அதானே ஏன் நீராகவில்லை?
நமது பள்ளியில் படித்தது தானே? இரண்டு பங்கு ஹைட்ரஜன் ஒரு பங்கு ஆக்சிஜனுடன் சேர்ந்தால் இரண்டு பங்கு நீர் நமக்கு கிடைக்கும். இந்த சமன்பாடுதானே?
நீங்கள் இப்பொழுது ஒரு ஜாடியை எடுத்துக்கொள்ளுங்கள். ஹைட்ரஜனை நிரப்புங்கள்.அதில் ஆக்சிஜனை சேருங்கள். நன்றாக இரண்டையும் கலக்குங்கள். என்ன ஆகும்? எதுவுமே ஆகாது. (அடேய்!)
கோச்சுக்காதீங்க. இந்த ரெண்டும் சேரணும்னா அதுக்கு நம்ம தேவையான ஆற்றலை கொடுக்கணும்.
சொல்லுறேன் பாருங்க.
ஹைட்ரஜன் எடுத்துக்கோங்க. அதை பொதுவா நாம H2 (2H) னு தானே எழுதுவோம். அதாவது இந்த இரண்டு ஹைட்ரஜன் அணுவும் ஒன்னோட ஒன்னு கெட்டியா புடிச்சுக்குது. ஒரு பெரிய காந்தம் மாதிரி. அதே மாதிரி இந்த ஆக்சிஜன் O2 (2O) அணுக்களும் எப்பவுமே ஒன்னாவே தான் இருப்பாங்க. விட மாட்டாங்க. அதாவது இவங்களுக்கு உள்ள இருக்குற ஈர்ப்பு விசை அதிகமா இருக்கு. அதனால தனியா மகிழ்ச்சியா சுத்திட்டு இருக்கு. இத பிரிக்கணும்னா ஆற்றல் வேணும் தானே!
இப்போ நாம இந்த குழுவை கொளுத்தி போடுவோம். அட தனியா ஆற்றல் கொடுப்போம்னு னு சொன்னேன். அடிக்க வராதீங்க.
இப்படி நம்ம தனியா ஆற்றல் கொடுத்ததால அந்த Bond உடைஞ்சு போச்சு. இப்போ இந்த ஹைட்ரஜன் குழு கொஞ்சம் தெளிவா ஒரு ஆக்சிஜனை தங்களோட கூட்டணில சேர்த்துக்கிட்டாங்க. ஆக இப்போ மூன்றுபேர் கொண்ட குழுவா (H2O) அதிக வலிமையா ஆயிட்டாங்க. அதுனால இந்த கூட்டணி நிலைச்சு நிற்குது. நமக்கு நீர் கிடைக்குறது. அது மட்டும் இல்லாமல் இந்த கூட்டணி தாராள மனசு உள்ள கூட்டணி. இவங்க சேரும்போது வெப்பமாகவும் நமக்கு அதிக ஆற்றல் கிடைக்கிறது.
இப்போ பதிலுக்கு வருவோம்.
ஏன் வளிமண்டலத்தில் உள்ள ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் சேர்ந்து நீராகவில்லை? அவை இரண்டும் சேர்வதுக்கு , அந்த வேதி வினை நடப்பதற்கு தேவையான ஆற்றல் அவையிடம் இல்லை. நாம் இந்த கலவையை கொளுத்தினாலே அல்ல அவை ஒன்றுசேர மாட்டா!.நாம் நெருப்போ அல்லது வேறு வழியிலோ இதற்கு ஆற்றல் கொடுப்போம் என்றால் அவை சேர்ந்து நீராகிவிடும்.
இப்போ உங்களுக்கு ஒரு ஐடியா வருதா?
இந்த முறையை பயன்படுத்தினால் சுத்தமான தண்ணீர், நம்மளே உருவாக்கிடலாமே? இங்க தான் சிக்கல். இந்த வினையில் இருந்து வெளிப்படும் ஆற்றல் மிக மிக அதிகம். எந்த அளவு அதிகமா? ஏவூர்திகளை விண்ணுக்கு செலுத்தும் அளவு அதிகம்.
இது தான் ஹைட்ரஜன் ஆக்சிஜன் வினையின் வெளிப்பாடு
No comments:
Post a Comment