தியானம் என்பது தமிழ் சொல் அல்ல. அது ஒரு வடமொழி சொல். அதற்கு இணையான தமிழ் சொல் அகத்தவம்.
முதலில், தியானம் என்பது எங்கு வருகிறது என்று பார்ப்போம்.
பதஞ்சலி முனிவரின் யோகசூத்திரம்;
படிமப்புரவு ;Light of the Soul, Patanjali’s Yoga Sutras: book 4 sutras 18-27
பதஞ்சலி முனிவர் யோக சூத்திரம் என்ற ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இவர் கி.மு. 2ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
அத யோகானு சாஸனம்
யோகஸ் சித்த வ்ருத்தி நிரோத; - யோக சூத்திரம்
புற உலகில் பற்றுடன் அலையும் மனதைக் கட்டுப்படுத்தி, ஆன்மாவுடன் இணைத்தலே யோகம். யோகம் என்றால் இணைத்தல், ஒன்றுபடுதல், சேர்த்தல் என்று பொருள். அதாவது, ஜீவாத்மாவான மனிதனை , பரமாத்மாவான இறைவனுடன் இணைப்பது யோகம் எனப்படும்.
படிமப்புரவு: Chakras
யோக சூத்திரத்தில், யோகத்திற்கு எட்டு அங்கங்கள் குறிப்படப்பட்டு உள்ளன. அதாவது, அஷ்டாங்க யோகம் எனப்படுகிறது.
- இயமம் (ஒழுக்கம்)
- நியமம் (நியதிகள்)
- ஆசனம் (இருக்கை நிலைகள்)
- பிராணாயாமம் (மூச்சுக் கட்டுப்பாடு)
- பிரத்தியாகாரம் (பற்றற்ற நிலை)
- தாரணம் (ஒரு நிலைப்படுத்துதல்)
- தியானம் (அகத்தவம்)
- சமாதி (பரம்பொருளுடன் இணைதல்)
எனவே, படிப்படியாக இறைவனை அடைவதற்கான வழியினை யோக சூத்திரம் கூறுகிறது. தியானம் என்பது அஷ்டாங்க யோகத்தில், ஏழாவது நிலையில் உள்ளது.
எட்டு அங்கங்களில், இரண்டு வகைகள் உள்ளன.
- புறத்தே செய்வது, வெளிப்புறமாக செய்வது ;(பஹிர்முகம் எனப்படும்)
முதல் நான்கு வகைகளான இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம் போன்றவை வெளிப்புறமாக செய்யப்படுபவை
2. அகத்தே செய்வது, மனதால் செய்வது ; (அந்தர்முகம் எனப்படும்)
அடுத்த நான்கு வகைகளான பிரத்தியாகாரம், தாரணம், தியானம், சமாதி போன்றவை மனதால் செய்யப்படுபவை.
புற சுத்தங்களுக்குப் பிறகு, அக சுத்தங்களை நோக்கி, மனிதன் பயணிக்கிறான்.
இவற்றைப் பற்றி ஒவ்வொன்றாக பார்ப்போம்.
- இயமம்; (ஒழுக்கம்)
ஐந்து சுயக்கட்டுப்பாடுகளை உள்ளடக்கியது.
- எவரையும் காயப்படுத்தாமை
- உண்மையாக இருத்தல்
- களவாடாமை
- ஆன்மிக இயல்
- பேராசை இல்லாமை
2. நியமம்; (நியதிகள்)
ஐந்துக் கட்டுப்பாடுகளை உள்ளடக்கியது.
- மனத்தூய்மை
- மன நிறைவு
- எளிமை
- தன்னறிவு
- இறைபற்று
3. ஆசனம்; (இருக்கை நிலைகள்)
உடல் நலத்தை பேணும் ஆசனங்கள் இவற்றில் உள்ளடங்கும். யோகாசனங்கள் எல்லாம் இதனுள்ளே வருகின்றன. சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பதைப் போல், உடல் நலத்தை பேணுவதற்கு ஆசனங்கள் உதவுகின்றன.
4. பிராணாயாமம்; (மூச்சுக் கட்டுப்பாடு)
இவற்றில் மூச்சைக் கட்டுப்படுத்துதல் மூலமாக, மனதை அமைதிப்படுத்துதல்.
5. பிரத்தியாகாரம்; (பற்றற்ற நிலை)
புறத்தே அலையும் மனதை உள்நோக்கி திருப்புதல். மனதை புலன்வழி செல்லாது கட்டுப்படுத்துதல்
6. தாரணம்;(ஒரு நிலைப்படுத்துதல்)
அலைபாயும் மனதினை ஒரு நிலைப்படுத்துதல்
7. தியானம்; (அகத்தவம்)
மனதை மனதின் மூலமான உயிரின் மீது செலுத்தி அல்லது இறைவனின் அம்சம் மீது செலுத்தி, அறிவின் நிலைக்கு(இறைநிலைக்கு) உயர்த்துதல்.
8. சமாதி;(பரம்பொருளுடன் இணைதல்)
இறைநிலையோடு ஒன்றி கலந்து இருப்பது. இதுவே யோக நெறியின் இறுதிப்படி.
இறைவனை அடைவதே மனிதப் பிறவியின் குறிக்கோள். இறைவனை உணர, இறைவனை அடைய தியானம் அல்லது அகத்தவம் உதவுகிறது.
No comments:
Post a Comment