Pages

Thursday, 12 November 2020

சூரியனில் நெருப்பு இருக்கும் பொழுது ஏன் புகையவில்லை !!!


சூரியன் ஒரு நெருப்பு கோளம் தான். ஆனால் நீங்கள் நினைப்பது போல தீ பற்றிக் கொண்டு அங்கே எரிவது இல்லை.

அது ஒரு மிகப் பெரிய அணு உலை!!!

காரணம் சூரியனில் அணு இணைப்பு அல்லது அணு பிணைப்பு உண்டாகிறது.

அதாவது ஒரு டிரில்லியன் மெகா டன் வெடிப்பு சக்திற்கு இணையான சக்தி ஒரு நொடிக்கு உண்டாகிறது.

ஹைட்ரஜன் 73 சதவீதமும் ஹீலியம் 25 சதவீதமும் மற்றும் கார்பன், இரும்பு போன்றவையால் உருவானது தான் சூரியன்

உங்களுக்கு ரத்தின சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், சூரியனின் மைய பகுதியில் உள்ள அழுத்தம் காரணமாக, ஹைட்ரஜன் அணுவில் உள்ள புரோட்டான் மற்ற ஹைட்ரஜன் புரோட்டான் உடன் இணைக்கபடுகிறது. இதுவே சங்கிலி தொடராக ஏற்பட்டு இவ்வளவு ஆற்றைலை வெளிப்படுத்துகிறது.

ஆக சூரியர் புகைவது இல்லை.


No comments:

Post a Comment