Pages

Saturday, 14 November 2020

கடவுள் மறுப்பு கொள்கையினால் திருமந்திரம் போன்ற அருமையான தமிழ் நூல்களை சென்ற தலைமுறையினர் இழந்து விட்டார்களோ?

 

திருமந்திரம் போன்ற அருமையான தமிழ் நூல்களை சென்ற தலைமுறையினர் இழந்துவிட்டார்களோ என்று நீங்கள் கேட்பது விந்தையாக உல்ளது. இந்த தலைமுறையினர் திருமந்திரத்தை ஆய்ந்து அறிந்து விட்டார்களா என்ன?

கடவுள் மறுப்பு என்ற பெயரால் உருவான ஒரு கூட்டம் பல புதையல்களை கீழ் புதைத்து மேலே அமர்ந்து தமிழை காப்போம் என முழங்கி மக்களை ஏமாற்றி வருகிறது. புத்திசாலிகளைப்போல பகுத்தறிவு என்ற சொல்லுக்கே சொந்தக்காரர்களைப்போல மேடை தோரும் பேசும் கூட்டம் சற்று புத்தியைச்செலுத்தி இப்புதையல்களை படித்து ஆய்ந்திருந்தால் உலகுக்கே நாம் பல துறைகளில் வழிகாட்டியாக இருந்திருப்போம். உதாரணமாக சில உங்கள் பார்வைக்கு:

விஞ்ஞானம்:
ஜெனிவா, ஃப்ரான்ஸ் எல்லைப்பகுதியில் 27 கி.மீ சுற்றளவில் லார்ஜ் ஹாட்ரான் கொலைடர் என்ற துகள் முடக்கி சோதனைச்சாலை அமைந்துள்ளது. இதில் அணுவின் அடிப்படை துகள்களை (ப்ரோட்டான் => குவார்க் => க்ளுவான்) கட்டமைக்கும் “பரமாணு அதாவது கடவுள் துகள் Higgs boson எது? என்பதை கண்டறிய சோதனை பல ஆண்டுகளாக நடந்து வருகின்றது.

லார்ஜ் ஹாட்ரான் கொலைடரில் அணுவின் அடிப்படைத்துகளான ப்ரோட்டான்களை (நேர்மங்களை) கிட்டதட்ட ஒளியின் வேகத்தில் (வினாடிக்கு 300000கி.மீ) ஒன்றோடொன்று மோதவிட்டு, பிறகு வெளிப்படும் துகள்களில் “அணுவின் அடிப்படைத் துகள்களையே (ப்ரோட்டான் => குவார்க் => க்ளுவான்) கட்டமைக்கும் பரமாணு அதாவது கடவுள் துகள் (Higgs boson) ஏதேனும் வெளிப்படுகின்றதா என்று சோதனை செய்யப்பட்டு சமீபத்தில் அதற்க்கு வெற்றியும் கண்டனர் என்பது அனைவரும் அறிந்ததே

ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருமூலர் தன்னுடைய திருமந்திரத்தில் இது பற்றிய குறிப்பு எழுதி உள்ளார் அதை நீங்களே பாருங்கள்.

மெய்ஞ்ஞானம்:

அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு
அணுவில் அணுவை அணுக வல்லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே. - திருமந்திரம்-2008

விளக்கம்:
அணுவுக்கும் அணுவான அடிப்படைத் துகள்களை (ப்ரோட்டான் => குவார்க் => க்ளுவான்) ஆயிரம் துண்டாக்கி, அதில் ஒரு துண்டுக்குள், நுண்ணியதாக உள்ள பரமாணு நெருங்க கூடியவர்களுக்கு; பரம்பொருளை அடைதலும் கைகூடும்.

