Pages

Monday, 2 November 2020

தமிழர்கள் அறியாத தமிழ் பற்றிய தகவல்கள்.


தமிழைப் பற்றி தமிழர்களுக்கே பல உண்மைகள் தெரியவில்லை.

தமிழே உலகில் முதல் மொழி.

மூத்த மொழி.

உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி மூல மொழி, தமிழே.

இலக்கணம், சொற்கள், எழுத்துக்கள் என அனைத்தையும் உலகிற்கு கொடுத்த மொழி தமிழே.

எபிரேயம் மொழிதான் உலகில் முதல் மூத்த மொழி என கிருத்துவர்கள் நம்புகிறார்கள்.

ஆனால், உண்மையில் தமிழின் கிளைமொழியாக தோன்றியது தான் எபிரேயம் மொழி.

எபிரேயத்தின் தாய்மொழி தமிழே.

எபிரேயத்தில் பனிரெண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சொற்களில் தமிழ் நேரிடையாகவும் திரிந்தும் கலந்துள்ளன.

எபிரேய மொழியில் எழுதப்பட்ட பழைய வேதகாமத்தில் பதினோராவது அதிகாரத்தில் ஆதாம் என்ற சொல் உள்ளது. இது தமிழ்ப் பெயர்.

கீழடி அகழ்வாய்வில் கிடைத்த பானையோட்டில் ஆதன் என்ற பெயர் உள்ளது என்பதை நினைவூட்டிக் கொள்ள வேண்டும்.

தமிழில் பைபிளில் ஏவாள் என உள்ளது.

ஆனால், எபிரேய மொழியில் எழுதப்பட்ட பழைய ஏற்பாட்டில் ஆயா என்றே உள்ளது.

ஆயா என்பதற்கு மூதாட்டி, வயதானவர் என எபிரேயத்தில் விளக்கம் உள்ளது.

தமிழில் மொழிபெயர்த்தவர், ஆயாவை ஏவாள் என மொழி பெயர்த்துள்ளார்.

பாபிலோனியம், சுமேரியம் போன்ற இலக்கிய வளம் கொண்ட மொழிகள் தமிழ் வேர்ச்சொற்களிலிருந்து உருவான மொழிகளே.

கிரேக்கம், இலத்தீன், ஜெர்மன், இத்தாலி என எல்லா மொழிகளிலும் தமிழின் தாக்கம் உண்டு. இறுதியாக தோன்றிய ஆங்கிலத்தில் ஆயிரத்து இருநூறு தமிழ்ச் சொற்கள் உள்ளன.

ஒன்றுதல் > ஒன் > ஒனி > யுனி யுனிவர்ஸ் என புரவி குறித்து தமிழிலிருந்து உருவான ஆங்கில சொல். இப்படி ஏரளமான வேர்ச்சொல் சான்றுகள் தரமுடியும்.

தமிழர்கள் உலகில் பல நாடுகளுக்கு புலம்பெயர்ந்து அங்கெல்லாம் தமிழிலே ஊர்ப் பெயர்களை வைத்துள்ளான்.

இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளில் அகம் கிராமம் என்பது கிராஹம் கிராம் என மருவியுள்ளது.

மொழி வரலாற்று ஆய்வாளர்கள், உலகிலுள்ள அனைத்தும் மொழிகளுக்கும் ஒரு பொதுவான ஒற்றுமை உள்ளதை கண்டறிந்துள்ளனர்.

ஒரு மொழியில் இருந்துதான் கிளைத்து சில மொழிகள் தோன்றி அவற்றிலிருந்து பல மொழிகள் உருவாகியிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள்.

பல இடங்களில் வெவ்வேறு மொழிகள் தோன்றியிருக்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.

புதியதாகவோ இல்லாத ஒரு சொல்லை எவராலும் உருவாக்க முடியாது. தொலைக்காட்சி என்றால் தொலைவு என்பதும் காட்சி என்பதும் ஏற்கனவே உள்ள சொல்தானே.

கைப்பேசி என்றால் கை என்பதும் பேசி என்பதும் ஏற்கனவே உள்ள பழைய சொல்லே.

உலகில் இப்போது உள்ள எல்லா மொழிகளுக்கும் ஒரு தாய்மொழி இருக்க வேண்டும்.

இதுவரை எல்லா மொழிகளுக்குமுள்ள பொதுவான ஒற்றுமைப்படுத்தும் நானூறு வேர்ச்சொற்களை கண்டறிந்துள்ளனர்.

இதில் இருநூற்று இருபதுக்கு மேல் தமிழில் உள்ளது என்பதுதான் வியப்பான செய்தி.

மொழி ஆய்வாளர்கள் ஐரோப்பியர்கள். அவர்கள் தமிழ் மொழியே முதல் மொழி என்பதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

உண்மை ஒரு நாள் உலகிற்கு வந்தே தீரும்.

No comments:

Post a Comment