃக்மான் - இறைவிடையர்
  43. யூசுஃப்- எழிலன்
  44. ரஃக்மான் - இரக்கன் / கருணையன்
  45. ரஃபீக் - தோழன் / இன்னும் பல பெயர்கள் இதற்கு ஆக்கலாம்!
  46. ரஃகீம் - அருளாளன்
  47. ரஃக்மான் - அருளாளன்
  48. லதீப் - நசையன்
  49. ஜவ்ஃகர்- திறமை மாணிக்கம்
  50. ஜஃகாங்கீர்- உலகவென்றி
  51. ஜமால்- எழில்
  52. ஜலால் - பெரும்புகழ் / இன்னும் பல பெயர்கள் இதற்கு ஆக்கலாம்!
  53. ஜியாவுத்தீன் - நெறியொளி
  54. ஜீனத் -அணி
  55. ஃகுசைன் - இன்பன்
  56. ஆலம் - இப்பெயருக்கு தமிழிலும் பொருளுண்டு/ அரேபிய மொழியிலும் பொருளுண்டு.. எனவே இது போன்ற பெயர்களை அப்படியே வைக்கலாம் !
  • பெண் பெயர்கள்:
  1. கதிஜா- மதிப்பன்னை
  2. சுல்தானா- அரசி /
  3. நர்கீஸ்- கண் மலர்
  4. நூர்ஜஃகான் - பாரொளி
  5. ஃபாத்திமா- மணிமகள்
  6. மும்தாஜ் - மேலவள்
  7. ஸகீலா- அழகி
  8. ஆலியா- (தென் திசையின் மழைத்துளி) இப்பெயருக்குத் தமிழிலும் பொருளுண்டு / அரேபிய மொழியிலும் பொருளுண்டு.. எனவே இது போன்ற பெயர்களை அப்படியே வைக்கலாம் !
  9. அபிதா- போற்றியள்
  10. அஃப்ஸீன்- தாரகை

No comments:

Post a Comment