பொக்கிஷம் என்றால் செல்வம்
பொக்கிஷம் >>> பொக்கிசம் >>> கொச்சிசம்>>> சொத்திசம்>>> சொத்திடம் —— = சொத்து + இடம் = சொத்து >>> செல்வம்
- பொக்கிஷம் என்னும் சொல் தமிழ்ச்சொல் தானா?
இதில் ஷ வருகிறது ., எனவே இது தமிழில்லை
- பொக்கிஷம் என்றால் என்ன ?
செல்வம் , சொத்து என்னும் பொருள் தமிழில் இருக்கிறது
- பொக்கிஷம் எந்த மொழியிலிருந்து வந்தது?
வடமொழியாக இருக்கலாம் ..
- பொக்கிஷம் தமிழ்தானா என்று சோதிக்க முடியுமா ?
முடியும் .. அச்சொல்லுக்கு மூலம் தமிழாய் இருந்தால் பொக்கிசம், பொக்கிடம் என்னும் சொற்களில் ஒன்றே அடிப்படையாக இருக்கும் வாய்ப்பிருக்கிறது.
1 .பொக்கிசம் = பொக்கு + இசம்
இசம் - என்னும் சொல் தமிழில் இருப்பதாகத் தெரியவில்லை .
எனவே இது இல்லை , விலக்கிவிடலாம்
2. பொக்கிடம் = பொக்கு + இடம்
பொக்கு = பொந்து, பொருக்கு, பதர், வெறுமை, (இருக்க வேண்டிய ஒன்று இல்லாத இடம் )
- விளக்கமுடியுமா ?
முடியும்
எ.கா ; பொக்குவாய் ( பல் இருக்க வேண்டிய இடம், இப்போது இல்லை )
எனவே
பொக்கிடம் என்றால் வெற்றிடம் மற்றும் செல்வம் என்று தமிழில் பொருளாகிறது
பொக்கிசம் என்றால் செல்வம் நிறைந்தது என்று வடக்கில் பொருளாகிறது. தமிழில் உள்ள பொக்கிடமே பொக்கிஷமாக மருவியது.
இரண்டும் நேர் எதிர்ப் பொருள் தருகிறது
- இதன் மூலம் நிறுவப்பட்டது என்ன?
1.பொக்கிஷம் என்பது தமிழில்லை. தமிழில் இருந்து மருவியது.
2.பொக்கிடம் என்பது பொக்கிஷத்தின் தமிழ் தூய சொல் .
பொக்கசம் > பொக்கிசம் > பொக்கிஷம்.
வடமொழி பாதிப்பினால் 'பொக்கிஷம்' என சிதைந்தது.
பொக்கையில் வைக்கப்படும் பொருளே பொக்கசம்.
( தமிழில் - பொக்கசம்.
கன்னடத்தில் - பொக்கசா.
தெலுங்கில் - பொக்கசமு).
பொக்கை / பொக்கணம் - என்றால் பணம், தங்கம், நாணயங்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை வைத்திருக்கப் பயன்படும் நெகிழ்வான பை. ( wallet).
இத்தகைய பை, பானை, பெட்டி, பேழைகளில் வைத்து புதைத்து வைக்கப்படுவது - பொக்கசம்.
- பொக்கசவைப்பு = புதைந்துகிடக்கும் திரவியம்.
( Treasure trove; hidden treasure). - பொக்கசப் பெட்டி = பணம் முதலியன வைக்கும் பேழை. (Coffer; chest for money and other valuables)
- பொக்கிழி = கிழித்து முடிக்கப்பட்ட
சிறு துணியால் ஆன பணமுடிப்பு. அக்காலத்தில் வழங்கிய தங்க நாணயங்கள் அடங்கிய முடிச்சு. (பொக்கிழி என்பதே பின்னர் பொற்கிழி எனத்திரிந்தது) .
புள் > பொள் என்ற மூலத்திலிருந்து பிறந்த சொற்கள் பொதுவாக துளைப் பொருள் குறிப்பன.
- பொள் > பொத்தல் = ஓட்டை, துளைத்தல்.
- பொள் > பொக்கை / பொக்கல்வாய்.
- பொக்கணி = உரல், விரிந்த தொப்புள், பானபாத்திரவகை (a kind of drinking jar)
- பொக்கணை = மரப்பொந்து.
- பொக்கரணி = கோயில் குளம். (இதுவே வடமொழியில் புஷ்கரணி ஆனது).
- பொக்கு = உள்ளீடு முற்றாத தானியம். (Imperfectly matured grain).
பொந்து, பொட்டலம், Bag, Pouch, Pocket, Pot, Bottle , Bucket, Pussy ஆகியனவும் - அவற்றில் அடங்கும்.
சமஸ்கிருதமே பல சொற்களையும் , எழுத்துக்களையும் தமிழ் மொழியை சார்ந்து இயங்கும் பொழுது சமஸ்கிருதம் தாய்மொழியாக எண்ணி ஏங்கி நிற்கும் இந்த மழலைமொழியாக வடமொழி மட்டும் தமிழை சாராமல் இருக்க இயலாது அல்லவா !!!!
தமிழால் இணைவோம் !!!
அறிவால் உயர்வோம் !!!
தமிழ் வாழ்க !!!
அறிவியலின் தேடல் தொடரும்.
வலியே " வலிமை "
- அய்யனார் (வால்வரின்)..
No comments:
Post a Comment