பூரியில் உள்ள கோனார்க் (Konark) சூரிய கோயில் பற்றிய சுவாரசியமான தகவல்கள் யாவை?
பூரி கோனார்க் சூரிய கோவில்
- இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள இக்கோவில் கி.பி.13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
- இது முதலாம் நரசிம்ம தேவர் என்ற அரசனால் கட்டப்பட்டது.
- இக்கோவிலானது கடந்த 1984ல் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- இக்கோவில் விவஷ்வான் மந்திர் என்றும் அழைக்கப்படுகிறது.
- இது இந்தியாவில் சூரியனுக்காக அமைக்கப்பட்ட முதல் கோவில் என்ற சிறப்பும் உடையது.
- சூரியனின் ஒளி அமைப்பை உதயம், நண்பகல், மாலை என்று 3 அமைப்புகளாகக் கொண்டு சூரியனுக்கு 3 இடங்களில் கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- அதன் வகையில் அமைக்கப்பட்ட முதல் கோவில் தான் இந்த சூரியனார் கோவில்.
- கோவிலுக்குள் தூண்கள் இல்லை என்பது இதன் சிறப்பம்சம்.
- 17 ம் நூற்றாண்டில் கோவிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.
- 7 குதிரைகள் பூட்டப்பட்டு 24 சக்கரங்களைக் கொண்ட தேரில் சூரிய தேவன் எழுந்தருளியுள்ளது போல் இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
- 7 குதிரைகள் வாரத்தின் 7 நாட்களையும், 24 சக்கரங்கள் என்பது ஒரு நாளின்
- இக்கோவிலுக்கு "ப்ளாக் பக்கோடா" என்ற பெயரும் உண்டு.
- இதற்குக் காரணம் ஐரோப்பிய மாலுமிகள் இக்கோவிலை ப்ளாக் பக்கோடா என்று குறிப்பிட்டுள்ளனர்.
- ப்ளாக் பக்கோடா என்பதற்கு பிரம்மாண்டமான கருப்புக் கோவில் என்று பொருள்.
- இக்கோவிலைக் கட்டி முடிக்க நரசிம்மதேவர் சுமார் 12 ஆண்டுகளின் வரி / வருமானத்தை செலவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment