Pages

Sunday, 8 November 2020

தமிழனால் கட்டப்பட்ட அங்கோர் வாட் கோயில் சிறப்பு

 அங்கோர் வாட் கோயில் கட்டப்பட்டது தமிழர்களால் தான்.


(படஉதவி : pinterest)

தமிழ் மன்னனான இரண்டாம் சூரிய வர்மனால் (கி.பி 1113–1150) கம்போடியாவில் 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட உலகிலேயே மிகப் பெரிய கோயில் தான் அங்கோர் வாட் கோயில்.

இரண்டாம் சூரிய வர்மன், கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் இக்கோயிலை கட்டியுள்ளார்.

அங்கோர் என்பது நகரத்தையும், வாட் என்பது கோயிலையும் குறிக்கும். இது கெமர் மொழிச் சொல் என்று கூறுகின்றனர்.

வரலாறு

(அரசர் இரண்டாம் சூரியவர்மன், அங்கோர் வாட்டைக் கட்டியவர்)

(படஉதவி : wikipedia)

அங்கோர் வாட், சியம் ரீப்பின் நவீன நகரத்தின் வடக்கே 5.5 கிலோமீட்டர் தொலைவில், முந்தைய தலைநகரமான பாஃபுஆனுக்கு சற்றே தென் கிழக்கில் அமைந்துள்ளது. இக்கோயிலின் தொடக்க வடிவமைப்பும், கட்டுமானமும் 12ஆம் நூற்றாண்டின் பாதியில் இரண்டாம் சூரியவர்மனால் ஆரம்பிக்கப்பட்டது என்று கூறுகின்றனர்.

இரண்டாம் சூரியவர்மனின் மறைவுக்குப் பின்னரே இக்கோயில் முழுத்தோற்றம் பெற்றதாக கூறுகின்றனர்.

1177-ல் தோராயமாக இரண்டாம் சூரியவர்மன் மறைந்து 27 வருடங்களுக்கு பின், அங்கோரை கெமரின் பாரம்பரிய எதிரிகளான சம்பாக்கள் கைப்பற்றினர். அதன் பின்னர் புதிய அரசர் ஏழாம் ஜயவர்மன் சிறிது தூரம் வடக்கே தள்ளி தன் புதிய தலைநகரத்தையும், மாநிலக் கோயிலையும் நிறுவினார்.

13ஆம் நூற்றாண்டின் போது அங்கோர் வாட், இந்து கோயிலில் இருந்து தேராவத புத்த மத பயன்பாட்டுக்காக இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அங்கோர் வாட், அங்கோர் கோயில்களிலேயே மிகவும் அசாதாரணமானது, 16ஆம் நூற்றாண்டிலேயே அக்கோயில் ஓரளவு புறக்கணிக்கப்பட்டு வந்தாலும் முழுமையாக கைவிடப்படவில்லை, ஏனெனில், அக்கோயிலின் அகழி காட்டின் அத்துமீறலில் இருந்து சிறிது பாதுகாப்பளித்துள்ளது.

கட்டமைப்பு

(படஉதவி : gettyimages)

இக்கோயில் கடவுள்களின் இருப்பிடமாகக் கருதப்படும் மேரு மலையினைக் குறிப்பதாக உள்ளது. மத்திய கோபுரங்கள், மேரு மலையின் ஐந்து சிகரங்களைக் குறிக்கின்றது.

(படஉதவி : wikipedia)

சுவர்களும், அகழியும், பிற மலைத்தொடர்களையும், கடலையும் குறிக்கின்றன.

இந்த கோயிலின் நான்கு பக்க சுற்றுச் சுவர்களும் முறையே 3.6 கி.மீ நீளமுடையவை என்று கூறுகிறார்கள்.

(படஉதவி : samayamtamil)

மூன்று கோபுரங்கள், மத்திய கோபுரத்துடன் இணைந்துள்ளன . இவை அரசன், பிரம்மா மற்றும் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கபட்டுள்ளது என கூறப்படுகிறது.

(படஉதவி : dreamstime)

எல்லா மண்டபங்களின் சுவர்களிலும் நடனமாடும் அப்சரஸ் உருவங்கள் காணப்படுகின்றன.

அங்கோர் வாட் சிற்பங்கள்

அங்கோர் வாட் சிலைகள்

மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு

கம்போடியாவில் உள்ள பிற பழமையான கோயில்களைப் போலவே அங்கோர் வாட்டும் தாவர வளர்ச்சி, பூஞ்சை, தரை இயக்கங்கள், போர் சேதம் மற்றும் திருட்டு ஆகியவற்றை ஏராளமாக சந்தித்துள்ளது.

கம்போடியாவின் கோவில் இடிபாடுகளை மீதமுள்ள கோயில்களுடன் ஒப்பிடும்போது அங்கோர் வாட் கோயிலுக்கான போர் சேதம் மிகவும் குறைவாகவே உள்ளது, மேலும் இதை மிகவும் கவனமாக புதுப்பிக்க வேண்டியதாகவும் உள்ளது.

1970-களின் முற்பகுதி வரை அங்கோர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் அதன் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு அங்கோர் வாட் பாதுகாப்பு மையம் பொறுப்பு வகித்தது.

1986-க்கும் 1992-க்கும் இடையில் இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு நிறுவனம் கோவில் மீது மறுசீரமைப்பு பணியை மேற்கொண்டது.

கம்போடிய பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான சட்டமும் 1996-ல் உருவாக்கப்பட்டது. பிரான்சு, சப்பான் மற்றும் சீனா போன்ற பல நாடுகள் தற்போது பலவகையான அங்கோர் வாட் பாதுகாப்பு திட்டங்களில் ஈடுபட்டுள்ளன.

தமிழின் பெருமை

தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரங்கள் அங்கோர் வாட்டை சுற்றிலும் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் பனையின் மதிப்பறியாது இருக்கும் வேளையில் நம் மாநில மரமான பனை மரம், கம்போடியாவில் இன்றளவும் பராமரிக்கப்படுவது நமக்கெல்லாம் பெருமைக்குரிய விசயம்.

No comments:

Post a Comment