Pages

Tuesday, 10 November 2020

உலகில் சக்தி வாய்ந்த சொற்கள் என்ன

வார்த்தைகளுக்கு சக்தி உண்டா? உண்டு எனில் உங்களுக்கு தெரிந்த சக்தி வாய்ந்த வார்த்தைகளை (Powerful Words) குறிப்பிடவும்.

வார்த்தைகளுக்கு கண்டிப்பா சக்தி உண்டுன்னு நான் நம்புறேன். நம்ம அலட்சியமா சொல்லக்கூடிய வார்த்தைகள் ஒருத்தவங்க வாழ்க்கையையே மாற்றவும் முடியும். அவங்க மனசை சுக்குநூறாய் உடைக்கவும் முடியும். அதனால் நாவடக்கம் கண்டிப்பா ரொம்ப முக்கியம்.

  • ஒருத்தவங்க மன கஷ்டத்துல இருக்கும் போது அவங்க தோளில் கை வைத்து நான் இருக்கேன்னு சொல்லுறது. நீங்க அவங்களுக்கு எந்த உதவியும் செய்ய கூட வேண்டாம். அந்த வார்த்தை மட்டுமே போதுமானது.
  • டாக்டர் அவருடைய பேஷன்ட்கிட்ட சொல்ற வார்த்தை. நோய் இருந்தாலுமே டாக்டர் இல்லை, இதை குணப்படுத்திடலாம்னு சொன்னா நம்புவாங்க.
  • உன்னால செய்ய முடியாதது இந்த உலகத்துல எதுவுமே இல்லைன்னு பெற்றோர்கள் கொடுக்கும் ஊக்கம்.
  • இதெல்லாம் ஒரு பிரச்சனையா? இதுக்கு தான் மொகத்த தூக்கி வைச்சிருக்கியான்னு நண்பர்கள் கொடுக்கும் உற்சாகம்.
  • நாம நமக்கே சொல்லிக்கிற தைரியம், இதுவும் கடந்து போகும்.
  • நீங்க ரொம்ப அழகாயிருக்கீங்கன்னு போரபோக்குல யார்க்கிட்டையாவது சொல்லி பாருங்க. ஒரு சகென்ட் வெக்கப்பட்டுட்டு சிரிப்பாங்க.

நீங்க நல்லாயிருப்பீங்கன்னு சொல்லுறதுக்கும், நீங்க நல்லாயிருப்பீங்களான்னு கேக்குறதுக்கும் ஒன்னும் பெரிய வித்தியாசமில்லை. வார்த்தைகளும், சொல்லுற விதமும் தான் வேறு படுது. ஆனால் அது மற்றவர்கள் எடுத்து கொள்ளுற விதமும், அதன் தாக்கமும் தான் வார்த்தைகளை சக்தி வாய்ந்ததா மாற்றுகிறது.


No comments:

Post a Comment