Pages

Friday, 27 November 2020

தமிழ் மொழியில் பொருள் இல்லாத பெயர்களே இல்லை !!!! என்றபொழுதிலும் கரப்பான் பூச்சியின் பொருள் என்ன


உங்களின் கூற்று சரியே!

கரப்பான் பூச்சி காரணப் பெயரே..

தொல்காப்பியம் சொன்னது போல் - எல்லாச் சொல்லும் பொருள் குறிப்பன என்பதால் 'கரப்பானும்' ஆழமானப் பொருளோடு அமைந்த சொல் என்பதில் எவ்வித ஐயமும் வேண்டாம்.

கரப்பான் பூச்சிக்கு ' கரப்பு /கரப்பான்'- என்ற அறிவார்ந்த பெயரை - நம் பாட்டன் ஏன் சூட்டினான் என்பதையறிந்தால் வியப்பு மேலோங்கும்.

* கரவு - என்றால் ஒளிவு, மறைவு.
* கரவு, கரப்பு, கரத்தல் = ஒளித்தல் , மறைத்தல்
* கரப்பாக்கு = ஒளிதல் ,மறைதல்.
( secret, hidden, not evident or obvious ).

கரப்பான் பூச்சி என்றால்... இருட்டில் / இண்டு இடுக்குகளில் ஒளிந்து மறைந்து வாழும் பூச்சி.

( மறைந்து வாழும் பூச்சிகளைக் குறித்த பொதுச் சொல்லான 'Cryptozoic' - என்ற ஆங்கில வழக்கும் இதே பொருள் பட வந்ததே! ) கூகுள் செய்து பாருங்கள்!

களவு என்ற சொல்லும் கரவு தந்ததே!
கரவு > களவு(வஞ்சனை).
எண்ணத்தை '
மறைத்து' செயல்படுவதே - வஞ்சனை,திருட்டு ஆகியவை.
கரவு > களவு எனத் திரிந்தது.

* கரவணம் = சந்திரனோ , சூரியனோ மறைக்கப்படும் நிகழ்வு.
கரவணம் > கிரஹணம். (தமிழ்ச் சொல்லான கரவணம் திரிந்துதான் "கிரகணம்" ஆனது) .

 

Crypto currency, Cryptography, Cryptozoic, Crypt, Encrypt - ஆகிய ஆங்கிலச் சொற்களும்' கரப்பு' என்ற தமிழ் மூலத்திலிருந்து தோன்றியவையே!
கரவு > கரப்பு > கிரிப்டோ.

( Dictionaries mentioned that the word crypto / crypt - meaning "secret" or "hidden," used in English, from Latinized form of Greek Kruptos /kryptos "hidden, concealed, secret") .

இந்த பதிவுகளை வழங்கிய தோழர் திரு. இரவீந்திரன் சிவன் அவர்களுக்கு , மிக்க நன்றி !!!!!

             தமிழால் இணைவோம் !!!
              அறிவால் உயர்வோம் !!!
                        தமிழ் வாழ்க !!!
        அறிவியலின் தேடல் தொடரும்.
                    வலியே  " வலிமை "
        - அய்யனார் (வால்வரின்)..


No comments:

Post a Comment