முருகனுக்கு முற்பட்டது தமிழ் மொழி. பிறகு எப்படி முருகனை தமிழ் கடவுள் என்கிறார்கள்? முருகன் தமிழுக்கு செய்த சேவை என்ன? இல்லை முருகனும் தமிழும் ஒன்று என்றால், முருகனின் தாய் தந்தையர் பேசிய மொழி எது? வேதத்தைக் கொண்டு விளக்குக.
உண்மையை கூறினால் கோபிக்கக்கூடாது. முருகனை தமிழ்க்கடவுளாக கூறுவதற்கு காரணம் ஆயுத எழுத்து ஃ.
இந்த ஃ எழுத்தை கோலம் போடுவது போல் கோடு போட்டு சேர்த்தால் முருகனின் ஆயுதமான வேல் போல் தெரியும்.
இந்த ஃ எழுத்தை தமிழைத் தவிர வேறு எந்த தென்னிந்திய மொழியிலும் ஏன் எந்த ஒரு மொழியிலும் யான் கண்டதில்லை.
ஒவ்வொரு மூர்த்திக்கும் ஒரு ஆயுதம் இருக்கும். முருகனின் ஆயுதமாக ஏன் வேலை வைத்தார்கள்? இனி தான் பதிலே ஆரம்பமாகிறது.
யோகத்தில் மனித உடம்பில் ஏழு சக்கரங்கள் இருப்பதாக கூறுகிறார்கள். அவை முறையே -
- மூலாதாரம் (Base of spine)
- சுவாதிட்டானம் (Procreation spot)
- மணிபூரகம் (Navel or தொப்புள்)
- அநாகதம் (Heart centre)
- விசுத்தி (Throat centre)
- ஆக்ஞை (Forehead or நெற்றிப்பொட்டு)
- சகஸ்ராரம் (Crown or உச்சிமண்டை )
சக்கரம் என்றால் நம் காரில் இருக்கும் tyre போல சுற்றும் பொருள் இல்லை. நம் உடம்பில் 72,000 நாடிகள் உள்ளன. இவற்றில் இடை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்று நாடிகள் முக்கியகமாக கருதப்படுகின்றன.
இந்த மூன்று நாடிகளும் பல்வேறு நாடிகளுடன் சேர்ந்து மேற்கூறிய இடங்களில் சங்கமிக்கின்றன.
மேலே உள்ள படத்தில் இரண்டு பாம்புகள் முடிச்சு போட்டது போல் இருப்பதை பார்த்தியிருப்பீர்கள். நாம் அதை பாம்பு என்று நினைக்கிறோம். ஆனால் அவற்றில் ஒன்று இடை நாடி, இன்னொன்று பிங்கலை நாடி.
மூன்று முடிச்சுகள் உள்ளன. கீழுருந்து முதல் முடிச்சு நம் தொப்புளில் உள்ள முதல் முடிச்சு. பிரம்ம முடிச்சு என்பார்கள். பிரம்மன் விஷ்ணுவின் தொப்புளில் இருந்து வந்தார் என்பது அங்கே படைப்பு நடப்பது, அதாவது கருஉருவாவது, எல்லாம் நடக்கும் எனர்ஜி centre. படைப்பின் சூட்சமம் இந்த சக்கரத்தில் குண்டலினி சக்தி நின்றால் புலப்படும்.
இங்குள்ள முடிச்சை அவிழ்த்து மேலே செல்ல, இதய சக்கரத்தில் உள்ள விஷ்ணு முடிச்சு தட்டுப்படும். இந்த சக்கரத்தில் குண்டலினி நின்றால் அன்பு பீறிட்டு வெளிப்படும். எல்லோரிடத்திலும் அன்பாய் இருப்பர்.
அடுத்த முடிச்சு தொண்டையில் உள்ள ருத்ர முடிச்சு. இந்த நிலையில் குண்டலினி நின்றால் விசேஷமான தெளிவு, விசுத்தி (special clarity) கிடைக்கும்.
இந்த சிலையை நீங்கள் உற்று நோக்கினால் முதல் முடிச்சில் தாமரையும் இரண்டாம் முடிச்சின்மேல் விஷ்ணுவும், மூன்றாம் முடிச்சின்மேல் லிங்கமும் இருக்கும்.
மூன்று முடிச்சும் அவிழ்ந்தபின் நெற்றிப்பொட்டில் உள்ள ஆறாவது சக்கரத்தில் முருகன். Pituitary gland, pineal gland, மற்றும் நெற்றிப்பொட்டு இவை மூன்று புள்ளிகள். அவைகளை சேர்த்தால் வேல் போல இருக்கும். இங்கே குண்டலினி நின்றால் ஞானசுடர் ஒளிரும். இந்த நிலை அடைந்தவர் முகத்தில் ஒரு ஒளி இருப்பதுபோல் தோன்றும். இதையே தேஜஸ்-ah இருக்கிறார் என்று கூறுவோம்.
குண்டலினி மூலாதாரத்தில் ஓஜஸ் எனவும் ஆறாம் சக்கரத்தில் சேர்ந்தால் தேஜஸ் எனவும் கூறுகிறோம். ஆறாம் சக்கரத்தில் புலப்பட்டதால் முருகன் ஆறுமுகன் எனப்படுகிறார்.
