Pages

Monday, 9 November 2020

அறியாத உண்மைகள் பாகம் - 1

 

  • உலகிலேயே அதிகமான தீவுகளை கொண்ட நாடு சுவீடன். அங்கே 2,21,800 தீவுகள் இருக்கின்றது . இதில் 1000த்திற்கும் மேற்பட்ட தீவுகளில் ஆட்களே இல்லை.
  • கடந்த 2018மாண்டு நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் 2952 வீரர்கள் கலந்து கொண்டனர்.அவர்கள் எல்லாம் 92 நாடுகளைச் சேர்ந்தவர்கள். ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் அதிக நாடுகள் கலந்து கொண்ட போட்டி இதுதான்.
  • இந்த உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகள் இருந்தாலும் 43 நாடுகளில் மட்டும் தான் அரச குடும்பம் இருக்கிறது. 28 அரச குடும்பங்கள் சேர்ந்து 43 நாடுகளை ஆட்சி செய்கிறதாம். ஜப்பான், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, பூட்டான், தாய்லாந்து, ஸ்வீடன், நெதர்லாந்து ஆகிய நாடுகளும் இதில் உள்ளடக்கம்.
  • கடந்த 2010 மற்றும் 2014ம் ஆண்டு நடந்த உலககோப்பைகால் பந்து போட்டியை 3.2 பில்லியின் மக்கள் பார்த்துள்ளனர். இது உலகில் உள்ள ஒட்டு மொத்த மக்கள் தொகையில் சுமார் 50 சதவீத பேரின் எண்ணிக்கை.
  • நிகாராகுவா மற்றும் டோமினிகா ஆகிய இரண்டு நாட்டுக் கொடிககளில் மட்டும் தான் பர்பில் நிறம் இருக்கின்றது.
  • பூமியில் ஒரு ஆண்டிற்குச் சராசரியாக 131.4 மில்லியன் குழந்தைகள் பிறக்கிறது. அப்படி என்றால் ஒரு நாளுக்கு 3.60 லட்சம், ஒரு மணி நேரத்திற்கு 15 ஆயிரம், ஒரு நிமிடத்திற்கு 250, ஒரு நொடிக்கு 4 குழந்தைகள் சராசரியாக இந்த பூமியில் பிறக்கின்றது.
  • உலகிலேயே குறைந்த வயதுடைய நாடு தெற்கு சூடான் தான். இந்த நாடு 2011ம் ஆண்டு தான் சுதந்திரம் பெற்றது.
  • 2012ம் ஆண்டு யுனெஸ்கோவின் அறிக்கையின் படி உலகில் உள்ள ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 50.5 சதவீதம் பேர் 30 வயதிற்கும் குறைவானவர்கள் அதில் 89.7 சதவீதம் பேர் இந்தியா, ஆப்ரிக்கா போன்ற வளரும் அல்லது வளர துவங்கும் நாடுகளில் தான் இருக்கிறார்களாம்.
  • உலகில் கிட்டத்தட்ட 200 நாடுகள் இருக்கிறது. 300 சைகை மொழிகள் உள்ளது. 41 நாடுகளில் சைகை மொழி அங்கீகரிக்கப்பட்ட மொழியாக உள்ளது.
  • 1162 -1227ம் ஆண்டுகளில் மங்கோலிய நாட்டில் வாழ்ந்த அரசர் செங்கிஸ்கான். இவருக்குக் கணக்கிலடங்காத குழந்தைகள் இருந்தனர். இன்று ஒவ்வொரு 200 பேரில் ஒருவர் செங்கிஸ்கானின் நேரடி தலைமுறையாக இருக்ககூடும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.


No comments:

Post a Comment