என்ன வியப்பாக உள்ளதா லட்சகணக்கான கோடிகள் செலவு செய்து இன்றைய தொழில்நுட்பத்தில் ஆய்வு செய்து கூறிய கூற்றை திருமந்திரம் என்றோ கூறிவிட்டது

மருத்துவம்:

குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
குழவியும் இரெண்டாம் அபான னெதிர்க்கில்
குழவியும் அலியாகும் கொண்டகால் ஒக்கிலே

என்கிறார் அதாவது கலவியின் போது ஆணினுடைய மூச்சு வலது பக்கமாக வெளிப்படுமெனில் குழந்தை ஆணாகப் பிறக்குமென்றும், இடப்பக்கமாக இருக்குமெனில் பெண்ணாக இருக்குமென்றும், இரண்டு மூக்கிலும் வெளிப்பட்டால் பாலியல் குறைபாடோடு பிறக்குமென்றும் குறிப்பிடுகிறார்.

மருத்துவத்தின் படி குழந்தையின் பாலை நிர்ணயிக்கும் x, y குரோமோஸோம்கள் ஆணிடத்தில் இருந்துதான் உருவாகிறது என்பது அனைவரும் அறிந்த ஒரு செய்தி. அப்படி இருக்க திருமூலரின் பாடலிலும் உண்மை உண்டென்றால் நமது தொன்மையான இலக்கியங்களுள் இருக்கின்ற நல வாழ்வு தத்துவங்களை நாம் ஏன் அறிவியல் பூர்வமாக நிறுவக்கூடாது? இன்னும் திருமந்திரத்தில் குழந்தை ஊனமாகப் பிறப்பது குறித்தும், குழந்தையின் ஆயுள் நிர்ணயிக்கும் நேரம் குறித்தும் பல கருத்துகள் உள்ளது. ஏன் அதை தெரிந்து வைத்துக் கொள்ளக்கூடாது என்பது தான் என் கருத்து

என்னை பொறுத்த வரை நம்முடைய பழைய இதிகாசங்களையும், நூல்களையும் வெறும் பயத்தோடும், பக்தியோடு மட்டும் பார்க்காமல் அறிவியல் ரீதியாக பார்த்தோமானால் இன்னும் பல விந்தைகள் வெளி வரும்

(1). இத்திருமந்திரத்தையே கிரேக்கர், எகிப்தியர், ரோமாணியர் போன்றோர் எழுதியிருந்தால் தங்களின் நிலைப்பாடு என்னவாகியிருந்திருக்கும்?

(2). ஒரு தமிழர் தமிழில் எழுதிருந்தால் அதில் அறிவியல் கருத்துக்கள் இருக்காதா?

(3). ஆன்மீகத்தில் அறிவியலும், அறிவியலில் ஆன்மீக கருத்துகளும் பிரதிபளிக்கும் நிகழ்வுகள் இருந்தால் ஏற்றுக்கொள்ளக்கூடாதா?

(4). திருமூலர் இதை நிரூபித்து எழுதினாரா? என்றால் கோட்பாட்டு இயற்பியலில் (Theoretical Physics) எதையும் அவ்வளவு சீக்கிரத்தில் அதி உயர் கணினியில் (Super Computer) கூட நிருபிக்க முடியாது என்பதே உண்மை. (எ.கா) அற்புதமான இயற்பியலாளர் ஐன்ஸ்டீன் சிறப்பு சார்பியல் கொள்கை (Special Theory of Relativity), பொது சார்பியல் கொள்கைகளை (General Theory of Relativity) சோதனை செய்து கண்டுபிடிக்கவில்லை காரண காரியங்களை வைத்தே கண்டுபிடித்தார். திருமூலர் போன்ற சித்தர்கள் மிகச்சிறந்த சிந்தனையாளர்களாக மட்டுமல்லாமல் நம்மை விட பல பல மடங்கு மூடநம்பிக்கைகளை எதிர்த்தார்கள் என்பதே உண்மை. ஆனால் அவர்கள் கூறியதை ஒரு மூடநம்பிக்கையாக பார்க்கும் நாம் தான் மூடநம்பிக்கைவாதிகள்.

                        தமிழால் இணைவோம் !!!
                         அறிவால் உயர்வோம் !!!
                                   தமிழ் வாழ்க !!!
                 அறிவியலின் தேடல் தொடரும்.
                             வலியே  " வலிமை "
                         - அய்யனார் (வால்வரின்)..


No comments:

Post a Comment