இடைநாடியும் பிங்கலை நாடியும் வள்ளி தெய்வானையாக உருவகப்படுத்தி கூறியிருக்கிறார்கள்.
ஞானபண்டிதன் என்று முருகனை கூறுவதும், அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையன் என்று கூறுவதும் - ஞானம் ஆறாம் சக்கரத்தில் புலப்படுவதால்.
மிகப்பெரிய யோக விஞ்ஞானத்தை அதாவது ஒரு abstract ஆன விஷயத்தை மக்களுக்கு எளிமையாக உருவம் உருவகம் கொண்டு புரியவைக்க நம் முன்னோர்கள் செய்து வைத்த symbolism மற்றும் கதைகள்.
அதை மெய்ஞ்ஞான அறிவியலாக பார்த்தால் உண்மையான விடை கிடைக்கும்.
அதை விட்டுவிட்டு கடவுளுக்கு எதுக்கு ரெண்டு பொண்டாட்டி, யானை மூஞ்சி, சரஸ்வதி நாக்கில் உட்கார்ந்தால் பாத்ரூம் போக எங்கே போவாள் என்று அறிவுச்சுடர் ஒளிர்விடும் சிலரும், தமிழனின் முப்பாட்டன் முருகன் தான், மற்றைய கடவுள்களை ஒருக்காலமும் ஏற்கமாட்டோம் என்று கூறுவோரும் ஒரே ரகம் தான்.
நான் ஆன்மிகவாதி. நான் சொல்கிறேன் முருகன் தமிழ்க்கடவுளே இல்லை. In fact முருகன் கடவுளே இல்லை. முருகன் என்பது ஆன்மிகத்தில் ஒரு நிலை.
அதைப்போலவே ருத்ரனும், சக்தியும், விஷ்ணுவும், ஐயப்பனும்…. எல்லாமே நாம் யோகத்தில் அடையக்கூடிய வெவ்வேறு நிலைகள்.
அப்படி நான் சொல்வது பொய் என்றால்…. காடு மலை என்று பல கடந்து உடம்பில் இருக்கும் ஒவ்வொரு அணுவும் கொண்டு மேலே போய் ஐயப்பனை தரிசித்தால் அங்கே "தத் த்வம் அசி" அதாவது "நீ தான் அது" அல்லது "நீயும் அதுவாகிறாய்" என்று ஏன் எழுதிவைத்திருக்கிறார்கள்?
Spirituality is always an act of becoming. ஆன்மிகத்தின் குறிக்கோள் நம்முள் இருக்கும் இறைநிலையை அடைவதே. சும்மா எந்தக்கடவுளை தரிசித்தால் எந்தக்கோவிலுக்கு சென்றால் எனக்கு car பங்களா பணம் புகழ் குழந்தை அது இது கிடைக்கும் என்று உலக விஷயங்களுக்காக அல்ல. ஒருவரின் கர்மாவிற்கேற்ப இவையெல்லாம் நடக்கும். கோவிலுக்கு செல்வதால் மட்டும் தான் வந்தது, விளக்கு போட்டேன், வேலை கிடைத்தது என்று சொல்வது அந்த இறைநிலையை அற்ப விஷயங்களுக்காக பயன்படுத்துவது போல.
சிவன் - Nothingness - ஏதுமற்ற நிலை - சவம்
சக்தி - Energy - எல்லாவிதமான எனெர்ஜியும் சக்தி
விநாயகன் - குண்டலினியின் பாதுகாவலன் - மூலாதார சக்கரத்தில் இருக்கும் முதல் இறைநிலை. சிவனும் சக்தியும், அதாவது ஒன்றும் இல்லாத சவத்தில் சக்தி குண்டலினியாக வந்ததும் உணரப்படும் முதல் கடவுள் or இறைநிலை
பிரம்மா - படைப்பு நடக்கும் கருவறையில் இருக்கும் இறைநிலை
விஷ்ணு - இருதய சக்கரத்தில் அன்பின் வடிவமாய் இருக்கும் இறைநிலை. அன்பு ஓங்கிநிற்பதால் தான் இதய சக்கரம் கனக்கிறது சோகமாக இருக்கும் பொழுது. ஆனந்தமாக இருக்கும் பொழுது இதயம் லேசாகிறது. அன்பும் பக்தியும் நிறைந்த நிலை. அந்த பக்தி எந்த மூர்த்தியாக வேண்டுமாக இருக்கலாம், அது இயேசுவாக அல்லது அல்லாஹ் வாக கூட இருக்கலாம். பக்தி என்பது ஒன்றுதான்.
முருகன் - ஞான நிலை
எலி - விநாயகனின் வாகனம், முடிச்சுகளை ஓட்டை போட்டு மேலே செல்ல.
இப்படி மெஞ்ஞான தேடல் கண்ணோட்டத்தில் பார்த்தால் உருவ வழிபாட்டின் சூட்சமம் புரியும்.
கடைசியில் microcosm macrocosm இரண்டும் ஒன்று தான் என்று நாமே அது என்று ஆகும் நிலை.
ஏதேனும் தவறு இருப்பின் என்னுள் இருந்து இயங்கும் இறைநிலை தண்டிக்கட்டும்.
இந்த பதிவுகளை வழங்கிய மதிப்பிற்குரிய தோழர் திரு.சுபாஷ் சங்கர் அவர்களுக்கு மிக்க நன்றி !!!!!!
No comments:
Post a Comment