நவகண்டம், அரிகண்டம் இரண்டும் தமிழகத்தில் பழங்காலத்தில் நிலவிய, ஒருவர் தன்னைத் தானே பலி கொடுத்துக் கொள்ளும் முறைகள்.
நவகண்டம் என்பது தன்னுடைய உடலில் உள்ள ஒன்பது நாளங்களையோ, ஒன்பது உடல் பாகங்களையோ கொற்றவை எனும் பெண் தெய்வத்தை நோக்கி அறுத்து தன்னையே பலி கொடுத்துக் கொள்வது. அரிகண்டம் என்பது வாளால் தலையை மட்டும் துண்டித்து தன்னை தானே பலி கொடுத்து கொள்வது.
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் முதியவர் ஒருவர் தன்னை பலி கொடுக்குமாறு தானே முன்வரும் காட்சி ஞாபகம் இருக்கிறதா? அந்த பலி முறைக்கு பெயர் தூக்குதலை.
நினைக்கவே மனதை பதைபதைக்க வைக்கும் இந்த வழக்கம் ஏன்? அதன் காரணம் என்ன?
மனித சக்திக்கு அப்பாற்பட்டவற்றை நிறைவேற்றவோ மாண்புடன் இறக்க நினைப்பவர்களோ இந்த பலிக்கு தன்னை தானே உட்படுத்தி கொள்வர்.
உதாரணமாக,
- மிகவும் பலம் மிகுந்த எதிரி நாட்டுடன் போர் புரிய நேரும் போது, வெல்வதற்கு வாய்ப்பே இல்லை என்ற தருணங்களில்
- தேற்ற இயலாத உடல்நிலையால் படுத்த படுக்கையாகக் கிடக்கும் அரசன் குணமடைய
- இறக்கும் தருவாயில் உள்ள ஒருவர் தன் கடமைகளை நிறைவேற்றும் வரை தன் இறப்பை தள்ளிப்போட
- நோய் வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் இருக்கும் ஒருவரோ மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியோ மிகுந்த அவமானத்தினால் தன் வாழ்வை முடித்துக் கொள்ள நினைப்பவரோ, அவ்வாறு சாகாமல் வீர சொர்க்கம் அடைய
என பல காரணங்களுக்காக நவகண்டம் செய்து கொள்வர்.
இவ்வாறு தன்னைத் தானே பலி கொடுத்து கொள்பவர்கள் அக்காலத்தில் வீரர்களாகப் போற்றப்பட்டனர். அது மட்டுமல்ல, அவர்களுடைய வாரிசுகள் அவர்கள் உருவங்களை "வீரர் கல்லு" எனப்படும் சிலைகளாக வடித்து தொழுது வருவதும் வழக்கமாக இருந்துள்ளது. நமக்கு இது வரை கிடைத்த மிக பழமையான வீரர் கல்லு கி.மு. 3ஆம் நூற்றாண்டை சேர்ந்தது.
அத்தகைய ஒரு சிலையின் புகைப்படம் கீழே -
No comments:
Post a Comment